உள்ளடக்கத்துக்குச் செல்

நக்கோன் இரட்சசிமா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நக்கோன் இரட்சசிமா மாகாணம்
Nakhon Ratchasima Province
นครราชสีมา
பிமாய் கோட்டை, தாவோ சுரானாரி சிலை, ஜிம் தாம்சன் பண்ணை வீடு, சும்போன் கேட், பானோம் வான் கோட்டையில் புத்தர் சிலை

சின்னம்
அடைபெயர்(கள்): Korat
โคราช
குறிக்கோளுரை:
புனித பிரா தாட் பானோம்; பலவகை பண்பாடுகள்; ரேணுவின் பூ தாய் மக்கள்; ருவா பாய் திருவிழா; அழகிய மீக்கோங் ஆற்றங்கரை.
เมืองหญิงกล้า ผ้าไหมดี หมี่โคราช ปราสาทหิน ดินด่านเกวียน
தாய்லாந்தில் நக்கோன் இரட்சசிமா மாகாணம்
தாய்லாந்தில் நக்கோன் இரட்சசிமா மாகாணம்
ஆள்கூறுகள்: 14°58′20″N 102°6′0″E / 14.97222°N 102.10000°E / 14.97222; 102.10000
நாடு தாய்லாந்து
மாகாணம்நக்கோன் இரட்சசிமா மாகாணம்
தலைநகரம்நக்கோன் இரட்சசிமா நகரம்
பரப்பளவு
 • மொத்தம்20,736 km2 (8,006 sq mi)
 • பரப்பளவு தரவரிசை2-ஆவது[1]
மக்கள்தொகை
 (2024)[2]
 • மொத்தம்▼26,20,172
 • தரவரிசை2-ஆவது
 • அடர்த்தி126/km2 (330/sq mi)
  அடர்த்தி தரவரிசை36-ஆவது
மனிதச் சாதனை குறியீடு[3]
 • HAI (2022)0.6471 
30-ஆவது
மொத்த உள்நாட்டு உற்பத்தி [4]
 • மொத்தம்பாட் 275 பில்லியன்
(US$ 9.5 பில்லியன்) (2019)
நேர வலயம்தாய்லாந்து நேரம் +7
அஞ்சல் குறியீடு
30xxx
தொலைபேசி044
ஐஎசுஓ 3166 குறியீடுTH-30
இணையதளம்nakhonratchasima.go.th

நக்கோன் இரட்சசிமா மாகாணம் அல்லது கோரட் (ஆங்கிலம்: Nakhon Ratchasima Province, Khorat Korat; தாய்: นครราชสีมา) என்பது தாய்லாந்தின் 77 மாகாணங்களில் (சாங்வாட் - changwat) ஒன்றாகும். ஈசான் என்று அழைக்கப்படும் கீழ் வடகிழக்கு தாய்லாந்து பகுதியில் அமைந்துள்ளது. நக்கோன் இரட்சசிமா மாகாணத்தின் தலைநகரம் நக்கோன் இரட்சசிமா ஆகும். இந்த நகரம் கோரட் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

20,736 சதுர கிமீ (8,006 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ள இந்த மாகாணம்; பரப்பளவின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாகாணமாகும். இது சுமார் 2.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அத்துடன், ஏறக்குறைய 250 பில்லியன் பாட் மொத்த உள்நாட்டு உற்பத்தியை[5] (GDP) ஈட்டுகிறது.

