நகச்சுற்று
நகச்சுற்று | |
---|---|
ஒத்தசொற்கள் | நகத்தைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படும் தொற்று[1] |
![]() | |
சிறப்பு | தோல் மருத்துவம், அவசர மருத்துவம் |
வகைகள் | Acute and chronic |
நகச்சுற்று அல்லது நகச்சுத்தி (Paronychia) என்பது நகத்தைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படும் அழற்சியாகும். இது பொதுவாக பாக்டீரியா அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகிறது.
இது திடீரென்று (கடுமையாக) ஏற்படுகிறது என்றால் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியாவே காரணமாகும். படிப்படியாக (நாள்பட்டு) ஏற்படுகிறது என்றால் பொதுவாக கேண்டிடா அல்பிகான்ஸ் என்னும் பூஞ்சைகளால் ஏற்படுகின்றது. [2] [3] [4]
நகச்சுற்று ஏற்படக் காரணிகளாக அடிக்கடி கை கழுவுதல், நாள்பட்ட நகம் கடித்தல் பழக்கம், நகத்தைச் சுற்றிய விரல் திசுக்களில் ஏற்படும் நுண்ணிய சிராய்ப்பு, வெட்டுக்காயங்கள் ஆகியவை அடங்கும்.[2]
இதற்கான சிகிச்சையில் பொதுவாக பாக்டீரியா தொற்றுகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளும், பூஞ்சை தொற்றுகளுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளும் தேவைப்படும். சீழ் உருவாகினால், கிழித்து சீழை அகற்றவேண்டி வரலாம்.[2]
அறிகுறிகள்
[தொகு]ஆள்காட்டி விரலும், நடு விரல்களுமே பொதுவாக நகச்சுற்றியால் பாதிக்கப்படுகின்றன. அவற்றில் சிவத்தல், வீங்குதல், வலி உண்டாதல் ஏற்படும். சிலசமயங்களில் சீழும் வரக்கூடும்.[2]
காரணங்கள்
[தொகு]கடுமையான நகச்சுற்று பொதுவாக பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதற்கு பெரும்பாலும் நுண்ணுயிர் எதிர்ப்பி கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பியானது மேற்பூச்சு (தோலில் பயன்படுத்தப்படுகிறது) அல்லது வாய்வழி அல்லது இரண்டும் கொடுக்கபடுகிறது. நாள்பட்ட நகச்சுற்றியானது பெரும்பாலும் நகத்தைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களின் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது காரணமாக இருக்கலாம். ஆனால் இது பாக்டீரியா தொற்றுடனும் ஏற்படலாம். தொற்று தொடர்ச்சியாக இருந்தால், பெரும்பாலும் அதற்கு பூஞ்சையே காரணமாக இருக்கும். இதற்கு சிகிச்சையாக பூஞ்சை காளான் களிம்பு பூச்சு தேவைப்படும். [5]
நீரிழிவு நோய், மருந்துகளால் ஏற்பட்ட நோயெதிர்ப்புக் குறைபாடு, [6] அல்லது நீர்க்கொப்புளம் போன்ற உடல் நோய்களுடன் நகச்சுற்று ஏற்படக்கூடும். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paronychia: MedlinePlus Medical Encyclopedia". medlineplus.gov (in ஆங்கிலம்). Retrieved 26 April 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 James G. Marks; Jeffrey J. Miller (2013). "21. Nail disorders". Lookingbill and Marks' Principles of Dermatology E-Book (Fifth ed.). Elsevier Saunders. p. 256. ISBN 978-1-4557-2875-6.
- ↑ "Acute and chronic paronychia". Am Fam Physician 77 (3): 339–46. February 2008. பப்மெட்:18297959.
- ↑ Rockwell PG (March 2001). "Acute and chronic paronychia". Am Fam Physician 63 (6): 1113–6. பப்மெட்:11277548.
- ↑ "Doctor's advice Q: Whitlow (paronychia)". bbc.co.uk. https://www.bbc.co.uk/health/ask_the_doctor/whitlow.shtml.
- ↑ Paronychia~clinical at eMedicine
- ↑ "Nail disease in pemphigus vulgaris". Dermatol. Online J. 15 (7): 2. 2009. doi:10.5070/D34X05D6VH. பப்மெட்:19903430. http://escholarship.org/uc/item/4x05d6vh.