நக்கோன் நாயக் மாகாணம்
நக்கோன் நாயக் மாகாணம்
Nakhon Nayok Province นครนายก | |
|---|---|
(மேல்-இடதுபுறத்தில் இருந்து): வாட் உடோம் தானி, லுவாங் போ பாக் டேங் புத்தர், வாட் சூலபோன் மூங்கில் காடு, விரோட் பல்கலைக்கழகத்தின் புத்தரூப ஆலயம், குன் டான் பிரகான் சோன் அணைக்கட்டு | |
| குறிக்கோளுரை: மாசு இல்லாத கனவுகளின் நகரம். அழகான மலைகள். அழகிய நீர்வீழ்ச்சிகள். இயற்கை வளம். นครนายก เมืองในฝันที่ใกล้กรุง ภูเขางาม น้ำตกสวย รวยธรรมชาติ ปราศจากมลพิษ | |
தாய்லாந்தில் நக்கோன் நாயக் மாகாணம் | |
| ஆள்கூறுகள்: 14°12′44″N 101°12′06″E / 14.21222°N 101.20167°E | |
| நாடு | |
| மாகாணம் | நக்கோன் நாயக் மாகாணம் |
| தலைநகரம் | நக்கோன் நாயக் நகரம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2,141 km2 (827 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 67-ஆவது[1] |
| மக்கள்தொகை (2024)[2] | |
| • மொத்தம் | |
| • தரவரிசை | 73-ஆவது |
| • அடர்த்தி | 121/km2 (310/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 39-ஆவது |
| மனிதச் சாதனை குறியீடு[3] | |
| • HAI (2022) | 0.6509 25-ஆவது |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி [4] | |
| • மொத்தம் | பாட் 27 பில்லியன் (US$ 1.0 பில்லியன்) (2019) |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
| அஞ்சல் குறியீடு | 26xxx |
| தொலைபேசி | 037 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | TH-26 |
| இணையதளம் | nakhonnayok |
நக்கோன் நாயக் மாகாணம் (ஆங்கிலம்: Nakhon Nayok Province; தாய்: นครนายก) என்பது தாய்லாந்தின் மத்திய மாகாணங்களில் ஒன்றாகும். இதன் அண்டை மாகாணங்களாக சாராபுரி மாகாணம், நக்கோன் இரட்சசிமா மாகாணம், பிரச்சின்புரி மாகாணம், சாச்சோ எங்சாவ் மாகாணம் மற்றும் பத்தும் தனி மாகாணம் ஆகியவை உள்ளன. நக்கோன் நாயக் மாகாணம் அருவிகள் மற்றும் பழ வகைகளுக்கு பெயர் பெற்றது.
இந்த மாகாணம் பேங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மாகாணம்; மற்றும் பல்வேறு சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது. தாய்லாந்தின் மிகப் பழமையான தேசிய பூங்காவான காவ் யாய் தேசிய பூங்கா (Khao Yai National Park), நக்கோன் நாயக் மாகாணத்தில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது; மற்றும் பல சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.[5] குன் டான் பிரகார்ன் சோன் அணை[6] மற்றொரு சுற்றுலா தலமாகும்.
பெயரியல்
[தொகு]நக்கோன் என்பது சமசுகிருத சொல்லான நகரம்; (தேவநாகரி: नगर) தலைவர் என்பதன் தாய்லாந்து வடிவமாகும். எனினும் அப்பகுதியின் பெயர் நேரடிப் பொருளில் 'வரி இல்லாத நகரம்' என்று பொருள்படுகிறது.[7]
வரலாறு
[தொகு]நக்கோன் நாயக் நகரம் துவாரவதி (Dvaravati) காலத்தைச் சேர்ந்தது. நவீன நகரத்திற்குத் தெற்கே அமைந்துள்ள 'முவாங் போரான் டோங் லக்கோன்' (Mueang Boran Dong Lakhon) பகுதியில் அக்காலத்தைச் சேர்ந்த சிதைந்த எச்சங்களைக் காண முடியும்.[8]:215, 217 இந்த இடம் தாய்லாந்து வளைகுடாவின் முன்னாள் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது;[9]:4 இங்கு குறைந்தது ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மக்கள் வசித்து வந்துள்ளனர்.
