உள்ளடக்கத்துக்குச் செல்

நகராட்சி அல்லது நகர்ப்புறப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகராட்சி அல்லது நகர்ப்புறப் பொறியியல் (Municipal or urban engineering) என்பது நகர வளர்ச்சிக்காக அறிவியல், களை, பொறியியல் புலங்களின் கருவிகளைப் பயன்படுத்துகிறது.

நகராட்சிப் பொறியியல் நகராட்சி சார்ந்த அகக்கட்டமைப்புகளைச் சார்ந்தது. இது தெருக்கள், நடைபாதைகள், நீர்வழங்கல் குழாயமைப்புகள், துப்புரவுக் கழிவுக் குழாயமைப்புகள், தெருவிளக்குகள், நகரத் திண்மக் கழிவு மேலாண்மையும் வெளியேற்றமும், பொதுப்பணிகளுக்கும் பேணுதலுக்கும் வேண்டிய மொத்தப் பொருள்களைத் தேக்கிவைத்தல் (உப்பு, மணல் போன்றன), நகர்ப் பூங்காக்கள், மிதிவண்டி அக்க் கட்டமைப்பு ஆகியவற்றின் குறிப்பீடுகள், வடிவமைப்புகள், கட்டுமானம், பேணுதல் பணிகளை ஆற்றுகிறது. நிலத்தடி பொதுப்பயன் வலையமைப்புகளைப் பொறுத்தவரை அவற்றின் குடிசார் பொறியியல் பணிகளாகிய உறைகுழாய்கள், அணுகல் அறைகள், ஆகியவற்றைக் கள மின், தொடர்பு வலையமைப்புகளுக்கு ஏற்பாடு செதுதரல் வேண்டும். இது நகராட்சி திண்மக் கழிவுத் திரட்டலையும் பேருந்து இயக்கத் தடவழிகளையும் உகப்புநிலைப்படுத்த வேண்டும். இதன் சில புலங்கள் பிற குடிசார் பொறியியல் சிறப்புத் துறைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், நகராட்சிப் பொறியியல் இந்த அகக் கட்டமைப்புகளின் ஏந்துகளையும் பணிகளையும் ஒருங்கிணைத்தலில் கவனம் குவிக்கிறது. ஏனெனில், இவை ஒருங்கே ஒரு தெருவுக்கோ, குறிப்பிட்ட திட்டத்துக்கோ அதே நகராட்சி அதிகார அமைப்புதான் மேலாளுகிறது.

வரலாறு[தொகு]

தொழில்சார் நடைமுறை[தொகு]

பிரித்தானியவில் நகரப் பொறியியலில் பட்டப் பாடத் திட்டம் இருந்தாலும், நகராட்சிப் பொறியியலுக்கான தனியான தொழில்சார் பட்டம் ஏதும் இல்லை. நகரப் பொறியியலுக்கான தொழில் சான்றிதழ் உள்ளமைப்புப் பொறியாளர் நிறுவனம் வழி பொது வாழ்க்கைத் தகவலும் அறிவுரை வலையமைப்பும் ஊடாகக் கிடைக்கிறது. பிரித்தானியக் குடிசார் பொறியாளர் நிறுவனம் (ICE) பொதுத் துறை, தனியார் துறை, கல்வித்துறை பொறியாளருக்காக தனது நடவடிக்கைகளை நகராட்சிப் பொறியாளர் பரணிடப்பட்டது 2007-12-21 at the வந்தவழி இயந்திரம் இதழில் வெளியிட்டு உதவுகிறது. இது 1873 இல் முதலில் வெளியிடப்பட்டது. இது உலகளாவியது. இது நகராட்சிப் பணிகளின் முழு வாணாள் சுழற்சியையும் உலகளாவிய நிலையில் தொழில்நுட்ப, அரசியல், சமுதாய சிக்கல்கள் உட்பட வெளியிடுகிறது.[1] மேலும்,ஒரு நகராட்சிப் பொறியியல் வல்லுனர் குழு பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம் அரசு அமைப்புகளுக்குக் குடிசார் பொறியியல் நிறுவனம் சார்பாகவும் பன்னாட்டு நகராட்சிப் பொறியியல் கூட்டமைப்பு சார்பாகவும் அறிவுரை வழங்குகிறது.

பன்னாட்டு நிறுவனம்[தொகு]

தொடர்புடைய பொறியியல் புலங்கள்[தொகு]

நகர்ப்புறப் பொறியியல் சுற்றுச்சூழல் பொறியியல், நீர்வளப் பொறியியல். போக்குவரத்துப் பொறியியல் ஆகிய பொறியியல் புலங்களின் அடிப்படைகளைப் பயன்படுத்துகிறது.

நகர வடிவமைப்பும் திட்டமிடலும்[தொகு]

இன்று இப்பொறியியல் நகர் வடிவமைப்புடனும் அதன் திட்டமிடலுடனும் குழப்பிக் கொள்ளப்படுகிறது. நகரத் திட்டமிடுவோர் தெருக்கள், பொதுவிடங்கள் ஆகியவற்றின் பொது தரையமைவைத்த் வடிவமைப்பர்; ஆனால், நகராட்சிப் பொறியாளர் விரிவான வடிவமைப்புகளை மேற்கொள்கிறார். எடுத்துகாட்டாக, ஒரு புதிய தெருவை வடிவமைக்கும்போது, நகரத் திட்டமீட்டாளர் அந்த்த் தெருவின் பொது அமைவிட்த்தை மட்டுமே குறிப்பிடுவார். இதில் நில அமைவு, மேற்பரப்புச் சீராக்கம், நகர ஏந்துகள் மட்டுமே அமையும்; ஆனால், நகராட்சிப் பொறியாளர் சாலைக் குறிப்பீடுகள், நடைபாதைகள், நகராட்சியின் பணிகள், தெருவிளக்குகள் ஆகியவை பற்றிய விரிவான திட்டத்தை வகுப்பார்.

களப்பணிகள்[தொகு]

பெரிய கட்டிடங்களும் சிறப்பு நிலையங்களும் உருவாகும்போது, அதற்கு வேண்டிய ஏந்துகளும் வளாகங்களும், களப்பணிகளும் தேவப்படலாம். இவை நகராட்சி அகக் கட்டமைப்புகளை ஒத்தவையே. இதுபோன்ற வளர்ச்சிகள் அணுகுசாலைகள், ஊர்தி நிறுத்தவிடங்கள், குடிநீர் வழங்கல் (தீயணைப்பிகள் உட்பட), கள நீர்த் தூய்மிப்பு நிலையங்கள், கள வடிகால், வீழ்படிவுக் குட்டைகள் ஆகியன அமையலாம். பெரும்பாலான பொறியியல் அறிவுரை குழும்ங்களில் கட்டமைப்புப் பொறியியலும் நகர அகக் கட்டமைப்புகளும் தனிப் பிரிவுகளாகவே அமையும். பெரிய கட்டுமானத் திட்ட்த்தில், குடிசார் பொறியிய்ல் வடிவமைப்பு கட்டமைப்புப் பகுதி கட்டமைப்புப் பொறியாளர்களாலும் (இப்பகுதி கட்டிடங்களில் கவனம் குவிக்கிறது) மற்ற குடிசார் பணிகளின் பகுதி நகராட்சிப் பொறியாளர்களாலும் வடிவமைக்கப்படுகிறது.

தகவல் களங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jenkinson, Ian. “Municipal Engineer – the silver anniversary”. Proceedings of the Institution of Civil Engineers, Municipal Engineer, Vol 162, ME2, June 2009, pp65-68