த டிஃபையன்ட் ஒன்ஸ்
| த டிஃபையன்ட் ஒன்ஸ் | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | ஸ்டான்லி கிராமர் |
| தயாரிப்பு | ஸ்டான்லி கிராமர் |
| கதை | ஹரோல்ட் ஜேக்கப் ஸ்மித் நெட்ரிக் யங் |
| இசை | எர்னஸ்ட் கோல்ட் |
| நடிப்பு | டோனி கர்டிஸ் சிட்னி புவத்தியே தியோடோர் பைகெல் சார்லஸ் மெக்ரா லான் சேனி கிங் டோனவன் கெவின் காஃப்லின் காரா வில்லியம்ஸ் |
| ஒளிப்பதிவு | சாம் லெவிட் |
| படத்தொகுப்பு | ஃபிரெட்ரிக் நட்சன் |
| கலையகம் |
|
| விநியோகம் | யனைட்டட் ஆர்டிஸ்ட் |
| வெளியீடு | சூன் 29, 1958 (பெர்லின்[1]) செப்டம்பர் 27, 1958 (United States) |
| ஓட்டம் | 96 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $778,000[2] |
| மொத்த வருவாய் | $2.75 மில்லியன் (அமெரிக்காவிலும், கனடாவிலும்)[3][4] |
தி டிஃபையன்ட் ஒன்ஸ் (The Defiant Ones) என்பது 1958-இல் ஸ்டான்லி கிராமரால் தயாரித்து, இயக்கப்பட்ட ஒரு அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் முதலில் நாதன் ஈ. டக்ளஸ் என்ற பெயரில் வெளியான நெட்ரிக் யங்கின் கதையைத் தழுவி ஹரோல்ட் ஜேக்கப் ஸ்மித்தால் எழுதப்பட்டது. இதில் டோனி கர்டிஸ் மற்றும் சிட்னி புவத்தியே ஆகியோர், ஒன்றாக விலங்கிடப்பட்ட, தப்பி ஓடும் இரு கைதிகளாக (ஒருவர் வெள்ளையர், மற்றொருவர் கறுப்பர்) நடித்துள்ளனர். அவர்கள் உயிர் பிழைப்பதற்காக ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.
தி டிஃபையன்ட் ஒன்ஸ் திரைப்படம், 1958 ஜூன் 29 அன்று நடைபெற்ற 8வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அவ்விழாவில் சிறந்த நடிகருக்கான வெள்ளிக் கரடி விருதை போய்ட்டியர் பெற்றார். செப்டம்பர் 27 அன்று அமெரிக்காவில் வெளியான இத்திரைப்படம், திரைப்பட விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இது சிறந்த ஒளிப்பதிவு (கறுப்பு-வெள்ளை) மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் அகாதமி விருதுகளை வென்றது. மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் போய்ட்டியர், கர்டிஸ் இருவருக்கும் சிறந்த நடிகர் விருது உட்பட மேலும் ஏழு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
கதை
[தொகு]1950-களின் பிற்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதியில் ஒரு இரவு, கைதிகளை ஏற்றிச் செல்லுகிறது ஒரு லாரி. அது மற்றொரு லாரியுடன் இடிப்பதைத் தவிர்ப்பதற்காகத் திடீரெனத் திரும்பும்போது, ஒரு வேலியில் மோதி நிற்கிறது. மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி பார்க்கும்போது, அதில் இருந்த இரு கைதிகள் தப்பித்திருப்பதை அறிகின்றனர். அவர்களில் ஒருவர் அமெரிக்க கறுப்பினத்தவரான போய்ட்டியர், மற்றொருவர் வெள்ளையரான கர்டிசு ஆவர். வெள்ளையினத்தவரையும், கறுப்பினத்தவரையும் ஒரே சங்கிளியால் பிணைத்த சிறை வார்டனை கிண்டலடிக்கின்றனர். மேலும் "ஒருவர் மீது ஒருவர் இன வெறுப்பு கொண்ட அவர்கள் ஐந்து மைல் தூரம் செல்வதற்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொன்றுவிடுவார்கள்" என நம்பினர். இருப்பினும், மறுநாள் காலை அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக வேட்டை நாய்களுடன் ஒரு பெரிய குழு அனுப்பப்படுகிறது. காணாமல் போன அந்த இருவர் நோயாக் கல்லன் மற்றும் ஜானி "ஜோக்கர்" ஜாக்சன் ஆவர். தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொண்டவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததால், ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். துவக்கத்தில், அவர்களின் ஒத்துழைப்பு தற்காப்புக்காக இருந்தது, ஆனால் படிப்படியாக, அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கத் தொடங்குகின்றனர்.
