நசார் அல் பஹர்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசார் அல் பஹர்னா
பிறப்பு1950
தேசியம்பஹ்ரைன்
படித்த கல்வி நிறுவனங்கள்வேல்ஸ் பல்கலைக்கழகம், சவூதி அரேபியா பெட்ரோலியம் மற்றும் கனிமம் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபஹ்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர்

நசார் அல் பஹர்னா (அரபு : نزار البحارنة ; ஆங்கிலம்: Nazar Al Baharna) ஓர் பஹ்ரைன் கல்வியாளர், தொழில்முனைவோர் மற்றும் அரசியல்வாதி ஆவார். [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நசார் 1950 ஆம் ஆண்டு பிறந்தார். [2] இவர் சவூதி அரேபியாவில் உள்ள பெட்ரோலியம் மற்றும் கனிமம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். [3] இவர் அங்கு இயந்திர பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார். இவர் 1979 ஆம் ஆண்டில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலில் ஆய்வு பட்டம் பெற்றார்.

பணிகள்[தொகு]

இவர் டாக்டர் பட்டம் பெற்ற உடனேயே வளைகுடா தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் துறைத் தலைவர் பதவியைப் பெற்றார். [4] பின்னர் இவர் 1995 வரை பஹ்ரைன் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றினார். இவர் கடைசியாக வகித்த கல்விப் பதவி பஹ்ரைன் பல்கலைக்கழகத்தில் கல்வித் திட்டங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்கான துணைத் தலைவராக இருந்தார். [2] கல்வி துறையை விட்டு வெளியேறிய பின்னர் பஹ்ரைனில் ஒரு ஆலோசனை நிறுவனத்தை நிறுவினார். இவர் அல் வெஃபாக் தேசிய இஸ்லாமிய சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டில் இந்த சங்ககத்தை விட்டுச் வெளியேறினார்.[5] பிறகு ஒரு வருடம் கழித்து இவர் மீண்டும் அந்த சங்கத்தில் சேர்ந்தார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் இவர் பஹ்ரைன் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் துணைத் தலைவரானார்.

இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று பஹ்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். [5] இவர் இந்த பதவியில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீடித்தார். [6] பின்னர் இவர் தனது நிறுவனமான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் தலைவராக பணிக்குத் திரும்பினார். [2] ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் அறிஞர் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். [3] இமான் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

2013 ஆம் ஆண்டில், இவர் ஏ யுனிவர்சல் ஹுமன் ரைட்ஸ் மாடல் என்ற புத்தகத்தை வெளியிட்டார். [1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசார்_அல்_பஹர்னா&oldid=3613938" இருந்து மீள்விக்கப்பட்டது