நச்சுப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டுப் பூனையின் நான்கு நச்சு பற்கள் அல்லது கோரைப் பற்கள். (பற்களின் மேல் மற்றும் கீழ் வரிசைகளின் மிகப்பெரிய இரண்டு பற்கள்)

நச்சுப்பல் (Fang) என்பது நீண்ட, கூர்மையான பல் ஆகும்.[1]

விளக்கம்[தொகு]

நச்சுப்பல் என்பது நீண்ட, கூர்மையான பல் ஆகும்.[2] இது பாலூட்டிகளில் நச்சுப்பல் என்பது மாற்றியமைக்கப்பட்ட மேல் கோரைப் பல் ஆகும். கோரைப் பற்கள் சதையைக் கடிக்கவும் கிழிக்கவும் பயன்படுகிறது. பாம்புகளில், நச்சுப்பல், நச்சு சுரப்பியுடன் தொடர்புடைய ஒரு சிறப்புப் பல் ஆகும் (பாம்பு நச்சு பார்க்கவும்).[3] சிலந்திகளில் நகக்கொம்புகளின் பகுதியாக இந்த நச்சுப்பல் வெளிப்புறப் பற்களாக உள்ளன.

மாமிச உண்ணிகளிலும் அனைத்துண்ணிகளிலும் கோரைப்பற்கள் மிகவும் பொதுவானவை. ஆனால் பழந்திண்ணி வௌவால்கள் போன்ற சில தாவர உண்ணிகளிலும் இவை காணப்படுகின்றன. பெரிய பூனைகள் போன்ற இரையைப் பிடிக்க அல்லது விலங்குகளை விரைவாகக் கொல்ல/செயலிழக்க இவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கரடி போன்ற அனைத்துண்ணிகள், மீன் அல்லது பிற இரைகளை வேட்டையாடும்போது கோரைப் பற்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவை பழங்கள் போன்ற உணவை உண்ணத் தேவையில்லை. சில குரங்குகளுக்கும் நச்சுப்பல் உள்ளது. இவை பிற உயிரிகளை அச்சுறுத்தவும் சண்டையிடவும் பயன்படுத்துகின்றன. இருப்பினும், மனிதர்களின் குட்டையான கோரைப் பற்கள் விசப்பற்களாகக் கருதப்படுவதில்லை.

மதம் மற்றும் புராணங்களில் விசப்பற்கள்[தொகு]

டிராகன், கார்கோயல்கள் மற்றும் இயக்கர் போன்ற புராண மற்றும் இதிகாச உயிரினங்கள் நச்சுப்பற்களுடன் சித்தரிக்கப்படுகின்றன. வாம்பையரை வரையறுக்கும் பண்பாக விசப்பல் உள்ளது.

சில இந்து தெய்வங்களின் உருவப் பிரதிநிதித்துவம், வேட்டையாடுதல், கொல்லும் திறனைக் குறித்தல் போன்றவற்றினை இந்த விசப்பற்கள் குறிக்கின்றன. உதாரணமாகக் கடுமையான போர்வீரராக வழிபடப்படும் தெய்வமான சாமுண்டி. மரணத்தின் கடவுளான எமன். சீனா மற்றும் கிழக்கு ஆசியாவில் பௌத்தம் வெருபக்ஷா நம்பிக்கைகளில் பாலினீசும் இந்து சமயத்தில் விசப்பற்களுடன் காணப்படுபவை.[4]

காட்டேரி நச்சு பற்களுடன் ஹாலோவீன் ஆடை அணிபவர்
நச்சு பற்களை கொண்ட இந்து மத அழிக்கும் கடவுள் எமன்
இந்து மத காவல் தெய்வம் சாமுண்டி .
"ஹுகின்" என்ற கப்பலில் உள்ள டிராகன் தலை
பாம்புப் பற்கள்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fang - Definition of Fang by Merriam-Webster".
  2. "Fang - Definition of Fang by Merriam-Webster".
  3. Vonk, Freek J.; Admiraal, Jeroen F.; Jackson, Kate; Reshef, Ram; de Bakker, Merijn A. G.; Vanderschoot, Kim; van den Berge, Iris; van Atten, Marit et al. (July 2008). "Evolutionary origin and development of snake fangs". Nature 454 (7204): 630–633. doi:10.1038/nature07178. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:18668106. Bibcode: 2008Natur.454..630V. 
  4. "Rangda - Asian Art Museum". Archived from the original on 24 October 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சுப்பல்&oldid=3453435" இலிருந்து மீள்விக்கப்பட்டது