நகெல் மெர்சூக் கொலை

ஆள்கூறுகள்: 48°53′55″N 2°13′17″E / 48.8985°N 2.2213°E / 48.8985; 2.2213
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகெல் மெர்சூக் கொலை
நாள்27 சூன் 2023
அமைவிடம்நான்டெர்ரே, பிரான்சு
புவியியல் ஆள்கூற்று48°53′55″N 2°13′17″E / 48.8985°N 2.2213°E / 48.8985; 2.2213
வகைகாவல் துறையினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
விளைவுவெகுஜன நகர்ப்புற கலவரங்கள்
இறப்புகள்நாகெல் மெர்சூக்

நாகெல் மெர்சூக் ( Naël என்றும் பலுக்கப்படுகிறது), [1] என்னும் 17 வயதான மக்ரிபு அல்சீரிய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு இளைஞன் 27 சூன் 2023 அன்று பிரெஞ்சு காவல் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாரீசின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேயில் போக்குவரது சமிக்ஞையில் நிற்காமல் சென்ற அந்த இளைஞன் ஒரு காவல் அதிகாரியால் சுட்டுக் கொல்லபட்டார். "அதிகாரத்தில் உள்ள ஒருவரால் செய்யபட்ட தன்னியல்பான கொலை" என்ற ஐயத்தின் பேரில், மெர்சூக்கை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி கைது செய்யயபட்டார். இந்த நிகழ்வு குறித்து காவல் துறையின் அறிக்கை வெளியிட்டது. கால்துறையின் அறிக்கையின் தகவல்களும், அதன்பின்னர் இயங்கலையில் வெளியிடப்பட்ட காணொளியும் முரண்பட்டது. இது பரவலான எதிர்ப்புகள் மற்றும் கலவரங்களுக்கு வழிவகுத்தது. நகரமண்டபங்கள், பள்ளிகள், காவல் நிலையங்கள் போன்ற அரசு சொத்துகள் மற்றும் பிற கட்டடங்கள் தாக்கப்பட்டன. [2] 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 1,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொலையானது பிரெஞ்சு சட்ட அமலாக்கம் மற்றும் வன்முறை தொடர்பான பரந்த பொது விவாதத்தை உண்டாக்கியது. இது "மன்னிக்க முடியாதது" என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் கண்டனம் செய்யப்பட்டது.

பின்னணி[தொகு]

இந்தக் கொலைக்கு முந்தைய ஆண்டுகளில் பிரான்சு காவல் துறையின் வன்முறைகள் அதிகரித்தன. [3] 2017 ஆம் ஆண்டில், போக்குவரத்து சம்க்ஞையில் இருந்து தப்பிச் செல்லும் வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர், பயணிகளுக்கோ அல்லது வழிப்போக்கர்களுக்கோ ஆபத்தை உருவாக்கினால், ஓட்டுநரை காவல்துறையினர் சுட அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. [4] 2023 ஆம் ஆண்டு பிரான்சில் காவலர்கள் சொல்லி நிறுத்தாமல் சென்றதால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும். 2020 இல், மூன்று இறப்புகள் நிகழ்ந்தன, அதைத் தொடர்ந்து 2021 இல் இரண்டு இறப்புகளும், 2022 இல் 13 இறப்புகளும் ஏறபட்டன. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கறுப்பின அல்லது மக்ரிபு வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர். இதுவே பிரெஞ்சு காவல்துறையின் மீது இனவெறி குற்றச்சாட்டுகள் எழ காரணமாயிற்று. [5] மே 2023 இல், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் பிரான்சு நாட்டின் காவல்துறையை விமர்சித்தது. [6] பிரெஞ்சு அரசாங்கம் காவல் துறையின் வன்முறை நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. சில சமயங்களில் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது. அதே நேரத்தில் 2017 சட்டத்தை ரத்து செய்வதை அல்லது திருத்துவதை காவல் துறையினரின் தொழிற்சங்கங்கள் எதிர்கின்றன. [7] 2022 இல், மேற்கூறிய துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் தொடர்பாக தோராயமாக ஐந்து அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டனர். [8]

