உள்ளடக்கத்துக்குச் செல்

நசுரின் ஓரியகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசுரின் ஓரியகில்
Nasrin Oryakhil
نسرین اوریاخیل
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1964
காபுல், ஆப்கானித்தான்

நசுரின் ஓரியகில் (2007) ஆப்கானித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் அமைச்சராவார். மகளிர் மருத்துவத்திலும் மகப்பேறியல் மருத்துவத்திலும் இவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். தனது பணிக்காக நசுரின் பல விருதுகளை வென்றார். 2015 ஆம் ஆண்டு நாட்டுக்கு அமைச்சராகவும் ஆனார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

நசுரின் ஒரியகில் 1964 ஆம் ஆண்டு காபூலில் பிறந்தார். [1]

தொழில்

[தொகு]

தாய்வழி சுகாதாரத் துறையில் ஒரு முக்கியத் தலைவரான டாக்டர். நசுரின் ஓரியகில் மகளிர் மற்றும் மகப்பேறியல் மருத்துவராகவும், 2004 ஆம் ஆண்டு முதல் காபூலில் உள்ள மலாலை மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநராகவும் பணியாற்றினார். கிராமப்புற பெண்கள் உட்பட பெண்களுக்கு அவசர மகப்பேறியல் பராமரிப்பை வழங்குவதைத் தவிர மருத்துவ சிக்கல்களால் காபூலுக்கு வந்த டாக்டர் நசுரின், ஆப்கானித்தானில் மகப்பேறு பிசுட்டுலா பழுதுபார்க்கும் முதல் மையமான மலாலை மகப்பேறு மருத்துவமனையில் நிறுவினார்.பிசுடுலா என்பது உடற்கூறியலில் இரத்த நாளங்கள், குடல்கள் அல்லது மற்ற வெற்று உறுப்புகள் போன்ற இரண்டு வெற்று இடங்களுக்கு இடையேயான ஒரு அசாதாரண இணைப்பு ஆகும். நசுரின் ஆப்கானித்தானில் மருத்துவத் தொழில்களில் பெண்களின் பங்கை வலுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். இவர் மருத்துவச்சிகளின் அத்தியாவசியப் பாத்திரத்தின் அங்கீகாரத்தை அதிகரித்துள்ளார் மற்றும் ஆப்கான் மருத்துவச்சிகள் சங்கத்தை நிறுவுவதை ஆதரித்தார்.[2]

அரசு சாரா நிறுவனமான ஆப்கான் குடும்ப சுகாதார சங்கத்தின் தலைவராக இருந்தார். இச்சங்கம் தற்போது புதுமையான இனப்பெருக்க சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு தங்குமிடம் வழங்குகிறது. மேலும் மாணவர்களிடையே இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வை அதிகரிக்க உயர்நிலைப் பள்ளிகளில் வெளி அமர்வுகளை நடத்துகிறது. இவர் ஆப்கானித்தான் மகளிர் வலையமைப்பின் செயல் உறுப்பினராக உள்ளார். பல முறை பாராளுமன்றத்தில் பேசினார். தொழில்முறை மருத்துவ மாநாடுகளில் உரையை வழங்கியுள்ளார். ஆப்கானித்தானில் ஒரு மருத்துவ மன்றத்தை நிறுவும் பணிக்குழு உறுப்பினராக உள்ளார்.[3] [4]

அரசியல்

[தொகு]

2015 ஆம் ஆண்டில் இவர் ஆப்கானித்தானின் தொழிலாளர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [1] அசுரப் கானியின் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் கடைசியாக சேர்க்கப்பட்ட பதினாறு சேர்த்தல்களில் இவர் நான்கு பெண்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் மற்ற வேட்பாளர்கள் திரும்பப் பெற வேண்டியிருந்தது. இந்த கடைசி சேர்த்தல்கள் இரட்டை தேசியம் கொண்டதாக இல்லை. [5] 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று ஆப்கான் பாராளுமன்றத்தால் இவர் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டார். [6]

விருதுகள்

[தொகு]

ஆப்கானித்தானில் தாய்வழி சுகாதாரத் துறையில் முக்கியத் தலைவரான மருத்துவர் நசுரின் ஓரியகில், மதிப்புமிக்க சர்வதேச தைரியமான பெண்கள் விருதுக்கு அமெரிக்காவால் தேர்வு செய்யப்பட்டார். வாசிங்டனில் உள்ள மாநிலத் துறையில் நடந்த விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற பத்து வெற்றியாளர்களில் மருத்துவர் நசுரினும் ஒருவராவார்.

பிஜி நாட்டைச் சேர்ந்த ரோசிகா தியோ, சியார்ச்சியாவைச் சேர்ந்த பிசப் உருசுடன் கோட்சிரிட்சே, குவாட்டமாலாவைச் சேர்ந்த ஐரிசு யாசுமின் பேரியோசு அகிலார், இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி, மாலியைச் சேர்ந்த பாத்திமாடா டூரே, சவுதி அரேபியாவைச் சேர்ந்த மகா அல் முனீப், தயிக்கிசுதானைச் சேர்ந்த ஒயினிகோல் போபோனசரோவா, உக்ரைனைச் சேர்ந்த ருசுலானா லியிசிச்கோ மற்றும் சிம்பாப்வேயைச் சேர்ந்த பீட்ரைசு மெடெத்வா ஆகியோர் நசுரினுடன் 2014 ஆம் ஆண்டிற்காக இவ்விருது வென்ற மற்ற ஒன்பது நபர்களாவர். [7] [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nasrin Oryakhil பரணிடப்பட்டது 2018-10-24 at the வந்தவழி இயந்திரம், Molsamd.gov, Retrieved 17 July 2016
  2. "Dr. Nasrin Oryakhil receives International Women of Courage Award". khaama.com. 5 March 2014.
  3. 3.0 3.1 "Bios of 2014 Award Winners". state.gov. Archived from the original on 2014-03-07. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link). state.gov. Archived from the original on 2014-03-07.
  4. "US Honors Afghan Doctor as an International Woman of Courage". feminist.org. 6 March 2014.
  5. Afghan cabinet nearly complete after months of delay, April 2015, BBC, Retrieved 17 July 2016
  6. "Afghan Parliament Unseats Foreign Minister, 2 Other Cabinet Members".
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-12. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசுரின்_ஓரியகில்&oldid=3587304" இலிருந்து மீள்விக்கப்பட்டது