நக்கோன் இரட்சசிமா மாகாணத்தின் அண்டை மாகாணங்கள்:

  1. செயாபூம் மாகாணம்
  2. கோன் கேன் மாகாணம்
  3. புரிராம் மாகாணம்
  4. சா கயோ மாகாணம்
  5. பிரச்சின்புரி மாகாணம்
  6. நக்கோன் நாயக் மாகாணம்
  7. சாராபுரி மாகாணம்
  8. லோப்புரி மாகாணம்

புவியியல்

[தொகு]

இம்மாகாணம் கோராட் பீடபூமியின் (Khorat Plateau) மேற்கு முனையில் அமைந்துள்ளது, மேலும் இது பெட்சாபூன் (Phetchabun Mountains) மற்றும் தோங் பயா யென் (Dong Phaya Yen Mountains) மலைத்தொடர்களால் சாவோ பிரயா ஆற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தில் இரண்டு தேசியப் பூங்காக்கள் உள்ளன; மேற்கில் காவ் யாய் தேசியப் பூங்கா; மற்றும் தெற்கில் தப் லான் தேசியப் பூங்கா. இந்த இரண்டு பூங்காக்களும் தோங் பயா யென் மலைகளின் தெற்கு நீட்சியான சங்கம்பேங் மலைத்தொடரின் (Sankamphaeng Range) காடுகள் சூழ்ந்த மலைகளில் அமைந்துள்ளன. இதன் மொத்த வனப்பகுதி 3,193 சதுர கிமீ (1,233 சதுர மைல்); இது மாகாணத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் 15.4 விழுக்காடு ஆகும்.[1]

நக்கோன் இரட்சசிமா என்பது வடகிழக்கு பீடபூமியில் அமைந்துள்ள ஒரு பெரிய மாகாணமாகும். இது பேங்காக்கிலிருந்து 259 கிலோமீட்டர் (161 மைல்) தொலைவில் அமைந்துள்ளதுடன், 20,736 சதுர கிலோமீட்டர் (8,006 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]

வரலாறு

[தொகு]
பிமாய் வரலாற்றுப் பூங்கா

நக்கோன் இரட்சசிமா மாகாணத்தின் வரலாறு மிகவும் பழைமையானது; மற்றும் தாய்லாந்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போதைய நக்கோன் இரட்சசிமா நகரத்திற்கு முன்பாக, இப்பகுதியில் துவாரவதி (Dvaravati) நாகரிக காலத்தைச் சேர்ந்த[6]:272 இரு பழங்கால நகரங்கள் இருந்தன.[7]:389 அவை முயேங் செமாய் மற்றும் முயேங் கோரகாபுரா நகரங்கள்[8] ஆகும்.

கி.பி 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை, இப்பகுதி கெமர் பேரரசின் வலுவான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதற்குச் சான்றாக இம்மாகாணத்தில் புகழ்பெற்ற பிமாய் வரலாற்றுப் பூங்கா[9][10]:15 உள்ளிட்ட பல கெமர் பாணி பௌத்த மற்றும் இந்து கோயில் இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன.

மன்னர் நாராய் காலம்

[தொகு]

17 ஆம் நூற்றாண்டில், அயூத்தியா இராச்சியத்தின் மன்னரான நாராய் (Narai), நாட்டின் கிழக்கு எல்லையைப் பாதுகாக்கும் நோக்கில் இரு பழங்கால நகரங்களையும் ஒன்றிணைத்து தற்போதைய இடத்தில் ஒரு புதிய கோட்டை நகரத்தை உருவாக்க ஆணையிட்டார். இதற்கு நக்கோன் இரட்சசிமா நகரம் என்று பெயரிடப்பட்டது.

உள்ளூர் மக்களால் இந்நகரம் சுருக்கமாக கோராட் என்றும் அழைக்கப்படுகிறது.[11]:146 இது இப்பகுதியின் பழைய பெயரான கோரகாபுரா என்பதன் மருவலாகும்.[12]:52–53 இது அயூத்தியா இராச்சியத்தின் கிழக்கு எல்லையைக் காக்கும் முதன்மை அரணாக விளங்கியது.

1826 லாவோஸ் படையெடுப்பு

[தொகு]

இம்மாகாண வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வு 1826-இல் லாவோஸ் படையெடுப்பு (Lao rebellion) நிகழ்ந்தது. வியஞ்சான் நாட்டின் மன்னரான அனுவோங் (Anouvong), பேங்காக் நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது நக்கோன் இரட்சசிமா நகரைக் கைப்பற்றி, அங்கிருந்த மக்களைச் சிறைபிடித்தார்.[13] அப்போதைய நகரத் துணை ஆளுநரின் மனைவியான குன் யிங் மோ[14] என்பவரின் தலைமையில், சிறைபிடிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து லாவோஸ் படைகளுக்கு எதிராகத் துணிச்சலாகப் போராடி அவர்களைத் தோற்கடித்தனர்.

