நக்கோன் பாத்தோம் மாகாணம்
நக்கோன் பாத்தோம் மாகாணம்
Nakhon Pathom Province จังหวัดนครปฐม | |
|---|---|
(இடதுபுறமிருந்து) பிரா பத்தோம் செடி, சனம் சந்திரா அரண்மனை, மகிடோல் பல்கலைக்கழகத்தின் இளவரசர் மகிடோல் அரங்கம், புத்தமண்டல் பௌத்த பூங்கா, டான் வாய் சந்தை, மனித உருவ அருங்காட்சியகம். | |
| அடைபெயர்(கள்): Mueang Chedi Yai เมืองเจดีย์ใหญ่ | |
| குறிக்கோளுரை: இனிப்பான பம்ப்ளிமாஸ். வெள்ளை அரிசி. அழகான பெண்கள். இனிப்பும் சுவையும் நிறைந்த காவ் லாம். சனம் சான் அரண்மனை. வானுயர்ந்த பிரா பதோமச்சேடி. கவர்ச்சிகரமான தா சின் ஆறு ส้มโอหวาน ข้าวสารขาว ลูกสาวงาม ข้าวหลามหวานมัน สนามจันทร์งามล้น พุทธมณฑลคู่ธานี พระปฐมเจดีย์เสียดฟ้า สวยงามตาแม่น้ำท่าจีน | |
தாய்லாந்தில் நக்கோன் பாத்தோம் மாகாணம் | |
| ஆள்கூறுகள்: 13°55′N 100°7′E / 13.917°N 100.117°E | |
| நாடு | |
| மாகாணம் | நக்கோன் பாத்தோம் மாகாணம் |
| தலைநகரம் | நக்கோன் பாத்தோம் நகரம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2,142 km2 (827 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 66-ஆவது[1] |
| மக்கள்தொகை (2024)[2] | |
| • மொத்தம் | ▼9,25,758 |
| • தரவரிசை | 25-ஆவது |
| • அடர்த்தி | 432/km2 (1,120/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 8-ஆவது |
| மனிதச் சாதனை குறியீடு[3] | |
| • HAI (2022) | 0.6698 6-ஆவது |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி [4] | |
| • மொத்தம் | பாட் 333 பில்லியன் (US$ 11.3 பில்லியன்) (2019) |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
| அஞ்சல் குறியீடு | 73xxx |
| தொலைபேசி | 034 & 02 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | TH-73 |
| இணையதளம் | nakhonpathom nkppao |
நக்கோன் பாத்தோம் மாகாணம் (ஆங்கிலம்: Nakhon Pathom Province; தாய்: นครนายก) என்பது தாய்லாந்தின் மத்திய மாகாணங்களில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிய மாகாணமாகும். வரலாறு மிக்க நக்கோன் பாத்தோம் மாகாணத்தின் தலைநகரம் நக்கோன் பாத்தோம் நகரம் ஆகும்.
மன்னர் மோங்குத் (நான்காம் ராமா) என்பவரால் ஆணையிடப்பட்டு, 1870-இல் மன்னர் சுலலாங்கொர்ன் (ஐந்தாம் ராமா) என்பவரால் கட்டி முடிக்கப்பட்ட பிரா பாத்தோம் சேதி (Phra Pathommachedi) எனும் தாது கோபுரத்தைக் கொண்டுள்ளது.[5] துவாரவதி நாகரிகம் (Dvaravati) ஒரு காலத்தில் இங்கு செழித்தோங்கி வளர்ந்தது; மேலும் பாரம்பரிய நம்பிக்கையின்படி தாய்லாந்திற்கு பௌத்தம் முதன்முதலில் வந்தடைந்த இடம் நக்கோன் பாத்தோம் ஆகும். இம்மாகாணம் அதன் பழத் தோட்டங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது.
நக்கோன் பாத்தோம் மாகாணத்தின் அண்டை மாகாணங்கள்:
வரலாறு
[தொகு]நக்கோன் பாத்தோம் மாகாணத்தின் வரலாறு மிகவும் பழைமையானது; மற்றும் தாய்லாந்தின் பௌத்த வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. நக்கோன் பாத்தோம் என்ற பெயர் பாளி மொழியின் பதமா நகரம் அல்லது பத்மா நகரம் (Nagara Pathama) என்ற சொல்லில் இருந்து வந்தது. இதற்கு முதல் நகரம் என்று பொருள்படும். கி.பி 6 முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் செழித்தோங்கிய துவாரவதி நாகரிகத்தின் மிக முக்கிய மையமாக இந்த நகரம் விளங்கியது
நக்கோன் பாத்தோம் நகரம், ஒரு காலத்தில் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடல்வழிப் பாதையில், கடற்கரையில் அமைந்திருந்ததாகப் பலராலும் விவரிக்கப்படுகிறது; சாவோ பிரயா ஆற்றிலிருந்து வெளியேறிய வண்டல் படிவுகள் காரணமாக, அதன் கடற்கரை பின்னர் கடல் பகுதியை[6]:7 நோக்கி நகர்ந்துள்ளது. சாவோ பிராயா ஆற்றின் வண்டல் படிவுகளால் கடற்கரை பின்வாங்குவதற்கு முன்பு, இது சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடல்வழிப் பாதையில் ஒரு கடலோரத் துறைமுக நகரமாகவும் இருந்தது.
பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளின்படி, கி.மு 3-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் அசோக பேரரசரால் அனுப்பப்பட்ட பௌத்த துறவிகளான சோனா மற்றும் உத்தரா ஆகியோர் தாய்லாந்தில் முதன்முதலில் கால்பதித்த இடம் நக்கோன் பாத்தோம் ஆகும். இதனால், தாய்லாந்திற்கு பௌத்த மதம் முதன்முதலில் வந்தடைந்த இடமாக இது கருதப்படுகிறது.
புவியியல்
[தொகு]நக்கோன் பாத்தோம் என்பது பேங்காக்கிலிருந்து 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய மாகாணமாகும். இது மத்திய தாய்லாந்தின் வண்டல் சமவெளியில் அமைந்துள்ளது. மேலும் சாவோ பிரயா ஆற்றின் கிளையாறான தா சின் ஆற்றினால் (உள்ளூரில் இது நக்கோன் சாய் சி என்று அழைக்கப்படுகிறது) நீர்ப்பாசனம் பெறுகிறது. வேளாண்மைக்காக இங்கு பல கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதன் மொத்த வனப்பகுதி வெறும் 1.6 சதுர கிமீ (0.62 சதுர மைல்) ஆகும். அதாவது மாகாணத்தின் பரப்பளவில் இது 0.8 விழுக்காடு மட்டுமே ஆகும். தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக், நக்கோன் பாத்தோம் மாகாணத்தின் எல்லை வரை விரிவடையும் அளவிற்கு[7] வளர்ந்துள்ளது.
காலநிலை
[தொகு]நக்கோன் பாத்தோம் மாகாணம் வெப்பமண்டல சவன்னா காலநிலையைக் (கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் 'Aw' பிரிவு) கொண்டுள்ளது. இங்கு குளிர்காலம் வறண்டதாகவும் வெப்பமாகவும் இருக்கும். மே மாதம் வரை வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்லும். மே முதல் அக்டோபர் வரை பருவமழைக் காலம் நீடிக்கும். இக்காலத்தில் பலத்த மழையும் பகலில் சற்று குறைந்த வெப்பநிலையும் நிலவும், இருப்பினும் இரவுகள் வெப்பமாகவே இருக்கும்.
2012-2013 ஆண்டுகளுக்கான காலநிலை தரவுகள்: இதன் அதிகபட்ச வெப்பநிலை 2013 ஏப்ரலில் 40.1 °C (104.2 °F) ஆகவும், மிகக்குறைந்த வெப்பநிலை 2013 திசம்பரில் 12.0 °C (53.6 °F) ஆகவும் பதிவாகியுள்ளது.
மாகாண நிருவாகம்
[தொகு]
நக்கோன் பாத்தோம் மாகாணம் 7 மாவட்டங்களாகப் (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்கள் மேலும் 106 துணை மாவட்டங்களாகவும் 904 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022
[தொகு]2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]
| நிலை | வகைப்பாடு |
| 1 - 13 | உயர்வு |
| 14 - 29 | சற்று உயர்வு |
| 30 - 45 | சராசரி |
| 46 - 61 | சற்று குறைவு |
| 62 - 77 | குறைவு |
| தாய்லாந்து மாகாணங்களின் மனிதச் சாதனை குறியீடு 2022 |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
- ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025.
, year 2024, provincial level, Excel File, no.73
- 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024.
, page 32
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
- ↑ "จากพุทธภูมิสู่สุวรรณภูมิ: พุทธศาสนา เข้ามาสู่เมืองไทยได้อย่างไร ?" [From Buddha land to Suvarnabhumi : How did Buddhism come to Thailand?]. National Geographic Thailand (in thai). 2024-12-07. Retrieved 2021-08-26.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ David K. Wyatt (2001). "Relics, Oaths and Politics in Thirteenth-Century Siam". Journal of Southeast Asian Studies 32 (1): 3–65. https://www.jstor.org/stable/20072298. பார்த்த நாள்: 10 September 2025.
- ↑ "ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in Thai). 2019. Retrieved 6 April 2021.
, information, Forest statistics Year 2019
{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிமூலத்தில் Nakhon Pathom நக்கோன் பாத்தோம் பற்றிய ஆக்கங்கள்- Province page from the Tourist Authority of Thailand
- Website of province பரணிடப்பட்டது 2006-01-11 at the வந்தவழி இயந்திரம் (Thai only)
- Nakorn Pathom Highlights c3h0MQ== Nakorn Pathom Highlights
