நசையர் எரிட்ரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நசையர் எரிட்ரியா அல்லது எரிட்ரியன் ஏர்லைன்ஸ் (சுருக்கமாக எரிட்ரியன் என்று அழைக்கப்படுவதுண்டு) என்பது எரிட்ரியா நாட்டின் தேசிய விமானச் சேவையாகும்.[1] இது அசுமாரா பன்னாட்டு வானூர்தி நிலையத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த வானூர்திச் சேவை, முற்றிலும் எரிட்ரியா நாட்டு அரசுக்குச் சொந்தமானது.[2] திட்டமிடப்பட்ட சேவைகள் 2008-ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில ஹஜ் வானூர்திகள் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது.[2] 2011-ம் ஆண்டு புதிய மேலாண்மை இந்த விமானச் சேவையினை மீளக்கொணர்ந்தது. 2011-ம் ஆண்டில் நசையர் எனும் தனியார் நிறுவனம் அரசுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. அதுவரை எரிட்ரியன் என்றிருந்த விமானச் சேவையின் பெயர், அதன் பின்பு நசையர் எரிட்ரியா என்று மாற்றம் பெற்றது.[3]

ஐரோப்பிய யூனியன் பகுதிகளில் எரிட்ரியன் ஏர்லைன்ஸ் பறப்பதற்கு ஐரோப்பிய குழு தடை விதித்துள்ளது. இந்த தடை டிசம்பர் 2012 முதல் அமலில் இருந்து வருகிறது.

வரலாறு[தொகு]

எரிட்ரியன் வானூர்திச் சேவை பெயரளவில் மட்டும் மே 1991-ல் உருவாக்கப்பட்டது.[4] ஆரம்பத்தில் அசுமாரா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரையில் கையாளும் பணிகளுக்கான உதவிகளில் ஈடுபட்டது. இது அசாப் மற்றும் மாசாவா பகுதிகளிலும் தொடர்ந்தது. அதே நேரத்தில், எரிட்ரியாவிற்கு வரும் பிற முக்கிய வானூர்திச் சேவைகளுக்கு விற்பனை முகவராகவும் பணியாற்றியது. மே 2002-ல், இது வானூர்திச் சேவையினை செயல்படுத்தப்போவதாக முடிவு செய்தது. ஏப்ரல் 2003-ல், முந்தைய எகிப்து ஏர் நிறுவனத்திலிருந்து 14 ஆண்டுகள் வயதான போயிங்க் 767–300ஈஆர் குத்தகைக்கு எடுக்கப்பட்டு எரிட்ரியன் வானூர்திச் சேவையின் தொடக்க செயல்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் தனது முதல் வானூர்திச் சேவையினை அஸ்மாரா முதல் ஆம்ஸ்டெர்டேம் வரை செயல்படுத்தியது.[5] இதன் இரண்டாம் வானூர்தியாக போயிங்க் நிறுவனத்தின் 767 – 200 ஈஆர் ரக வானூர்தி 2004 ஆம் ஆண்டின் மத்தியில் வாங்கப்பட்டது. இதன் மதிப்பு 5.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

முதன் முதலில் குத்தகைக்கு வாங்கிய போயிங்க் நிறுவனத்தின் வானூர்தி ஏர்பஸ் 320 ரக வானூர்தியினால் 2006 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. அதன் பின்னர் மறுபடியும் 2007 ஆம் ஆண்டில் இது போயிங்க் 757 ரக வானூர்தியினால் மாற்றப்பட்டது. மறுபடியும் இது டிசி – 9 ரக வானூர்தியினால் 2007 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டு பின்னர் எம்டி – 83 ரக வானூர்தியினால் மாற்றப்பட்டது.

ஏப்ரல் 2003 இல் எரிட்ரியன் வானூர்திச் சேவை, அஸ்மாரா – ஃப்ராங்க்ஃபுர்ட் மற்றும் மிலன் – நைரோபி - ரோம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட வானூர்திச் சேவையில் தடம்பதித்தது.[4] 2004 ஆம் ஆண்டில், ஆம்ஸ்டெர்டேம் பகுதியினை தனது மற்றொரு இலக்காக ஏற்றது. பின்னர் 2005 ஆம் ஆண்டில், ட்ஜிபௌடி மற்றும் துபாய் ஆகிய பகுதிகளுக்கு வானூர்திச் சேவையினை நீட்டித்து, அதேநேரத்தில் நைரோபி பகுதிக்கான பாதையினை நீக்கியது.

இலக்குகள்[தொகு]

பிப்ரவரி 2015 இன் படி, எரிட்ரியன் ஏர்லைன்ஸ் பின்வரும் இலக்குகளைக் கொண்டுள்ளது.[6]