19 சூலை 2016 அன்று, பிரான்சில் 24 வயது கறுப்பினத்தவரான ஆடமா ட்ரேரே, காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் காவலில் இருந்தபோது இறந்தார். இந்த நிகழ்வானது பொதுமக்களின் பரவலான கூக்குரலையும் எதிர்ப்புகளையும் உருவாக்கியது. 2020 மே மாதத்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2023 சூன் 14 அன்று, அல்ஹவுசைன் கமாரா என்ற 19 வயது இளைஞன் அங்கூலேமில் சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது கொல்லப்பட்டார். [9]

நாகெல் மெர்சூக்[தொகு]

நாகேல் மொர்சூக் என்பவர் 17 வயதான பிரெஞ்சு-அல்ஜீரிய விடலைக் பருவ இளைஞராவார். [10] இவர் பிரான்சின் புறநகரான சுரேஸ்னசில் உள்ள லைசி லூயிஸ்-பிளேரியட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஆறு மாதங்கள் வகுப்புகளுக்குச் சென்றார், பின்னர் பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டார். பின்னர் மெர்சூக் நான்டெர்ரேயில் பீட்சா வநியோகிப்பாளராக (டெலிவரி பாய்) பணிபுரிந்தார். [11] [12] மெர்சூக்கை அறிந்த ஒரு துணை மருத்துவரின் கூற்றுப்படி, மெர்சூக் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை மெர்சூக்கின் தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். [13] அவரது குடும்ப வழக்கறிஞர்கள், மெர்சூக்கின் மீது குற்றவியல் வழக்கு பதிவு ஏதும் இல்லை என்றனர். ஆனால் அவர் 2021 முதல் முந்தைய வார இறுதியில் என ஐந்து முறை "தான் கைது செய்யப்படுவதை எதிர்த்ததற்காக காவல்துறையினரால் அறியப்பட்டவர் " என குற்றம் சாட்டபட்டார். வாகனங்களில் தவறான வாகன எண் தகடுகளைப் பயன்படுத்துதல், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் விற்பனை மற்றும் நுகர்வு உள்ளிட்ட 15 பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் இவரது குற்றக் கோப்பில் அடங்கும்.

2023 சூலை முதல்நாள் அன்று, நான்டெர்ரேயில் உள்ள முஸ்லிம் பிரிவில் உள்ள மான்ட்-வலேரியன் கல்லறைத் தோட்டத்தில் மெர்சூக் அடக்கம் செய்யப்பட்டார். [14]

துப்பாக்கிச் சூடு[தொகு]

வழக்குப் பதிவு[தொகு]

