நகர்ப்புறத் தோட்டக்கலை மேம்பாட்டு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகர்ப்புற தோட்டக்கலை மேம்பாட்டு மையம்,சென்னை

அதி நவீன தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல் மையமாகவும் சென்னை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் பயிற்சித் திட்டங்கள் அளிப்பதற்காகவும் இம்மையம் சென்னையில் 2000 ம் ஆண்டு துவங்கப்பட்டது.


குறிக்கோள்கள்

தோட்டக்கலையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல் மையமாக செயல்படுகிறது.

நவீன தோட்டக்கலை நாற்றங்கால், மலர் மற்றும் மூலிகைப் பயிர், அலங்காரச் செடிகள், மரக்கன்றுகள் திசு வளர்ப்புக் கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள் போன்ற பல்வேறு வகைக் கன்றுகளுக்கான நாற்றங்கால் அமைத்தல் .

நகர்ப்புற சுயதொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள்,மாணவர்கள் அரசு சாரா நிறுவனங்களுக்கு, இல்லத்தரசிகள் போன்றோருக்கு நவீன தோட்டக் கலைத் தொழில்நுட்பங்கள் பற்றிப் பயிற்சியளித்தல்.

தோட்டக்கலைப் பூங்கா, அவென்யூ, தீம் பார்க், தாவரவியல் பூங்கா, மூலிகைத் தோட்டம், நில எழிலூட்டுதல் போன்றவற்றை மேம்படுத்தி மாசுபாட்டைக் குறைக்கவும், நகரத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் தேவையான தகவல்களைத் தருகின்றது.

புதிய நவீன தோட்டக்கலைத் திட்டங்களை உருவாக்குதல், தோட்டக்கலை சார்ந்த தொழிற்சாலைகளை தொழில்முனைவோருக்கு உதவுவதன் மூலம் மேம்படுத்தலாம்.

நிழ எழிலூட்டுதல், மொட்டைமாடித் தோட்டம், மூலிகை மற்றும் நறுமணப் பயிர் தோட்டம், உணவாகப் பயன்படுத்தும் காளான் உற்பத்தி, மலர்க்கொத்து தயாரிக்க உதவும் உலர் பூ உற்பத்தி, பழங்கள் பதப்படுத்துதல், காய்கறி நீர்மவியல் அமைப்பு, பூக்களிலிருந்து முக்கிய எண்ணெய் பிரித்தெடுக்கும் அமைப்பு, சுற்றப்புறத்தை பாதிக்காத நன்கு மட்கச் செய்த உயிர் உரங்கள், கட்டப்படுத்தப்பட்ட சூழ்நிலையிலில் அதிநவீன மலர்பயிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல்.

தோட்டக்கலை சந்தைத் தகவல் முறைக்கென ஒரு தகவல் தொகுப்பினை உருவாக்குதல்

 நவீன நாற்றங்கால்

இந்நாற்றங்கால் மூலம் நல்ல தரமான நடவுக் கன்றுகள் தோட்டக்கலைப் பயிர்களுக்கென உருவாக்கப்படும். இத்தகு இடங்களில் மேம்படுத்தப்பட்ட காய்கறி, மலர்ப்பயிர், வாசனை, மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களுக்கான விதைகள் கிடைக்கும்.

மேற்கோள் மேற்கோள்[மூலத்தைத் தொகு] 1. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_tirupathisaram.html 2. http://www.kumarionline.com/view/31_73358/20140814173352.html