உள்ளடக்கத்துக்குச் செல்

த ட்ரசர் ஆப் த சியரா மட்ரே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த ட்ரசர் ஆப் த சியரா மட்ரே
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்யோவான் ஹஸ்டன்
தயாரிப்புஹென்றி பிளாங்க்
திரைக்கதையோவான் ஹஸ்டன்
இசைமாக்ஸ் ஸ்டெயினர்
நடிப்பு
  • அம்ப்ரே போகார்ட்
  • வால்டர் ஹஸ்டன்
  • டிம் ஹோல்ட்
  • புரூஸ் பென்னட்
ஒளிப்பதிவுடெட் டி. மெக்கோர்ட்
படத்தொகுப்புஓவன் மார்க்ஸ்
கலையகம்வார்னர் புரோஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்
வெளியீடுசனவரி 6, 1948 (1948-01-06)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$2.5 மில்லியன் (17.9 கோடி)[1][2]
மொத்த வருவாய்ஐஅ$4.1 மில்லியன் (29.3 கோடி)[1]

த ட்ரசர் ஆப் த சியரா மட்ரா என்பது 1948ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அமெரிக்க மேற்கத்திய திரைப்படம் ஆகும். இதை யோவான் ஹஸ்டன் இயக்கினார். 1927ஆம் ஆண்டு வெளிவந்த இதே பெயரைக் கொண்ட நாவலை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த நாவலை பி. ட்ராவன் என்பவர் எழுதியிருந்தார். 1925ஆம் ஆண்டு நடைபெறுவதாக இக்கதை அமைக்கப்பட்டிருந்தது. வறுமையில் வாடும் இரண்டு நபர்கள் (அம்ப்ரே போகார்ட் மற்றும் டிம் ஹோல்ட்) நரைத்த ஒரு முதியவருடன் (இயக்குனரின் தந்தை வால்டர் ஹஸ்டன்) இணைந்து மெக்சிகோ நாட்டில் தங்கத்தை தேடுவதே இப்படத்தின் கதையாகும்.

ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே படம் பிடிக்கப்பட்ட முதல் ஹாலிவுட் தயாரிப்புகளில் இத்திரைப்படமும் ஒன்றாகும். இது மெக்சிகோவில் படம் எடுக்கப்பட்டது. எனினும் பல காட்சிகள். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. 1990ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க தேசிய திரைப்பட பதிவில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு திரைப்படமாக இதை காங்கிரசு நூலகமானது தேர்ந்தெடுத்தது. இத்திரைப்படத்தை "கலாச்சார அல்லது வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த" திரைப்படமென கூறியது.[3]

கதை

[தொகு]

1925ஆம் ஆண்டு தம்பிகோ என்ற மெக்சிகோ பட்டணத்தில் ப்ரெட் சி. டோப்சு மற்றும் பாப் கர்டின் எனப்படும். இரண்டு அமெரிக்க வழிப்போக்கர்கள் தொழிலாளர்களை கான்ட்ராக்ட் முறையில் பணி அமர்த்தும் பேட் மெக்கார்மிக்கால் வேலைக்கு எடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு ஐக்கிய அமெரிக்க டாலர் என்று சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களது பணியானது எண்ணெய் எடுக்கும் இயந்திரங்களை கட்டமைப்பதற்கு உதவுவதாகும். வேலை முடிக்கப்பட்டவுடன் அவர்கள் தம்பிகோவிற்கு திரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் தராமல் மெக்கார்மிக் சென்று விடுகிறார்.

இருவரும் ஹோவர்ட் என்கிற ஒரு முதியவரை ஒரு வீட்டில் சந்திக்கின்றனர். முன்னாள் சுரங்க தொழிலாளியான அந்த முதியவர் தங்கம் இருப்பதை பற்றியும் அதை எடுப்பதை பற்றியும் அவர்களிடம் பேசுகிறார். ஒரு உணவகத்தில் டோப்சு மற்றும் கர்டின் மெக்கார்மிக்கை சந்திக்கின்றனர். ஒரு சண்டைக்கு பிறகு தங்களது ஊதியத்தை திரும்ப பெறுகின்றனர். டோப்சு லாட்டரியில் ஒரு சிறு பரிசை வெல்கிறார். அவர், கர்டின் மற்றும் ஹோவர்ட் ஆகியோருக்கு தற்போது நாட்டின் உள் பகுதிகளுக்கு சென்று தேடுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான பணம் கிடைக்கிறது.