நான்டெர்ரேயின் அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி, இரண்டு பாரிஸ் போலீஸ் ப்ரிஃபெக்சர் மோட்டார் சைக்கிள் அதிகாரிகள், மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஆ.எம்.ஜி மகிழுந்து வாகனமானது ஒரு போலந்து பதிவு எண் தகடு பொறுத்தபட்டிருந்த வாகனம் பேருந்துகளுக்கான பாதையில் அதிவிரைவிக செல்வதைக் கவனித்தனர். அந்த வாகனத்தை காலை 7:55 மணியளவில் இள வயது நபர் ஒருவர் ஓட்டிச் சென்றார். காவல் அதிகாரிகள் தங்கள் எச்சரிக்கை சமிக்ஞைகளை (பார்க்க மற்றும் கேட்க) கொடுத்தனர். அதன்படி மகிழுந்தின் ஓட்டுநர், அடுத்து சாலையில் வரும் சிவப்பு விளக்கு சமிக்ஞையில் நிறுத்தும்படி தெரிவித்தனர். ஆனால் வாகனம் சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் காரை பின்தொடர்ந்து தொலை தொடர்பு கருவி மூலம் தங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து எச்சரித்தனர். மகிழுந்து போக்குவரத்து விதிகள் பலவற்றை மீறிச் சென்றது. ஒரு பாதசாரி மற்றும் மிதிவண்டி ஓட்டி ஆகியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனம் இறுதியில் நின்றது. பின்னால் விரட்டிவந்த காவல் அதிகாரிகள் தங்கள் விசையுந்தில் இருந்து இறங்கி, ஓட்டுநரை நோக்கி துப்பாக்கிகளை காட்டி, இன்ஜினை அனைக்கும்படி கட்டளையிட்டனர். அதற்கு பதிலாக, வாகனம் விலகிச் செல்லத் தொடங்கியது. பின்னர் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓட்டுநரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். வாகனம் அதன் வழியில் சென்று காலை 8:19 மணிக்கு தெரு தளபாடங்கள் மீது மோதி நின்றது. மகிழுந்தில் பின் இருக்கையில் பயணித்தவர் வாகனத்தை விட்டு வெளியேறியபோது கைது செய்யப்பட்டார். முன்பக்க வலது இருக்கையில் பயணித்தவர் தப்பியோடினார். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் அதிகாரி ஓட்டுநருக்கு முதலுதவி அளித்தார். காலை 9:15 மணியளவில் ஓட்டுநர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. [15] [16] [17]

காவல் துறையின் கூற்று ஒரு காணொளி சான்று மூலம் கேள்விக்கு உள்ளானது[தொகு]

காவலரின் கூற்றுப்படி, இளம் ஓட்டுநர் காவலர் மீது வண்டியை செலுத்த முற்பட்டபோது ஒரு அதிகாரி தனது ஆயுதத்தால் சுட்டார் என்பதாகும். [18] ஆனால் இந்த காணொளி பதிப்பானது காவல்துறை அதிகாரிகளுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையில் மகிழுந்து இல்லை என்றும், மகிழுந்து அவர்களை நோக்கி செல்லவில்லை என்பதைக் காட்டும் காணொளி வெளியான பிறகு கால்துறை மீது கேள்விகள் எழக் காரணமாயிற்று. [19] [20] [21] லே மாண்டே நாளிதழின் கருத்துப்படி, "சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 50-வினாடி காட்சியானது காவல்துறை ஆதாரங்களைக் கொண்டு துவக்கத்தில் பரப்பப்பட்ட, சில ஊடகங்களால் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட கூற்றுகளை உண்மையில் துடைத்துவிட்டது." இரண்டு காவல் துறை அதிகாரிகள் மெர்சிடிஸ் மகிழுந்து ஓட்டுநரின் பக்கத்தில் இருந்ததை காணொளி காட்டுகிறது. காவல் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது மகிழுந்து நகர்ந்து கொண்டிருந்தது, அவருக்கு மிக அருகில் இருந்தது.

விசாரணை[தொகு]

அந்த அதிகாரி தற்போது படுகொலை செய்ததற்கான விசாரணை வலையத்தில் உள்ளார். மேலும் "அதிகாரத்தில் உள்ள ஒருவரால் செய்யபட்ட தன்னியல்பான கொலை" என்ற குற்றத்திற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். [5] [22] அந்த அதிகாரியை நோக்கி மெர்சூக் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக வாதிடுவதால், துப்பாக்கிச் சூடு ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று காவல் துறையினர் வாதிட்டனர். [22] இருப்பினும், காணொளி வெளியானது முதல், இந்த கூற்று குறிப்பிடத்தக்க அளவு விமர்சனத்தை எதிர்கொண்டது. [8]

இரண்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன: முதலாவது "இணங்க மறுப்பது" மற்றும் "அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு எதிரான கொலை முயற்சி". அடுத்து இரண்டாவதாக "அதிகாரத்தில் உள்ள ஒருவரால் நிகழ்த்தபட்ட கொலை". இரண்டாவது வழக்கு விசாரணை தேசிய காவல்துறையின் ( ஐஜிபிஎன் ) பொது ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. [23] [24]

