த நெக்லசு (சிறுகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"த நெக்லசு"
La Parure - Gil Blas.jpg
1893 அக்டோபர் 8 கில் பிளாசு இதழின் முன்னட்டையில் வெளியான லா பரூரே கதையின் வரைபடம்.
ஆசிரியர்மாப்பசான்
தொடக்கத் தலைப்பு"லா பரூரே"
நாடுபிரான்சு
வகை(கள்)சிறுகதை
வெளியீட்டாளர்லா பார்லூரே
வெளியிட்ட நாள்1884
ஆங்கிலப் பதிப்பு1982

வைர அணிகலன் (The Necklace) குய் டெ மாப்பசான் என்ற பிரெஞ்சு எழுத்தாளரால் இயற்றப்பட்ட ஒரு சிறுகதையாகும். லெ கௌலொஇச் என்ற பிரெஞ்சு செய்திதாளில் 17 பிப்ரவரி 1884ல் வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

"த நெக்லசு" கதாசிரியர் மாப்பசான்

"வைர அணிகலன்" என்பது மடில்டா லொய்சல் மற்றும் அவரது கணவரைக் குறிக்கும் கதையாகும். மடில்டா பெரிய சமுகப்பதவியிலும் தன்னிடம் நிறைய நகைகள் இருப்பதாகவும் கற்பனை செய்துக்கொள்வார். இவர் குறைந்த ஊதியம் எழுத்தராக பணிபுரியும் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். மடில்டா தன் அழகுக்கேற்ற தனக்கு வசதியான குடும்பம் இல்லையே என்று தினமும் வருந்துவார். ஒரு நாள் தன் கணவர் பொது நெறிமுறை கட்சி அமைச்சிடமிருந்து அழைப்பிதழைக் கொண்டுவந்தார். ஆனால் மடில்டாவுக்கோ தனக்கு அழகான உடையும் நகைகளும் இல்லையே என்று நினைத்தார். அதனால் லொய்சல் வேட்டை துப்பாக்கி வாங்குவதற்காக தான் சேமித்து வைத்துள்ள 400 பிராங்குகள் மடில்டாவிடம் உடை வாங்குவதற்கு கொடுத்தார். மடில்டா தன் தோழி ஜீன் ஃபாரச்டியரிடம் வைர நகையை கடன் வாங்கினார். விருந்துக்கு பிறகு அவர் வைர நகை தொலைந்துப்போய் விட்டதாக கண்டறியப்பட்டது. அவர் அதற்கு பதிலாக ஒரு விரைவான வழி கண்டறிய முயற்சித்தார். அவர் ஒரு கடைக்கு சென்று 36,000 பிராங்குகள் இருக்கும் இதே போன்ற வைரநகையை பிறரிடம் கடன் வாங்கித் தன் தோழியிடம் மீட்டினார். தன் கடனை அடைப்பதற்காக வீடு வீடாகச் சென்று வேலை செய்து வந்து கடனை அடைத்தார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு பூங்காவில் தனது தோழியான ஜீன் ஃபாரச்டியரை சந்தித்தார். அப்போது ஃபாரச்டியர் மடில்டாவைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியுற்றுத் தனக்கு வாங்கித் தந்த மாற்று வைரநகை போலியாகும். இதன் மதிப்பு வெறும் 500 பிராங்குகள் தான்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_நெக்லசு_(சிறுகதை)&oldid=3248340" இருந்து மீள்விக்கப்பட்டது