நஜ்மா அப்சல் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஜ்மா அப்சல் கான்
Najma Afzal Khan MPA
உறுப்பினர்-பாக்கித்தான் பஞ்சாப் மாநில சட்டமன்றம்
பதவியில்
29 மே 2013 – 31 மே 2018
தொகுதிபெண்களுக்கானது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1950 (1950-10-01) (அகவை 73)
பைசலாபாத்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் தேசிய முஸ்லீம் லீக்
துணைவர்இராணா அப்சல் கான்

நஜ்மா அப்சல் கான் (ஆங்கிலம்: Najma Afzal Khan; உருது: نجمہ افضل خان; பிறப்பு 1 அக்டோபர் 1950) என்பவர் பாக்கித்தானிய அரசியல்வாதி, மருத்துவர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் மே 2013 முதல் மே 2018 வரை பஞ்சாப் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஏழ்மையான இளைஞர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வருகிறார், அப்சல் கான்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நஜ்மா அப்சல் கான், 1 அக்டோபர் 1950-ல் பைசலாபாத்தில் பிறந்தார்.[1]

அப்சல் கான் 1976-ல் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியலுக்கான இலியாகத் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவை சிகிச்சை பட்டம் பெற்றார்.[1]

மருத்துவ மற்றும் வணிக வாழ்க்கை[தொகு]

கான் தனது கணவர் ராணா அப்சல் கானுடன் சுகாதார, எரிசக்தி, உற்பத்தி மற்றும் வீட்டுமனை விற்பனை நிறுவனமான சாகில் குழுமத்தைத் தோற்றுவித்தனர். பைசலாபாத்தில் சாகில் மருத்துவமனையை நிறுவினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

கான் 2013 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் தேசிய முஸ்லிம் லீக் வேட்பாளராகப் பஞ்சாப் மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

கான் அபாசி அமைச்சரவையில் நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சருமான ராணா அப்சல் கானை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

கான் தனது மருத்துவ மற்றும் சேவைப் பணிகளுக்காக 50க்கு மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Punjab Assembly". www.pap.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
  2. "PML-N secures maximum number of reserved seats in NA". https://www.pakistantoday.com.pk/2013/05/28/pml-n-secures-maximum-number-of-reserved-seats-in-na/. பார்த்த நாள்: 6 February 2018. 
  3. "2013 election women seat notification" (PDF). ECP. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜ்மா_அப்சல்_கான்&oldid=3684902" இலிருந்து மீள்விக்கப்பட்டது