ஆரம்ப எதிர்வினைகள்[தொகு]

நகெல் மெர்சூக் எதிர்ப்பு போராட்டம்

பிரெஞ்சு சனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த நிகழ்வை "மன்னிக்க முடியாதது" என்று அறிவித்தார், மேலும் இது "முழு நாட்டையும் அசைத்தது" என்று கூறினார். பிபிசியின் செய்தியாளரான ஹக் ஸ்கோஃபீல்ட், இது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் எளிதாகப் பரப்புவதற்கு அனுமதித்த, சமூக ஊடகங்களே இதற்குக் காரணம், அத்துடன் அடுத்தடுத்த கலவரங்கள் இதுபோன்று உருவாகும் என்ற அச்சம் உள்ளது. பிரான்சில் காவலர்களுக்கான மிகப்பெரிய தொழிற்சங்கமான அலையன்ஸ் போலிஸ் நேஷனலே, மக்ரோனை "நீதியை பேச வாய்ப்பு அளிக்கும் முன்பே எங்கள் சகாக்களைக் கண்டிக்க வேண்டுமா" என்று மக்ரோனை விமர்சித்தது. தேசிய பேரணி கட்சியின் தலைவரான தீவிர வலதுசாரி அரசியல்வாதியான மரீன் லெ பென், மக்ரோனின் அறிக்கைகள் "அதிகப்படியானவை" மற்றும் "பொறுப்பற்றவை" என்று குறிப்பிட்டார், மேலும் "ஒரு தீயை அணைக்கும் முயற்சியில் அரசியலமைப்பு கொள்கைகளை புறக்கணிக்க சனாதிபதி தயாராக உள்ளார்" என்றும் கூறினார். [25]

பிரெஞ்சு கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே ட்விட்டரில் நடந்த நிகழ்வு "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கண்டித்து, மெர்சூக்கின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். [26] பிரெஞ்சு நடிகரும் நகைச்சுவை நடிகருமான ஒமர் சை குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

மெர்சூக்கின் தாய் டிக்டாக்கில் "என் மகனுக்காக ஒரு கிளர்ச்சி" செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தார். காவல்துறைக்கும், அரசாங்கத்திற்கும் மன்னிப்பு இல்லை என்று மெர்சூக்கின் பாட்டி கூறினார், "அவர்கள் என் பேரனைக் கொன்றார்கள், இப்போது நான் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை, அவர்கள் என் பேரனை என்னிடமிருந்து பறித்தனர், நான் அவர்களை என் வாழ்நாளில் மன்னிக்க மாட்டேன், ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் ." [27]

கால்பந்து சங்கமான பார்சிலோனா காற்பந்தாட்டக் கழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஜூல்ஸ் கவுண்டே, இந்தச் நிகழ்வு குறித்த செய்தி அறிக்கையை, செய்தி ஊடகங்கள் "உண்மையைத் திரித்து" மெர்சூக்கை குற்றவாளியாக்க காரணங்களை கண்டறிவதாகக் கூறினார். இடதுசாரி அரசியல்வாதியும் லா பிரான்ஸ் இன்சுமைஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜீன்-லூக் மெலன்சோன் காவல்துறையில் சீர்திருத்தத்தம் செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். [26]

பழமைவாத அரசியல் கட்சியான தி ரிபப்ளிகன்சின் தலைவரான எரிக் சியோட்டி, காவல்துறைக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அவர்களை கூட்டுப் பாதுகாப்பின் அரண்வீரர்கள் என்று அழைத்தார். மேலும் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை நியாயமற்றது என்று கண்டித்தார். பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. [28]

