நக்கீரன் (சூழலியல் எழுத்தாளர்)

நக்கீரன் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சூழலியல் எழுத்தாளரும், குழந்தை எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளரும் ஆவார். என் பெயர் ஜிப்சி என்ற கவிதைத் தொகுப்பு நூல் மூலம் கவிஞராக அறிமுகமானார். இந்நூலுக்கு 2012 ஆம் ஆண்டு விகடன் விருது கிடைத்தது.[1] பணி நிமித்தமாக தான் இருந்த வெளிநாட்டு காட்டு அனுபவங்களைக் கொண்டு காடோடி என்ற புதினத்தை எழுதி கவனத்தை ஈர்த்தவர். இவரது நூல்கள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2]
வாழ்கை குறிப்பு
[தொகு]நக்கீரன் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள மாதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்.[3] பொறியியல் படிப்பைத் தொடரமுடியாமல் மலேசியாவில் ஒரு உள்ள ஒரு பேரங்காடியில் மேலாளராக பணியாற்றிவந்தார். அப்போது அடிக்கடி கானுலா போகும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்நிலையில் காட்டில் தங்கி இருந்து கணக்கு பார்க்கும் பணி கிடைத்தது. காடுகளில் தங்கி இருக்கும் வேலை என்றதால் உற்சாகத்துடன் பழைய வேலையை விட்டுவிட்டு புதியவேலைக்குச் சென்றார். ஆனால் அது போர்னியோ காடுகளில் வெட்டு மரங்களை கணக்கெடுத்து நிறுவனத்திற்கு கூறும் பணியாகும். காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதால் ஏற்பட்ட அழிவுகளை கண்டு வேதனையுற்றார்.[4] ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் வேலையை விட்டு விலகினார்.
எழுதிய நூல்கள்
[தொகு]- என் பெயர் ஜிப்சி (கவிதை தொகுப்பு)
- காடோடி (புதினம்)
- மழைக்காடுகளின் மரணம்
- நீர் எழுத்து
- சூழலும் சாதியும்
- பசுமைப் பள்ளி
- இயற்கை 24X7
- தமிழ் ஒரு சூழலியல் மொழி
- அலையாத்திக் காடு
- கார்பரேட் கோடாரி
- எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்
- வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி
- கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்
- பால் அரசியல் (கட்டுரைத் தொகுப்பு)
- உயிரைக் குடிக்கும் புட்டிநீர்
- திருடப்பட்ட தேசம்
- தட்டான்கள் பறக்கும் மழைக்காலம் (சிறார்களுக்கான கதைப் புத்தகம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ் ஒரு சூழலியல் மொழி, எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல், கேள்விகள்: ஜெ. ஜெயகாந்தன், எஸ். செந்தில்குமார், நூல்: பேசும் புதிய சக்தி நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்: எஸ் செந்தில்குமார், பதிப்பு: 2018, பேசும் புதியசக்தி பதிப்பகம், எண்: 29எச், ஏ.என்.ஆர். காம்ப்ளக்ஸ் தெற்கு வீதி, திருவாரூர். பக்கம்: 149
- ↑ குழு, ஆசிரியர் (2022-03-05). "நக்கீரன் - சுட்டி உலகம்" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-01-01.
- ↑ சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல், சு. அருண் பிரசாத், கனலி இணையதளம்
- ↑ கானகத்தின் குரல்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, 1 பெப்ரவரி 2015
வெளி இணைப்புகள்
[தொகு]- எழுத்தாளர் நக்கீரன் - முகநூல் பக்கம்