தம்பிகோவிலிருந்து இரயில் மூலம் புறப்படும் அந்த மூவரும் தங்க தொப்பி என்று அழைக்கப்படும் ஒரு கொள்ளையனால் தலைமை தாங்கப்படும் கொள்ளைக்கூட்ட தாக்குதலை முறியடிக்கின்றனர். துராங்கோ என்ற நகரத்திற்கு வடக்கே மூவரும் தொலை தூரத்தில் உள்ள சியரா மட்ரா மலைகளுக்கு செல்கின்றனர். ஹோவர்ட் அந்த மூவரில் கடினமானவராகவும், மிகுந்த அறிவாளியாகவும் ஆனவர் என நிரூபிக்கிறார். பலநாட்கள் கடினமான பயணத்திற்கு பிறகு மற்றவர்கள் கவனிக்காமல் விட்டுச்சென்ற தங்கம் இருக்கும் இடத்தை ஹோவர்ட் கண்டுபிடிக்கிறார்.

கடினமான சூழ்நிலையில் மூவரும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். தங்கத்தை சேர்க்கின்றனர். ஆனால் தங்கம் அதிகமாக ஆரம்பிக்கும் போது டோப்சு மற்ற இருவர் மீதும் மிகுந்த சந்தேகத்துக்கு உள்ளாகிறார். தங்க துகள்களை உடனே பிரித்துக் கொள்வது என்றும் தத்தமது பங்குகளை மறைத்து வைத்துக் கொள்வது என்றும் அவர்கள் முடிவெடுக்கின்றனர்.

துராங்கோ நகரத்திற்கு. தீர்ந்து போன பொருட்களை வாங்கச் செல்லும் கர்டின் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது டெக்சாசைச் சேர்ந்த கோடி என்ற நபரால் கவனிக்கப்படுகிறார். ரகசியமாக முகாமுக்குச் சென்று கொண்டிருக்கும் கர்டினை கோடி பின் தொடர்கிறார். கோடி அம்மூவரையும் காணும் பொழுது அவர்கள் தாங்கள் செய்யும் செயலைப் பற்றி பொய் கூறுகின்றனர். ஆனால் கோடி ஏமாறவில்லை. அவர்களது பணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். தனக்கும் பங்கு தருமாறு கேட்கிறார். ஹோவர்ட், கர்டின் மற்றும் டோப்சு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கோடியை கொல்வதென வாக்களிக்கின்றனர். முடிவெடுத்து கொண்டிருக்கும் பொழுது தங்க தொப்பி என்றழைக்கப்படும் கொள்ளைக் கூட்டத் தலைவனும் அவனது கொள்ளையர்களும் கைகளில் துப்பாக்கிகளுடன் அங்கு வருகின்றனர். தங்களை மெக்சிகோ காவலர்கள் என்று கூறுகின்றனர். சச்சரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது. கோடி கொல்லப்படுகிறான். திடீரென உண்மையான மெக்சிகோ காவலர்கள் அங்கு வருகின்றனர். தங்க தொப்பியையும் அவனது கும்பலையும் துரத்துகின்றனர். இறந்து போன கோடியின் உடமைகளை அம்மூவரும் பரிசோதிக்கின்றனர். அதில் அவனது மனைவியிடமிருந்து வந்த ஒரு கடிதம் இருப்பதைக் காண்கின்றனர். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கோடி அலைகிறான் என்பது அவர்களுக்கு புரிகிறது.

மிகுந்த உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட. ஒரு பையனுக்கு உதவுவதற்காக உள்ளூர் கிராமத்தார்கள் ஹோவர்டை கூட்டிச் செல்கின்றனர். பையன் குணமடையும் பொழுது அடுத்த நாள் கிராமத்தார்கள் ஹோவர்டை தங்களுடன் வருமாறு. அழைக்கின்றனர். அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அவர் தன்னுடைய உடைமைகளை டோப்சு மற்றும் கர்டினிடம் விட்டுச் செல்கிறார். அவர்களை பிறகு சந்திப்பதாக கூறுகிறார். டோப்சு மட்டும் கர்டின் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபடுகின்றனர். கடைசியாக ஓர் இரவு டோப்சு கர்டினை சுடுகிறான். அனைத்து தங்கத்தையும் எடுத்துக்கொள்கிறான். இருந்தும் கர்டின் இறக்கவில்லை. தவழ்ந்து சென்று இரவு நேரத்தில் ஒரு இடத்தில் பதுங்குகிறான்.

