நகடா
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி நக்டா, இராஜஸ்தான் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
நகடா முன்பு நாகதரா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மேவார் மன்னரான நாகாதித்யர் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் உருவாக்கிய நகரம். நகரைச்சுற்றி மலைகள் அரண் செய்கின்றன. அம்மலைகள் மேலே கோட்டை இருந்திருக்கிறது. ஆங்காங்கே அதன் இடிபாடுகள் இருக்கின்றன.
ஒரு காலத்தில் மேவார் நாட்டின் தலைநகரமாக இருந்த ஊர் இது. பத்தாம் நூற்றாண்டு வாக்கில் இந்த நகரம் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புராதன ஆலயங்களின் அடித்தளங்கள் கண்டடையப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது சகஸ்ரபாகு கோயில் ஆகும்.[1]