இவர்களின் வீரத்தைப் பாராட்டி, பேங்காக்கின் மன்னர் மூன்றாம் ராமா, குன் யிங் மோவிற்கு தாவோ சுரானாரி (Thao Suranari) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். அவர் இன்றுவரை இம்மாகாணத்தின் முதன்மைப் பெண் வீரராகவும், காவல் தெய்வமாகவும் மதிக்கப்படுகிறார்.

நவீன காலம்

[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மன்னர் சுலலாங்கொர்ன் (ஐந்தாம் ராமா) காலத்தில், பேங்காக் மாநகரத்தையும் கோராட் எனும் நக்கோன் இரட்சசிமாவையும் இணைக்கும் தாய்லாந்தின் முதல் தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டது.[15] இது வடகிழக்கு பிராந்தியத்தின் நுழைவாயிலாக இம்மாகாணத்தை மாற்றியதுடன், இதன் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் ஊக்குவித்தது.

மாகாண நிருவாகம்

[தொகு]
நக்கோன் இரட்சசிமா மாகாணத்தின் 32 மாவட்டங்கள்

நக்கோன் இரட்சசிமா மாகாணம் 32 மாவட்டங்களாகப் (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்கள் மேலும் 263 துணை மாவட்டங்களாகவும் 3,743 கிராமங்களாகவும்[16] பிரிக்கப்பட்டுள்ளன.

  1. நக்கோன் இரட்சசிமா மாவட்டம்
  2. கோன் புரி மாவட்டம்
  3. சோயெங் சாங் மாவட்டம்
  4. கோங் மாவட்டம்
  5. பான் லுயேம் மாவட்டம்
  6. சக்கராத் மாவட்டம்
  7. சோக் சாய் மாவட்டம்
  8. டான் குன் தோத் மாவட்டம்
  9. நோன் தாய் மாவட்டம்
  10. நோன் சுங் மாவட்டம்
  11. காம் சாகேசாங் மாவட்டம்
  12. புவா யாய் மாவட்டம்
  13. பிராத்தாய் மாவட்டம்
  14. பாக் தோங் சாய் மாவட்டம்
  15. பிமாய் மாவட்டம்
  16. உவாய் தாலேயாங் மாவட்டம்
  17. சும் புவாங் மாவட்டம்
  18. சுங் நோயென் மாவட்டம்
  19. காம் தாலே சோ மாவட்டம்
  20. சிகியூ மாவட்டம்
  21. பாக் சோங் மாவட்டம்
  22. நோங் முன் மாக் மாவட்டம்
  23. கெங் சனாம் நாங் மாவட்டம்
  24. நோன் டேயாங் மாவட்டம்
  25. வாங் நாம் கியாவ் மாவட்டம்
  26. தேப்பாராக் மாவட்டம்
  27. முயேங் யாங் மாவட்டம்
  28. பிரா தோங் காம் மாவட்டம்
  29. லாம் தாமென்சாய் மாவட்டம்
  30. புவா லாய் மாவட்டம்
  31. சிடா மாவட்டம்
  32. சலோம் பிரா கியாத் மாவட்டம்

மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022

[தொகு]
உடல்நலம் கல்வி வேலைவாய்ப்பு வருமானம்
33 58 10 55
வீட்டுவசதி குடும்பம் போக்குவரத்து பங்கேற்பு
29 26 58 30
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2022) குறியீட்டில் 0.6471 என்ற மதிப்புடன் "சராசரி" நிலையில் உள்ள நக்கோன் இரட்சசிமா மாகாணம், தாய்லாந்து நாட்டின் தரவரிசையில் 30-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]