கர்டின் சென்றுவிட்டது அறிந்த டோப்சு தப்பித்து ஓடுகிறான். ஆனால் குடிநீர் அருந்தும் ஒரு குட்டையின் அருகில் தங்க தொப்பி மற்றும் அவனது. கொள்ளையர்கள் அவனை மறைந்திருந்து தாக்குகின்றனர். முதலில் டொப்சை வைத்து விளையாட்டு காட்டும் அவர்கள் பிறகு கொல்கின்றனர். சிறிய சாக்குப் பைகளில் இருக்கும் தங்க துகள்களை மணல் என்று நினைக்கும் கொள்ளையர்கள் அப்பைகளை கிழித்து கீழே போடுகின்றனர். டோப்சிடம் இருந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். வேகமான காற்று அடிக்கும் பொழுது தங்க துகள்கள் காற்றில் மறைந்து போகின்றன. அதே நேரத்தில் கர்டினை மெக்சிகோ இந்தியர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஹோவார்டின் கிராமத்திற்கு அவனை எடுத்துச் செல்கின்றனர். அங்கு கர்டின் உடல் நலம் பெறுகிறார்.

தங்க தொப்பி கும்பல் டோப்சிடமிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை பட்டணத்தில் விற்க முயல்கின்றனர். அப்போது டோப்சின் உடைமைகளை கொள்ளையர்கள் அணிந்துள்ளனர். அதிலிருந்த பெயர்களை ஒரு குழந்தை அடையாளம் காண்கிறது. அதிகாரிகளிடம் அதனை தெரிவிக்கிறது. கொள்ளையர்கள் பிடிக்கப்படுகின்றனர். காவலர்களால் கொல்லப்படுகின்றனர்.

ஹோவர்ட் மற்றும் கர்டின் ஒரு மணல் புயலின் போது துராங்கோவுக்கு திரும்புகின்றனர். தங்களது பொதி சுமக்கும் விலங்குகளை ஓட்டிச்செல்கின்றனர். அங்கு வெற்றுப் பைகள் மட்டுமே இருப்பதை காண்கின்றனர். முதலில் தங்களது இழப்பை கண்டு மனம் உடையும் அவர்கள், முதலில் ஹோவர்ட் பிறகு கர்டின் என தங்களது நிலையை நினைக்கின்றனர். பிறகு சத்தமாக சிரிக்க ஆரம்பிக்கின்றனர். ஹோவர்ட் கிராமத்திற்கு திரும்புவது என முடிவெடுக்கிறார். ஒரு நிரந்தரமான இடத்தில் தங்க ஒப்புக்கொள்கிறார். அங்கு தனக்கு அளிக்கப்பட்ட மரியாதையும் ஏற்றுக்கொள்கிறார். தன்னிடம் மீதமிருந்த பொருட்களை கர்டின் விற்கிறார். ஐக்கிய அமெரிக்காவிற்குத் திரும்பி கோடியின் விதவையை தேடுவது என முடிவெடுக்கிறார். கர்டின் அந்த இடத்தில் இருந்து புறப்படும்போது புகைப்படக் கருவியானது ஒரு கள்ளிச் செடியை காட்டுகிறது. கர்டின் அங்கிருந்து செல்கிறார். அங்கு மற்றொரு வெற்று பை கிடக்கிறது.

ஹோவர்டாக வால்டர் ஹஸ்டன்

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 Warner Bros financial information in The William Shaefer Ledger. See Appendix 1, Historical Journal of Film, Radio and Television, (1995) 15:sup1, 1–31 p 28 DOI: 10.1080/01439689508604551
  2. The Treasure of the Sierra Madre, Filmsite Movie Review. AMC's FilmSite. Retrieved April 15, 2013.
  3. Gamarekian, Barbara (October 19, 1990). "Library of Congress Adds 25 Titles to National Film Registry". The New York Times. https://www.nytimes.com/1990/10/19/movies/library-of-congress-adds-25-titles-to-national-film-registry.html.