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம், பிரான்சை அதன் காவல் படைகளுக்குள் உள்ள இனவெறியை களையுமாறு கேட்டுக் கொண்டது. மேலும் போராட்டங்களை அமைதிவழியில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. [29] [30]

நாடு முழுவதும் அமைதியின்மை[தொகு]

மெர்சூக் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பானது போராட்டங்களாகவும் கலவரங்களாகவும் மாறின. நான்டெர்ரே வாசிகள் சூன் 27 அன்று காவல்துறை தலைமையகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர். இது கலவரமாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மகிழுந்துகளுக்கு தீ வைத்தனர், பேருந்து நிறுத்தங்களை நொறுக்கினர், காவலர்கள் மீது பட்டாசுகளை கொழுத்தி எறிந்தனர். [31] பாரிஸின் தெற்கே உள்ள விரி-சாட்டிலன் என்ற இடத்தில், இளைஞர் குழு ஒன்று பேருந்துக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

பாரிசிலிருந்து வடமேற்கே 40 கிமீ தொலைவில் உள்ள மாண்டெஸ்-லா-ஜோலி நகரத்தில், [32] ஜூன் 27 அன்று இரவு, தீக்குண்டு வீசப்பட்ட நகர மண்டபம் [33] 3:15 (CEST) வரை எரிந்தது. [7] துலூஸ் மற்றும் லில்லி உட்பட பிரான்சு முழுவதும் இரவு முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்தன. [7] அஸ்னியர்ஸ், கொலம்பேஸ், சுரேஸ்னெஸ், ஆபர்வில்லியர்ஸ், கிளிச்சி-சௌஸ்-போயிஸ், மாண்டஸ்-லா-ஜோலி ஆகிய இடங்களிலும் கலவரம் பதிவாகியுள்ளது. [34]

சூன் 29 இல், 150 பேர் கைது செய்யப்பட்டனர். 24 அதிகாரிகள் காயமடைந்தனர், மேலும் 40 கார்கள் எரிக்கப்பட்டன. [25] பெரும் கலகம் ஏற்படலாம் என்று அஞ்சி, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், 1,200 கலகத் தடுப்புக் காவலர்களை, பாரிசு மற்றும் அதைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுத்தினார். பின்னர் கூடுதலாக 2,000 பேரைச் சேர்த்தார். [8] [25] ஜூன் 29 அன்று, அரசாங்கம் நாடு முழுவதும் 40,000 துருப்புக்களை நிலைநிறுத்துவதாக டார்மானின் அறிவித்தார். உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 1,350 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைக்கப்பட்டன, கலவரம் தொடர்பாக 1,300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சூன் 29 அன்று, நாந்தேரில் ஒரு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. [35]

மேற்கோள்கள்[தொகு]