நக்கோன் நாயக் நகரத்தின் வெளி அகழியின் அருகே பௌத்தக் கட்டிடங்களின் தொகுதி ஒன்று அமைந்துள்ளது; அங்கு 'எ தம்மா' (ye dhammā) எனும் வாசகத்தைக் கொண்ட பாலி மொழி கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[9]:5, 7 1943-ஆம் ஆண்டு சனவரி 1-ஆம் தேதி, நக்கோன் நயோக் மாகாணத்தின் தரத்தை தாய்லாந்து அரசாங்கம் குறைத்து, அதனை பிரச்சின்புரி மாகாணத்துடன் இணைத்தது. 1946 மே 9 அன்று இந்த மாகாணம் மீண்டும் நிறுவப்பட்டது.
காலநிலை
[தொகு]நக்கோன் நாயக் மாகாணம் வெப்பமண்டல சவன்னா காலநிலையைக் (கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் 'Aw' பிரிவு) கொண்டுள்ளது. இங்கு குளிர்காலம் வறண்டதாகவும் வெப்பமாகவும் இருக்கும். மே மாதம் வரை வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்லும். மே முதல் அக்டோபர் வரை பருவமழைக் காலம் நீடிக்கும். இக்காலத்தில் பலத்த மழையும் பகலில் சற்று குறைந்த வெப்பநிலையும் நிலவும், இருப்பினும் இரவுகள் வெப்பமாகவே இருக்கும்.
புவியியல்
[தொகு]நக்கோன் நாயக் மாகாணத்தின் வடக்குப் பகுதி, தோங் பயா யென் மலைகளின் (Dong Phaya Yen Mountains) தெற்கு நீட்சியான சங்கம்பேங் மலைத்தொடரில் (Sankamphaeng Range) அமைந்துள்ளது. இங்குள்ள மிக உயர்ந்த பகுதி 1,292 மீட்டர் உயரமுள்ள யோத் காவ் கியாவ் (Yod Khao Kiew) மலைச்சிகரம் ஆகும். இப்பகுதியின் பெரும்பகுதி 2,166 சதுர கிமீ (836 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட காவ் யாய் தேசியப் பூங்காவினால் (Khao Yai National Park) சூழப்பட்டுள்ளது. இது மேலும் மூன்று தேசிய பூங்காக்களுடன் இணைந்து தாய்லாந்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மண்டலங்களில் ஒன்றாக உள்ளது.
நக்கோன் நாயக் மாகாணத்தின் மத்திய பகுதி நக்கோன் நாயக் ஆற்றினால் உருவான ஒரு சமவெளியைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இதன் தெற்கு பகுதி ஒப்பீட்டளவில் வளமற்ற, அமிலத்தன்மை கொண்ட மண்ணைக் கொண்டுள்ளது. இம்மாகாணம் 642 சதுர கிமீ (248 சதுர மைல்) மொத்த வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இது அதன் ஒட்டுமொத்த பரப்பளவில் 30 விழுக்காடு[10] ஆகும்.
மாகாண நிருவாகம்
[தொகு]
நக்கோன் நாயக் மாகாணம் 4 மாவட்டங்களாகப் (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் மேலும் 41 துணை மாவட்டங்களாகவும் 403 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சமயம்
[தொகு]நக்கோன் நாயக் மாகாணத்தில் 222 தேரவாத பௌத்த கோயில்கள் உள்ளன.
