பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெண் என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண் பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது.

தாவரங்களிலும் விலங்குகளிலும் பெண் என்னும் சொல்[தொகு]

பெண் பனை, ஆண் பனை என்று தாவரங்களிலும், பெண் யானை (பிடி) ஆண் யானை (களிறு) என்று விலங்குகளிலும் பெண் என்னும் சொல் பெண் பாலைக் குறிக்கப் பயன்படுகின்றது.

வயது வேறுபாடு இல்லா சொற்கள்[தொகு]

மனித இனத்திலும், பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொற்கள் வயது வேறுபாடு இன்றி எல்லாப் பெண்களையும் குறிப்பதையும் கவனிக்கலாம். எனினும் பொது வழக்கில் பெண் எனும்போது அது வளர்ச்சியடைந்த மனித இனத்துப் பெண்பாலாரையே பெரும்பாலும் குறிக்கும். இக் கட்டுரை அப்பொருளிலேயே எழுதப்பட்டுள்ளது.

பாட்டியும் பெயர்த்தியும்

வயதும் பெண்களைக் குறிக்கும் சொற்களும்[தொகு]

தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன. தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை.

  1. 0 - 12 வயதுப் பெண் - பேதை.
  2. 12 - 24 வயதுப் பெண் - பெதும்பை.
  3. 24 - 36 வயதுப் பெண் - மங்கை.
  4. 36 - 48 வயதுப் பெண் - மடந்தை.
  5. 48 - 60 வயதுப் பெண் - அரிவை.
  6. 60 - 72 வயதுப் பெண் - தெரிவை.
  7. 72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண்.

இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.

சங்க காலத்தில் பெண்ணின் பருவங்களுக்குரிய வயது கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டது.

1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது


'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப் பாற்படு மகளிர் பருவக் காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’  - பன். பாட். 220

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’  ’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’  ’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும்.’  ’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’  ’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’  ’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’  ’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36) பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’  ’’ 227

நிலைகள் --- சிறுமி-கன்னி-பெண்[தொகு]

இவை தவிர சிறுவயதுப் பெண்ணைப் பொதுவாகச் சிறுமி என்றும், திருமணம் ஆகாத பெண்களைக் கன்னி என்றும் குறிப்பது உண்டு. பொதுவாகச் சிறுமி நிலையைத் தாண்டியவர்கள் பெண்கள் எனலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்&oldid=2309826" இருந்து மீள்விக்கப்பட்டது