 1. Allen, Peter (30 June 2023). "UK issues France travel warning as country is gripped by violence" (in en). Evening Standard. https://www.standard.co.uk/news/world/france-violence-paris-trams-buses-nanterre-banlieue-nahel-macron-b1091387.html. 
 2. "Death of Nahel M.: Over 1,300 arrested during Friday night riots". Le Monde. 1 July 2023. https://www.lemonde.fr/en/france/article/2023/07/01/riots-continue-into-friday-night-throughout-france-with-hundreds-more-arrested_6040540_7.html. 
 3. "Tensions erupt in a Paris suburb after a 17-year-old Arab man of Algerian descent, a delivery driver, is killed in a police standoff". 27 June 2023. https://apnews.com/article/france-driver-killed-police-tensions-2030c42cce9c24153d395a07d8e95b75. 
 4. Barbarit, Simon (29 June 2023). "Refus d'obtempérer: la porte-parole de la police nationale annonce 138 tirs en 2022" [Refusal to comply: the spokesperson for the national police announces 138 shootings in 2022]. Public Sénat (in பிரெஞ்சு). Archived from the original on 30 June 2023. பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
 5. 5.0 5.1 Foroudi, Layli (28 June 2023). "Paris police shooting: Macron deplores 'inexcusable' killing of teenager". https://www.reuters.com/world/europe/youths-clash-with-police-near-paris-after-teenager-shot-dead-traffic-stop-2023-06-28/. 
 6. "France criticised over police violence, racism at UN". https://www.aljazeera.com/news/2023/5/1/france-criticised-at-un-over-police-violence-racism. 
 7. 7.0 7.1 7.2 Breeden, Aurelien (28 June 2023). "Anger Flares in France After Police Shoot and Kill Teenage Driver". https://www.nytimes.com/2023/06/28/world/europe/france-police-shooting-paris-nanterre.html. 
 8. 8.0 8.1 8.2 Bisset, Victoria (28 June 2023). "Protests erupt in Paris after police shoot, kill teen during traffic stop". https://www.washingtonpost.com/world/2023/06/28/france-police-shooting-nanterre-nael/. 
 9. "VIDEO Mise en examen pour homicide volontaire du policier auteur d'un tir mortel à Saint-Yrieix, près d'Angoulême" [VIDEO Indictment for intentional homicide of the police officer who shot deadly in Saint-Yrieix, near Angoulême]. France 3 Nouvelle-Aquitaine (in பிரெஞ்சு). 29 June 2023. Archived from the original on 30 June 2023. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
 10. "Mort de Nahel : "C'était un gamin qui avait envie de s'en sortir", selon le président de l'association qui accompagnait le jeune homme" [Death of Nahel: "He was a kid who wanted to get out of it", according to the president of the association who accompanied the young man]. Franceinfo (in பிரெஞ்சு). 28 June 2023. Archived from the original on 30 June 2023. பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
 11. "Nahel, tué à Nanterre par un policier : joueur de rugby, livreur de pizzas, sans casier... qui était l'adolescent?" [Nahel, killed in Nanterre by a policeman: rugby player, pizza delivery man, no record... who was the teenager?]. La Dépêche du Midi (in பிரெஞ்சு). Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
 12. "Rugby, livreur, justice…: qui était Nahel, 17 ans, tué par un policier mardi à Nanterre". La Voix du Nord (in பிரெஞ்சு). 28 June 2023. Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
 13. ""C'était ma vie" : la mère de Nahel, tué par un policier, anéantie après la mort de son fils unique" ["It was my life": Nahel's mother, killed by a police officer, devastated after the death of her only son]. La Voix du Nord (in பிரெஞ்சு). 28 June 2023. Archived from the original on 28 June 2023. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
 14. "Mort de Nahel M. à Nanterre : rage contenue et douleur aux funérailles de l'adolescent" (in fr). Le Monde. 1 July 2023. https://www.lemonde.fr/societe/article/2023/07/01/rage-contenue-et-douleur-aux-funerailles-de-nahel-m-a-nanterre_6180165_3224.html. 
 15. "En direct : une information judiciaire pour homicide volontaire ouverte après la mort de Nahel" (in fr). France 24. 29 June 2023. https://www.france24.com/fr/france/20230629-%F0%9F%94%B4-en-direct-la-conf%C3%A9rence-de-presse-du-procureur-de-nanterre-sur-la-mort-de-nahel. 
 16. "Mort de Nahel : le récit de la course-poursuite, minute par minute" [Death of Nahel: the story of the chase, minute by minute]. Le Figaro (in பிரெஞ்சு). 29 June 2023. Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
 17. "Mort de Nahel: le procureur de Nanterre détaille le déroulé des faits" [Death of Nahel: the Nanterre prosecutor details the course of events] (in பிரெஞ்சு). BFM TV. 29 June 2023. Archived from the original on 30 June 2023. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
