உள்ளடக்கத்துக்குச் செல்

த தேர்ட் மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த தேர்ட் மேன்
அமெரிக்க சுவரொட்டி
இயக்கம்கரோல் ரீட்
தயாரிப்பு
  • கரோல் ரீட்
  • அலெக்சாண்டர் கோர்டா[1]
  • டேவிட் ஓ. செல்ஸ்னிக்
திரைக்கதைகிரஃகாம் கிரீன்
இசைஆண்டன் காரஸ்
நடிப்பு
  • ஜோசப் காட்டன்
  • அலிடா வல்லி
  • ஆர்சன் வெல்ஸ்
  • டிரெவர் ஹோவர்ட்
ஒளிப்பதிவுராபர்ட் கிராஸ்கர்
படத்தொகுப்புஆஸ்வால்ட் ஹாஃபென்ரிச்டர்
கலையகம்லண்டன் ஃபிலிம்ஸ்
விநியோகம்
  • பிரிட்டிஷ் லயன் ஃபிலிம் கார்ப்பரேஷன் (ஐக்கிய இராச்சியம்)
  • செல்ஸ்னிக் ரிலீசிங் ஆர்கனசேசன்[2] (ஐக்கிய இராச்சியம்)
வெளியீடு1 செப்டம்பர் 1949 (1949-09-01)(ஐக்கிய இராச்சியம்)
2 பெப்ரவரி 1950(அமெரிக்கா)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடு
  • ஐக்கிய இராச்சியம்[2][3]
  • அமெரிக்கா[2][3]
மொழி
  • ஆங்கிலம்
  • ஜெர்மன்
மொத்த வருவாய்£277,549 (ஐக்கிய இராச்சியம்) (Error when using {{Inflation}}: |index=UK (parameter 1) not a recognized index.)[4]

த தேர்ட் மேன் (The Third Man) என்பது 1949-இல் கரோல் ரீட் இயக்கி, கிரஃகாம் கிரீன் எழுதிய ஒரு ஆங்கிலத் திரைப்படமாகும். இதில் ஹோலி மார்டின்சாக ஜோசப் காட்டன், அன்னா ஷிமிட்டாக அலிடா வல்லி, ஹாரி லைமாக ஆர்சன் வெல்ஸ், மேஜர் காலோவேயாக டிரெவர் ஹோவர்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வியன்னாவில் கதை நடக்கிறது. தன் நண்பரான ஹாரி லைமைத் தேடி வரும் அமெரிக்க எழுத்தாளர் ஹோலி மார்டின்சை மையமாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளது. ஆனால், லைம் இறந்துவிட்டதை அறிகிறார். லைமின் மரணத்தை விசாரிக்க வியன்னாவிலேயே தங்கும் மார்டின்ஸ், லைமின் காதலியான அன்னா ஷிமிட் மீது காதல் கொள்கிறார்.

வியன்னாவில் உள்ள சிதிலமடைந்த இடங்களைப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்திய பாணி பனிப்போரின் தொடக்கக்காலச் சூழலில் நிலவிய சோர்வையும் அவநம்பிக்கையையும் காட்டுகிறது.

கிரீன் திரைக்கதைக்கான ஒரு கருவாக ஒரு குறுநாவலை எழுதினார். இசையமைப்பாளர் அன்டன் காராஸின் தலைப்பு இசையமைப்பான " தி தேர்ட் மேன் தீம் " 1950 இல் பன்னாட்டு இசை தரவரிசையில் முதலிடம் பிடித்தது, அதுவரை அறியப்படாத கலைஞருக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்தது. தி தேர்ட் மேன் அதன் நடிப்பு, இசை, உணர்வுப்பூர்வமான ஒளிப்பதிவுக்காகப் போற்றப்பட்டு, எல்லா காலத்திலும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[5]

1999 ஆம் ஆண்டில், பிரித்தானிய திரைப்பட நிறுவனம் தி தேர்ட் மேன் திரைப்படத்தை எல்லா காலத்திலும் சிறந்த பிரித்தானியத் திரைப்படமாக தேர்ந்தெடுத்தது. 2011 ஆம் ஆண்டில், டைம் அவுட் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் இது இரண்டாவது சிறந்த பிரித்தானியத் திரைப்படமாக தரவரிசைப்படுத்தப்பட்டது. [6]

கதை

[தொகு]

