நஜ்மா பர்வீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஜ்மா பர்வீன்
Najma Parveen
தனிநபர் தகவல்
பிறப்பு20 திசம்பர் 1990 (1990-12-20) (அகவை 33)
பாக்கித்தான்
உயரம்5 அடி 5 அங் (1.65 m)
எடை56 கிலோகிராம்கள் (123 lb)
விளையாட்டு
நாடு பாக்கித்தான்
விளையாட்டுதடகள வீராங்கனை
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
பதக்கத் தகவல்கள்
வீராங்கனை-தடகள விளையாட்டு
நாடு  பாக்கித்தான்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 காத்மண்ட் 400 மீ தடையோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 காத்மண்ட் 200 மீ ஓட்டப்பந்தையம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 காத்மண்ட் 4×400 மீ தொடரோட்டம்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 காத்மண்ட் 4×100 மீ தடையோட்டம்

நஜ்மா பர்வீன் (Najma Parveen)(பிறப்பு 20 டிசம்பர் 1990) என்பவர் பாக்கித்தானிய விரைவோட்ட வீராங்கனை ஆவார். இவர் 2016 மற்றும் 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் பாக்கித்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். சூலை 2021 நிலவரப்படி, இவர் 200 மீ, 400 மீ மற்றும் 400 மீ தடை ஓட்டங்களில் தேசிய சாதனை படைத்தவர் ஆவார்.

தொழில்[தொகு]

பர்வீன் நாட்டின் சாதனை விளையாட்டு வீரர்களின் ஒருவராக உள்ளார்.[1]

தேசிய போட்டிகள்[தொகு]

பர்வீன் அனைத்து தேசிய போட்டிகளிலும் பாக்கித்தானின் தண்ணீர் மற்றும் சக்தி மேம்பாட்டு முகமையினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2019ல் பெசாவரில் நடந்த 33வது தேசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் விரைவோட்டத்தில்ல் புதிய சாதனையை நிகழ்த்தினார். ஒரு மாதம் கழித்து இவர் நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் இதை மீண்டும் முறியடித்து சாதனைப் படைத்தார்.

பன்னாட்டு போட்டிகள்[தொகு]

பர்வீன் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இதில் இவர் 26.11 வினாடிகளில் கடந்தார். எனவே அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.[2][3] 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் இதே நிகழ்வில் இவர் போட்டியிட்டார். பருவத்தில் சிறந்ததாக இருந்தாலும், தனது தகுதிச்சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்தார்.

தேசிய சாதனைகள்[தொகு]

நிகழ்வு நேரம் போட்டி தேதி
200 மீ 23.86[4] 33வது தேசிய விளையாட்டு, பெசாவர் 2019
23.69[5] 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி, காத்மாண்டு, நேபாளம் டிசம்பர் 2019
400 மீ 53.63[4] 33வது தேசிய விளையாட்டு, பெசாவர் 2019
400 மீ தடை ஓட்டம் 1:01.41[4] 33வது தேசிய விளையாட்டு, பெசாவர் 2019

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pakistan Sports Board, Islamabad". sports.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  2. "Najima Parveen". Rio 2016. Archived from the original on August 6, 2016. பார்க்கப்பட்ட நாள் September 3, 2016.
  3. "Women's 200m - Standings". Rio 2016. Archived from the original on August 18, 2016. பார்க்கப்பட்ட நாள் September 3, 2016.
  4. 4.0 4.1 4.2 "National Games 2019". nationalgames2019.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  5. "Athletics Federation of Pakistan". www.afp.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.

வெளி இணைப்புகள்[தொகு]

  • பாக்கித்தான் விளையாட்டு வாரியத்தின் சுயவிவரம் (அதிகாரப்பூர்வ இணையதளம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜ்மா_பர்வீன்&oldid=3685109" இலிருந்து மீள்விக்கப்பட்டது