 18. Piquet, Caroline; Constant, Julien (27 June 2023). "Adolescent tué à Nanterre par un tir policier : « On veut la vérité et on la veut vite », réagit le maire" [Teenager killed in Nanterre by police shooting: "We want the truth and we want it quickly", reacts the mayor]. Le Parisien (in பிரெஞ்சு). Archived from the original on 27 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 19. "Mort de Naël : une vidéo qui change tout et un cocktail explosif" [Death of Naël: a video that changes everything and an explosive cocktail]. Libération (in பிரெஞ்சு). Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 20. Lair, Noémie (28 June 2023). "Adolescent tué à Nanterre : ce que l'on sait de la vidéo qui met à mal la version des policiers" [Teenager killed in Nanterre: what we know about the video that undermines the version of the police]. France Inter (in பிரெஞ்சு). Archived from the original on 28 June 2023. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
 21. "Mort après un refus d'obtempérer à Nice : une vidéo fragilise la version d'un syndicat de police" [Death after a refusal to comply in Nice: a video weakens the version of a police union]. Francelive (in பிரெஞ்சு). 8 September 2022. Archived from the original on 28 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 22. 22.0 22.1 "Adolescent tué par un policier à Nanterre : l'agent en garde à vue, nuit de colère et de tension dans les Hauts-de-Seine" (in fr). https://www.lemonde.fr/societe/article/2023/06/28/nanterre-un-policier-en-garde-a-vue-apres-la-mort-d-un-mineur-de-17-ans-incidents-entre-habitants-et-forces-de-l-ordre_6179501_3224.html. 
 23. "Jeune homme tué à Nanterre après un refus d'obtempérer : après le drame, deux enquêtes ouvertes" [Young man killed in Nanterre after refusing to comply: after the tragedy, two investigations opened]. Europe 1 (in பிரெஞ்சு). 28 June 2023. Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 24. Mort de Naël: deux plaintes vont être déposées contre les policiers, annoncent les avocats de la famille de la victime (in பிரெஞ்சு), archived from the original on 29 June 2023, பார்க்கப்பட்ட நாள் 28 June 2023 {{citation}}: Unknown parameter |trans_title= ignored (help)
 25. 25.0 25.1 25.2 Brudeau, Cain. "Riots, racial tensions erupt in France after fatal police shooting". Courthouse News Service. Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
 26. 26.0 26.1 "'I hurt for my France': Mbappe, Macron shocked by police killing". Al Jazeera (in ஆங்கிலம்). Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 27. Allen, Peter (28 June 2023). "First picture of teenager whose killing by police triggered night of riots in Paris". Evening Standard (in ஆங்கிலம்). Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 28. "France braces for protests after 'unforgivable' police shooting". France 24 (in ஆங்கிலம்). 28 June 2023. Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 29. "UN says France fatal shooting an opportunity to address racism in law enforcement" (in en). 30 June 2023. https://www.reuters.com/world/europe/un-says-france-fatal-shooting-an-opportunity-address-racism-law-enforcement-2023-06-30/. 
 30. "UN rights office calls on France to address 'deep issues' of racism in policing | UN News". United Nations (in ஆங்கிலம்). 30 June 2023. Archived from the original on 30 June 2023. பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
 31. "France braces for further protests after police kill teenager". Al Jazeera (in ஆங்கிலம்). Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
 32. Rabemanantsoa, Anna; Winsor, Morgan. "Teenager's death during police traffic stop sparks violent unrest in Paris suburb". ABC News (in ஆங்கிலம்). Archived from the original on 29 June 2023. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
 33. "France erupts in violence after police shoot dead a teenager" (in en-US). 28 June 2023. https://www.spectator.co.uk/article/france-erupts-in-violence-after-police-shoot-dead-a-teenager/. 
 34. . 
 35. "France unrest: Riots spread, thousands march in memory of shot teenager". 29 June 2023 இம் மூலத்தில் இருந்து 30 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230630030231/https://www.reuters.com/world/europe/france-150-arrests-overnight-unrest-after-teenager-killed-by-police-2023-06-29/. பார்த்த நாள்: 29 June 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகெல்_மெர்சூக்_கொலை&oldid=3749277" இலிருந்து மீள்விக்கப்பட்டது