மேற்கத்திய காகிதக்கூழ் புனைவுகளை எழுதும் அமெரிக்க எழுத்தாளரான ஹோலி மார்டின்ஸ், தன் சிறுவயது நண்பரான ஹாரி லைமைத் தேடி, நேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வியன்னாவின் பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு வருகிறார். ஆனால், லைம் சாலையைக் கடக்கும்போது ஒரு கார் மோதி இறந்துவிட்டதாக மார்டின்சிடம் கூறப்படுகிறது. லைமின் இறுதிச் சடங்கில், மார்டின்ஸ் பன்னாட்டுக் காவலகத்தின் ஒரு பகுதியான களப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இருவரைச் சந்திக்கிறார். அவர்களின் பெயர் சார்ஜென்ட் பெயின், மேஜர் காலோவே ஆகும். அவர்கள் மார்டின்ஸின் புதினங்களின் ரசிகரகளாவர். அந்த வாரம் நடக்கும் விழாவில் சொற்பொழிவாற்றுமாறு அவர்கள் மார்டின்சைக் கேட்டுக்கொள்கிறனர். விபத்தின்போது உடனிருந்த லைமின் நண்பரான "பரோன்" கர்ட்ஸைச் சந்திக்கிறார். விபத்துக்குப் பிறகு, தானும் மற்றொரு நண்பரான போபெஸ்குவும் லைமைச் சாலையின் ஓரமாகத் தூக்கிச் சென்றதாகவும், இறப்பதற்கு முன்பு மார்டின்ஸையும் தனது காதலியான நடிகை அன்னா ஷ்மிட்டையும் கவனித்துக்கொள்ளுமாறு லைம் தங்களைக் கேட்டுக்கொண்டதாக கர்ட்ஸ் மார்டின்சடம் கூறுகிறார்.

லைமின் மரணம் குறித்து மார்டின்சும் அண்ணாவும் விசாரிக்கும்போது, இறப்பதற்கு முன் லைமால் பேச முடிந்ததா என்பது குறித்தும், எத்தனை பேர் உடலைத் தூக்கிச் சென்றார்கள் என்பது குறித்த தகவல்கள் வேறுபடுவதை அவர்கள் உணர்கின்றனர். லைமின் குடியிருப்பில் இருந்த காவலாளி, அங்கே மூன்று பேர் உடலைத் தூக்கிச் சென்றதை தான் பார்த்ததாக அவர்களிடம் கூறுகிறார். அவர் மார்டின்சிடம் இரவு வாருங்கள், இரகசியங்களைப் பேசலாம் என்று கூறுகிறார். அதன்படி அவர்கள் காவலாளியிடம் மீண்டும் பேசுவதற்கு செல்கையில் அவர் கொல்லப்பட்டிடுகிறார். ஒரு கும்பல் மார்ட்டினசைத் துரத்துகிறது. அதனால் மார்டின்சும் அண்ணாவும் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடுகின்றனர். லைமின் மரணக் குறித்து விசாரிக்கும் மேஜர் காலோவேயை சந்திகும் மார்ட்டினசிடம், ஒரு அவர் இரகசியக் கோப்பை காட்டுகிறார். லைம் வியண்ணாவிங் தட்டுப்பாடாக இருந்த பென்சிலினை இராணுவ மருத்துவமனைகளிலிருந்து திருடி, அதில் தண்ணீர் கலந்து, பின்னர் கள்ளச் சந்தையில் விற்றிருக்கிறார். அதனால் பல குழந்தைகள் பலியானதையும், பலர் மன நலம் பாதிக்கபட்டதையும் காலோவே விளக்குகிறார். விரத்தியடைந்த மார்ட்டின்ஸ் ஊருக்கு கிளம்ப முடிவெடுக்கிறார்.

போதையில் இருந்த மார்டின்ஸ், அண்ணாவைச் சந்தித்து, தன் காதலை அவளிடம் கூறுகிறார். ஒருவன் அவளுடைய வீட்டு வாசலை நோக்கி சாலையைக் கடந்து வருகிறான். ஆனால் சன்னலில் மார்டின்சைக் கண்டதும் விலகிச் சென்றுவிடுகிறான். பின்னர் மார்டின்ஸ் வியன்னாவின் இருண்ட தெரு ஒன்றில் நடந்து செல்கிறார். அப்போது அண்ணாவின் பூனை யாரோ ஒருவரின் காலணிகளுக்கு அருகே விளையாடிக்கொண்டிருப்பதைக் கவனிக்கிறார். இருண்ட வாசலிலிருந்து யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்கிறார். ஒரு கணநேர ஒளிக்கீற்றில், அந்த மனிதர் லைம் என்பதை மார்டின்ஸ் கண்டுகொள்கிறா். உயிரோடு திரும்பிய தன் நண்பனை அவர் காவல் துறையில் காட்டிக் கொடுத்தாரா, ஆலி லைமின் முடிவு என்ன என்பதே கதையின் முடிவு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alexander Korda Credits". -B.F.I. Accessed 10 January 2016
  2. 1 2 3 "The Third Man (1949)". AFI Catalog of Feature Films. Retrieved 7 October 2023.
  3. 1 2 "The Third Man (1949)". British Film Institute. Archived from the original on 2 March 2016. Retrieved 22 March 2020.
  4. Vincent Porter, 'The Robert Clark Account', Historical Journal of Film, Radio and Television, Vol 20 No 4, 2000 p489
  5. Halliwell, Leslie and John Walker, ed. (1994). Halliwell's Film Guide. New York: Harper Perennial. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-273241-2. p 1192.
  6. "100 best British films: the full list". Time Out (London). 9 February 2011 இம் மூலத்தில் இருந்து 13 February 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110213045530/https://www.timeout.com/london/feature/886/100-best-british-films-the-full-list.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_தேர்ட்_மேன்&oldid=4523465" இலிருந்து மீள்விக்கப்பட்டது