நிலைவகைப்பாடு
  1 - 13உயர்வு
14 - 29சற்று உயர்வு
30 - 45சராசரி
46 - 61சற்று குறைவு
62 - 77குறைவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
  2. ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025. , year 2024, provincial level, Excel File, no.30
  3. 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024. , page 34{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
  5. ↑ Janssen, Peter (2 November 2016). "Thailand takes a long-term gamble on Isaan region". Nikkei Asian Review. http://asia.nikkei.com/Politics-Economy/Economy/Thailand-takes-a-long-term-gamble-on-Isaan-region?page=1.
  6. ↑ Murphy, Stephen A. (2010). "Dvaravati Period Sema Stones: Shifting Meanings and Definitions in Archaeology, Epigraphy, Texts and Religious Re-use". Rian Thai: International Journal of Thai Studies 3: 259–282. பன்னாட்டுத் தர தொடர் எண்:1906-4241. https://thailandfoundation.or.th/dvaravati-period-sema-stones-shifting-meanings-and-definitions-in-archaeology-epigraphy-texts-and-religious-re-use/.
  7. ↑ Murphy, Stephen A. (October 2016). "The case for proto-Dvāravatī: A review of the art historical and archaeological evidence". Journal of Southeast Asian Studies 47 (3): 366–392. doi:10.1017/S0022463416000242. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4634. https://www.cambridge.org/core/journals/journal-of-southeast-asian-studies/article/abs/case-for-protodvaravati-a-review-of-the-art-historical-and-archaeological-evidence/6ABA16AADF5C3B4D62086719BEEF6A5C.
  8. ↑ "Thao Suranari Monument". Tourism Thailand.
  9. ↑ UNESCO World Heritage Centre. "Phimai, its Cultural Route and the Associated Temples of Phanomroong and Muangtam". Whc.unesco.org. Retrieved 24 December 2014.
  10. ↑ David K. Wyatt (2001). "Relics, Oaths and Politics in Thirteenth-Century Siam". Journal of Southeast Asian Studies 32 (1): 3–65. https://www.jstor.org/stable/20072298. பார்த்த நாள்: 10 September 2025. Alt URL
  11. ↑ Murphy, Stephen A. (2022). "Buddhism and its Relationship to Dvāravatī Period Settlement Patterns and Material Culture in Northeast Thailand and Central Laos c. Sixth–Eleventh Centuries CE". In Nicolas Revire; Pitchaya Soomjinda (eds.). Decoding Southeast Asian Art: Studies in Honor of Piriya Krairiksh. Bangkok: River Books and the Piriya Krairiksh Foundation. pp. 144–153. ISBN 9786164510661.
  12. ↑ Wongthes, Sujit (1983). สุโขทัยไม่ใช่ราชธานีแห่งแรกของไทย [Sukhothai Was Not the First Royal Capital of the Thai]. Sinlapa Watthanatham special issue (in தாய்). Bangkok: Sinlapa Watthanatham. ISBN 974-8350-36-3.
  13. ↑ Simms, Peter; Simms, Sanda (2001). The Kingdoms of Laos: Six Hundred Years of History. ISBN 9780700715312.
  14. ↑ Foley, William. Anthropological Linguistics: An Introduction. Oxford: Blackwell, 1997.
  15. ↑ Pham, Hong Tung (15 December 2006). "Mongkut, Chulalongkorn and the Generations of Siam Reformers in the Premodern Period". VNU Journal of Science: Social Sciences and Humanities. https://js.vnu.edu.vn/SSH/article/view/3046.
  16. ↑ "Learn Thai HomeThailand Districts and SubdistrictsDistricts and Subdistricts in Nakhon Ratchasima, Thailand Districts and Subdistricts in Nakhon Ratchasima, Thailand". langhub. Trevi Multimedia Group Co., Ltd. Retrieved 30 December 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிமூலத்தில் Nakhon Ratchasima நக்கோன் இரட்சசிமா பற்றிய ஆக்கங்கள்