நாடு நகரம் விமான

நிலையம்

குறிப்புகள்
எகிப்து கைரோ கைரோ

சர்வதேச விமான நிலையம்

எரிட்ரியா அஸ்மாரா அஸ்மாரா

சர்வதேச விமான நிலையம்

தலைமையகம்
எரிட்ரியா மாஸாவா மாஸாவா

சர்வதேச விமான நிலையம்

முடிந்தது
ஜெர்மனி ஃப்ராங்க்ஃபர்ட் ஃப்ராங்க்ஃபர்ட்

விமான நிலையம்

முடிந்தது
இத்தாலில் ரோம் லியார்னடோ

டா வின்ஸி - ஃபியுமிசினோ விமான நிலையம்

முடிந்தது
கென்யா நைரோபி ஜோமோ

கென்யாட்டா சர்வதேச விமான நிலையம்

முடிந்தது
நைஜீரியா லகோஸ் முர்டாலா

முஹமத் சர்வதேச விமான நிலையம்

முடிந்தது
பாகிஸ்தான் கராச்சி ஜின்னாஹ்

சர்வதேச விமான நிலையம்

முடிந்தது
பாகிஸ்தான் லாகூர் அல்லாமா

இக்பால் சர்வதேச விமான நிலையம்

சவுதி

அரேபியா

ஜெட்டாஹ் கிங்க்

அப்துலாஸிஸ் சர்வதேச விமான நிலையம்

முடிந்தது
தென்னாப்பிரிக்கா கேப்

டவுன்

கேப்

டவுன் சர்வதேச விமான நிலையம்

முடிந்தது
தென்னாப்பிரிக்கா ஜேஹன்ஸ்பர்க் ஓர்

டம்போ சர்வதேச விமான நிலையம்

முடிந்தது
சூடான் கார்டௌன்ம் கார்டௌம்

சர்வதேச விமான நிலையம்

சூடான் போர்ட்

சூடான்

போர்ட்

சூடான் புது சர்வதேச விமான நிலையம்

யுனைடெட்

அரபு எமிரேட்ஸ்

துபாய் துபாய்

சர்வதேச விமான நிலையம்

விமானக் குழு[தொகு]

ஜூன் 2015 இன் படி, எரிட்ரியன் ஏர்லைன்ஸ் பின்வரும் விமானங்களை தனது விமானக் குழுவில் கொண்டுள்ளது.[7]

  1. போயிங்க் 737 – 300 – ஒரு விமானம்
  2. போயிங்க் 767 – 200ஈஆர் – ஒரு விமானம்

இவை தவிர எரிட்ரியன் ஏர்லைன்ஸ் ஆறு டோர்னியர் விமானங்களையும் கொண்டுள்ளது.[8]

வரலாற்று விமானக் குழு[தொகு]

எரிட்ரியன் விமானக் குழு பின்வரும் விமான ரகங்களை வரலாற்று விமானக் குழுவாகக் கொண்டுள்ளது.[9]

  1. ஏர்பஸ் ஏ319 – 100
  2. ஏர்பஸ் ஏ320 – 200[10]
  3. போயிங்க் 757 – 200
  4. போயிங்க் 767 – 300 ஈஆர்
  5. மெக்டொனல் டௌக்ளஸ் எம்டி – 80

உயர்தர வழித்தடங்கள்[தொகு]

எரிட்ரியன் ஏர்லைன்ஸ் அஸ்மாரா – துபாய், அஸ்மாரா – ஜெட்டாஹ், துபாய் – அஸ்மாரா மற்றும் அஸ்மாரா – கார்டௌம் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு வாரத்திற்கு முறையே 3, 3, 3 மற்றும் 1 விமானங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானச் சேவைகளில் அஸ்மாரா – கார்டௌம், துபாய் – அஸ்மாரா மற்றும் துபாய் – அஸ்மாரா வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Juma, Victor (27 செப்டம்பர் 2011). "Kenya: KQ and Eritrea Airlines Set for Turf War Over the Nairobi-Asmara Route". Business Daily (Kenya). AllAfrica.com இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402175603/http://www.webcitation.org/6EXEWWb0R. 
  2. 2.0 2.1 "Profile on Eritrean Airlines". Centre for Aviation இம் மூலத்தில் இருந்து 2012-10-09 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6BGxLm7oQ?url=http://centreforaviation.com/profiles/airlines/eritrean-airlines-b8. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  3. "Nasair Merges With Eritrean Airlines". http://www.tesfanews.net/archives/1775. 
  4. 4.0 4.1 "Eritrean Airlines Takes Off Next Month". AllAfrica.com. 24 மார்ச் 2003 இம் மூலத்தில் இருந்து 2013-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6EXDQc3mo?url=http://allafrica.com/stories/200303240177.html. 
  5. "African airlines add 767s for European flights". Flightglobal. 6 மே 2003. http://www.flightglobal.com/news/articles/african-airlines-add-767s-for-european-flights-165054/. 
  6. "Eritrean Airlines Destinations". cleartrip.com. http://www.cleartrip.com/flight-booking/eritrean-airlines.html. பார்த்த நாள்: 2015-08-19. 
  7. "Eritrean Airlines Fleet". ch-aviation GmbH. http://www.ch-aviation.com/portal/aircraft/search?search=1&cha=B8.  
  8. "Revival of the Eritrean Airlines". Shabait.com. 22 சூலை 2011 இம் மூலத்தில் இருந்து 2018-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180719203518/http://www.shabait.com/articles/q-a-a/6412-revival-of-the-eritrean-airlines. பார்த்த நாள்: 30 ஏப்ரல் 2012. 
  9. "SubFleets for: Eritrean Airlines". AeroTransport Data Bank. 18 சூன் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6HTjKw7D2?url=http://www.aerotransport.org/php/go.php?query=operator. 
  10. "Eritrean Airlines Fleet". ch-aviation GmbH. http://www.ch-aviation.ch/portal/aircraft/search?search=1&cha=B8.  
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசையர்_எரிட்ரியா&oldid=3577594" இருந்து மீள்விக்கப்பட்டது