- 95 - முயேங் நக்கோன் நாயக் மாவட்டம்
- 39 - பாக் பிலி மாவட்டம்
- 55 - பான் நா மாவட்டம்
- 33 - ஓங்காரக் மாவட்டம்
மக்கள் தொகை
[தொகு]நக்கோன் நாயக் மாகாணத்தின் மக்கள் தொகை வரலாறு பின்வருமாறு:[11][12]
| 1947 | 1960 | 1970 | 1980 | 1990 | 2000 | 2011 | 2020 |
|---|---|---|---|---|---|---|---|
| 117,547 | 154,000 | 161,000 | 201,230 | 228,981 | 241,081 | 253,831 | 260,081 |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022
[தொகு]2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]
| நிலை | வகைப்பாடு |
| 1 - 13 | உயர்வு |
| 14 - 29 | சற்று உயர்வு |
| 30 - 45 | சராசரி |
| 46 - 61 | சற்று குறைவு |
| 62 - 77 | குறைவு |
| தாய்லாந்து மாகாணங்களின் மனிதச் சாதனை குறியீடு 2022 |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
- ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025.
, year 2024, provincial level, Excel File, no.26
- 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024.
, page 31
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
- ↑ Round, Philip D.; Gale, George A. (2007-10-17). "Changes in the Status of Lophura Pheasants in Khao Yai National Park, Thailand: A Response to Warming Climate?". Biotropica 40 (2): 225–230. doi:10.1111/j.1744-7429.2007.00363.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3606. http://dx.doi.org/10.1111/j.1744-7429.2007.00363.x.
- ↑ Jetsadaareewong, Suphattra (2017). "White Water Rafting Management at Khun Dan Prakan Chon Dam, Nakornnayok Province". SSRN Electronic Journal. doi:10.2139/ssrn.3076749. பன்னாட்டுத் தர தொடர் எண்:1556-5068. http://dx.doi.org/10.2139/ssrn.3076749.
- ↑ ประวัติจังหวัดนครนายก (in தாய்). จังหวัดนครนายก. Archived from the original on 2009-02-09. Retrieved 2008-03-07.
- ↑ Matsong, Natthapong (2019). "Chinese Stoneware and Porcelain found in Thailand's Archaeological Sites reflecting Trade Routes and Local Use". In Srisuchat, Amara; Giessler, Wilfried (eds.). Ancient Maritime Cross-cultural Exchanges: Archaeological Research in Thailand (PDF) (in ஆங்கிலம்). Bangkok: Fine Arts Department, Ministry of Culture. pp. 208–225. ISBN 978-616-283-434-9. Archived (PDF) from the original on 2 September 2026. Retrieved 3 September 2026.
- 1 2 Ngernkerd, Patcharaporn; Shoocongdej, Rasmi; Khunsong, Saritpong (2025). "Political boundary between Dvaravati and Ancient Khmer kingdoms: The recognition of ancient frontier networks in Eastern Thailand before the 11th century CE". Archaeological Research in Asia 43. doi:10.1016/j.ara.2025.100647. https://dn720602.ca.archive.org/0/items/political-boundary-between-dvaravati-and-ancient-khmer-kingdoms-the-recognition-/Political%20boundary%20between%20Dv%C4%81ravat%C4%AB%20and%20Ancient%20Khmer%20kingdoms_%20The%20recognition%20of%20ancient%20frontier%20networks%20in%20Eastern%20Thailand%20before%20the%2011th%20century%20CE.pdf.
- ↑ "ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in Thai). 2019. Retrieved 6 April 2021.
, information, Forest statistics Year 2019
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑
"Statistical Yearbook Thailand 2012". National Statistical Office Thailand. Retrieved 25 April 2025.
, year 2011
- ↑ "Statistical Yearbook Thailand 2021". National Statistical Office Thailand. Retrieved 25 April 2025.
, year 2020
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிமூலத்தில் Nakhon Nayok நக்கோன் நாயக் பற்றிய ஆக்கங்கள்- News and Information in Nakhon Nayok (thai)
- Nakhon Nayok, Tourist Authority of Thailand
- Website of province பரணிடப்பட்டது 2021-05-06 at the வந்தவழி இயந்திரம் (Thai)
- Khao Yai National Park
