நங்கானா சாகிபு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நங்கானா சாகிபு மாவட்டம்
மாவட்டம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்நங்கானா சாகிபு
நிறுவிய ஆண்டுமே 2005
பரப்பளவு
 • மொத்தம்2,720 km2 (1,050 sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
மாவட்டக் குழு1
வருவாய் வட்டங்கள்3


நங்கானா சாகிபு நகரத்தின் சீக்கிய குருத்துவார்
பஞ்சாப் மாகாணத்தின் மாவட்டங்கள்

நங்கானா சாகிபு மாவட்டம் (Nankana Sahib District) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நங்கானா சாகிபு நகரம் ஆகும். நங்கானா சாகிபு நகரம் சீக்கியர்களின் குருத்துவார் அமைந்த புனித யாத்திரை தலமாகும்.

நாங்கனா சாகிபு, லாகூரிலிருந்து மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவிலும், பைசலாபாத் நகரத்திலிருந்து கிழக்கே 55 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தின் பெரிய வணிக நகரம் ஷாகோட் ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

2005-இல் நிறுவப்பட்ட நங்கானா சாகிபு மாவட்டம் நங்கானா சாகிபு, சாங்லா மலை மற்றும் ஷாகோட் எனும் மூன்று வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் 68 ஒன்றியக் குழுக்களும், 478 கிராமங்களையும் கொண்டுள்ளது. [1] [2]

இம்மாவட்டத்தில் 1058 பள்ளிக் கூடங்களும், 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 10 காவல் நிலையங்களும், 3 தொடருந்து நிலையங்களும், 13 அஞ்சல் நிலையங்களும், 57 வங்கிக் கிளைகளும் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2,720 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நங்கானா சாகிபு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 12,42,000 ஆகும். இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாகவும், சீக்கியர்கள் சிறுபான்மையின மக்களாகவும் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 98.58% மக்களும், உருது மொழியை 0.41% மக்களும், பஞ்சாபியின் குர்முகி வழக்கை 0.1% மக்களும் பேசுகின்றனர்.[3]

பொருளாதாரம்[தொகு]

வேளாண் பொருளாதாரத்தை நம்பியுள்ள இம்மாவட்டத்தில் நெல், கோதுமை, கரும்பு முக்கிய பயிர்களாகும். மேலும் கொய்யா, எலுமிச்சம் பழம், உருளைக் கிழங்கு, காரட், காலிபிளவர் மற்றும் டர்னிப் பயிரிடப்படுகிறது. 151 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளது. 12,636 ஏக்கரில் காடுகளைக் கொண்டுள்ளது. [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. District Profile: Central Punjab- Nankana Sahib - Dawn Pakistan
  2. DISTRICT NANKANA SAHIB
  3. 1998 District Census report of Sheikhupura. Census publication. 79. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000. பக். 105–6. 
  4. Nankana Sahib
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கானா_சாகிபு_மாவட்டம்&oldid=2976184" இலிருந்து மீள்விக்கப்பட்டது