நசிரா அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசிரா அக்தர்

நசிரா அக்தர் (Nasira Akhter) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலம் குல்காம் நகரத்தைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர் ஆவார். 1972 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார்.[1][2] பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இவர் மூலிகைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.[1] காசுமீர் பல்கலைக் கழக அறிவியல் கருவி மையத்தில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலித்தீன் மக்கும் தன்மையை உருவாக்குவதற்கான வழிமுறையை உருவாக்கினார்.[3] 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்படாத ஒரு மூலிகையைப் பயன்படுத்தி இதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். [4] நசிரா அக்தரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பன்னாட்டு மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி புரசுகார் எனப்படும் பெண் சக்தி விருதைப் பெற்றார்.[3] குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நசிரா அக்தருடன் சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, இயற்கை விவசாயியும் பழங்குடியின செயற்பாட்டாளருமான உஷா பென் தினேசுபாய் வாசவா, இன்டெல் -இண்டியா நிறுவன தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய், மாற்றுத்திறளாளி கதக் நடனக் கலைஞர் சைலி நந்தகிசோர், கணிதவியல் அறிஞர் நீனா குப்தா உள்ளிட்டோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bhat, Tahir (8 March 2022). "Kashmir Woman Honoured For Landmark Innovation". Kashmir Life. https://kashmirlife.net/kashmir-woman-honoured-for-landmark-innovation-288010/. 
  2. "FIRST INDIAN WOMAN TO CONVERT POLYTHENE TO ASHES". Asia Book of Records. 25 September 2020. 9 March 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 28 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle Magazine. https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/. 
  4. Khan, M. Aamir (10 March 2022). "`Unsung heroes': Meet J&K women who received ‘Nari Shakti’ award from President - The Kashmir Monitor". Kashmir Monitor. https://www.thekashmirmonitor.net/unsung-heroes-meet-jk-women-who-received-nari-shakti-award-from-president/. 
  5. "சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 29 பெண்களுக்கு குடியரசு தலைவர் விருது". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/india/775446-presidential-award-for-29-women.html. பார்த்த நாள்: 29 April 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிரா_அக்தர்&oldid=3536593" இருந்து மீள்விக்கப்பட்டது