நஞ்சுண்டேஸ்வரர் கோயில், எழுமகளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலவர் விமானம்

நஞ்சுண்டேஸ்வரர் கோயில், எழுமகளூரில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடிக்கு முன்பாக வலது புற சாலையில் 2 கி.மீ. தூரத்தில் பில்லூரை அடுத்து அமைந்துள்ளது. [1]

இறைவன்,இறைவி[தொகு]

கருவறையில் உள்ள மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் ஆவார். இறைவி அமிர்தநாயகி ஆவார். [1]

கோயில் அமைப்பு[தொகு]

நுழைவாயில்

இக்கோயில் மூலவர் கருவறை, இறைவி கருவறை, முன்மண்டபம், பிரகாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நுழைவாயிலை அடுத்து உள்ளே வலது புறத்தில் மூலவர் கருவறை உள்ளது. கருவறை அமைந்துள்ள மண்டபத்திற்கு முன்பாக வலது புறத்தில் விநாயகர் சன்னதியும், இடது புறத்தில் பாலமுருகன் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் சப்தகன்னியர் உள்ளனர். கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. குளத்திற்கு முன்பாக மூலவரை நோக்கிய நிலையில் நந்தியும், பலி பீடமும் உள்ளன.

நம்பிக்கை[தொகு]

கோயில் குளம்

ஏழு மகள் ஊர் என்பது திரிந்து எழுமகளூர் என்றாகியுள்ளது. மகிஷாசுரனை அழித்த பாவம் தீர சப்தகன்னிகள் இறைவனை வணங்கிய பெருமையுடைய தலமாகும். இத்தலத்தின் மண் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இறைவன் நஞ்சையே மருந்தாக்கியதால் குளத்து நீரில் குளித்துவிட்டு இறைவனை வழிபட்டு மண்ணைப் பூசிக்கொண்டால் ரத்தம் தொடர்பான வியாதிகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]