நங்கல் வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நங்கல் வனவிலங்கு சரணாலயம் (Nangal Wildlife Sanctuary) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இல்லமாக செயல்படுகிறது. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஆதரிப்பதைத் தவிர, நங்கல் வனவிலங்கு சரணாலயம் அழிந்து வரும் இந்திய எறும்புண்ணி, எகிப்திய கழுகு போன்ற பல அழிந்து வரும் உயிரினங்களுக்கும் வீடாக உள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

பஞ்சாபின் நங்கல் நகரில் அமைந்துள்ள நங்கல் வனவிலங்கு சரணாலயம், 116 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இப்பரப்பளவில் பெரும்பாலான பகுதி நீராகும். நங்கல் சதுப்பு நிலம் சட்லஜ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாகவும் உள்ளது.[2] நங்கல் அணையும் சரணாலயத்தின் ஒரு பகுதியாகும், இது அப்பகுதி முழுவதும் இயற்கையான சுற்றுச்சூழலை அனுமதிக்கிறது.[3] நங்கல் வனவிலங்கு சரணாலயம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு சிறிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]