நஞ்சுகளின் அரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஞ்சுகளின் அரசி
நஞ்சுகளின் அரசி செடி

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : அக்கோனிட்டம் நெபெல்ஸ் Aconitum napellus

குடும்பம் : ரனன்கு லேசியீ (Ranunculaceae )

அக்கோனிட்டம் நெபெல்ஸ்

இதரப் பெயர்[தொகு]

  • Monkshood

செடியின் அமைவு[தொகு]

இச்செடி 3-4 அடி உயரம் வளரக்கூடியது. தண்டு நீண்டு இருக்கும். இலைகள் பிளந்து போய் சிறு பிரிவுகள் கொண்டிருக்கும். இச்செடியில் ஊதாநிறப்பூக்கள் வருகின்றன.

செடியின் நச்சுத்தன்மை[தொகு]

இச்செடியில் நச்சுத்திறம் வாய்ந்த ஆல்காலாயிடுகள் உள்ளன. இச்செடியிலிருந்துதான் அம்புகளின் நுனியில் தடவக்கூடிய சிறந்த நஞ்சு தயாரிக்கப்படுகிறது. இதன் வேரில் இருக்கும் அக்கோனிட்டைகள் என்ற நச்சுப் பொருள்தான் இதன் சக்திக்கு காரணம் ஆகும். இதில் மிக மிக கொடிய நஞ்சு உள்ளது. ஆகையால் இதை நஞ்சுகளின் அரசி என்று அழைக்கிறார்கள். இச்செடிகள் அமெரிக்காவில் கால்நடைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இது அமெரிக்கா, இந்தியாவின் இமயமலைப்பகுதியில் வளர்கிறது. இவற்றில் 18 சாதிச்செடிகள் உள்ளன. அக்கோனிட்டம் பெரக்ஸ் என்கிற செடியின் சாறு நாவில் பட்டால் 18 மணிநேரத்திற்கு நாக்கு மரத்துப்போய் விடுகிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001 [1]

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சுகளின்_அரசி&oldid=3837875" இலிருந்து மீள்விக்கப்பட்டது