கல்லனும் ஜோக்கரும் மோசமான வானிலையும் கடினமான நிலப்பரப்பு வழியாகத் தப்பி ஓடுகிறனர். வழியில் ஒரு முகாமில் சிறிது நேரம் தங்கி, சங்கிலியை உடைப்பதற்கும், உணவுக்காக ஒரு கடையில் நுழைகின்றனர். அப்போது ஊர் மக்களிடம் சிக்கி, கடுமையாக தாக்கப்படுகிறனர். தன் அண்டை அயலாரின் இரத்த வெறியைக் கண்டு அதிர்ச்சியடைந்த "பிக்" சாம் (லான் சேனி) என்பவர் தலையிட்டு அவர்கள் காப்பாற்றுகிறார். மேலும் கைதிகளை அடைத்து வைத்து, மறுநாள் காலை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு சாம் அங்கிருந்தவர்களைச் சம்மதிக்க வைக்கிறார். தானும் ஒரு காலத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதியாக இருந்ததால், அன்றிரவு அவர் இரகசியமாக அவர்களை விடுவிக்கிறார்.
மலைப் பகுதியில் தப்பி ஓடும்போது, அவர்கள் பில்லி என்ற சிறுவனைச் சந்திக்கின்றனர். அவனும் கணவனால் கைவிட்டு தனித்து வாழ்பவளான அவன் தாயுடன் வாழ்பவன். அவன் வீட்டிற்கு தங்களை அழைத்துச் செல்லும்படி அவர்கள் அவனை வற்புறுத்துகிறனர். அங்கு இறுதியில் சுத்தி உளியைக் கொண்டு தங்களை பிணைத்திருந்த சங்கிலியை உடைக்கின்றனர். அவர்கள் அங்கே இரவைக் கழிக்கின்றனர். கணவனைப் பிரிந்து தனிமையில் வாடும் அந்தப் பெண் ஜோக்கர் மீது காதல் கொண்டு, அவனுடன் தப்பி ஓட விரும்புகிறாள். இரயில் தண்டவாளங்களை அடைய குறுக்குவழியாக ஒரு சதுப்பு நிலத்தின் வழியாகச் செல்ல அவள் கல்லனுக்கு வழி காட்டுகிறாள். பின்னர் அவளும் ஜோக்கரும் அவளது காரில் புறப்பட்டுச் செல்ல இருக்கின்றனர். கல்லன் சென்ற பிறகு, அது உயிரைப் பறிக்கும் ஆபத்தான பாதை என்றும், அவன் காவல் துறையினரிடம் தங்களைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க அவ்வாறு செய்ததாகவும் கூறுகிறாள். அதிர்சியடையும் ஜோக்கர், தன் நண்பனைக் காப்பாற்ற ஓடுகிறான். இதனால் ஆத்திரமடைந்த அவளின் மகன் பில்லி துப்பாக்கியால் ஜோக்கின் தோளில் சுடுகிறான்.
காயமடைந்த ஜோக்கர், கல்லனைச் சந்தித்து சதுப்பு நிலத்தில் உள்ள ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறான். ஷெரிஃப் மேக்ஸ் முல்லர் தலைமையிலான குழுவினர் இருவரையும் பிடிக்க நெருங்கி வருகிறன்றனர். இருவரும் ஓடும் தொடருந்தில் ஏற முயற்சிக்கின்றனர். கல்லன் அதில் ஏறிவிடுகிறான். கல்லன் ஜோக்கரை வண்டியில் ஏற்ற தன் கையை நீட்டுகிறான். அவர்களின் கைகள் இணைகின்றன, ஆனால் கல்லனால் ஜோக்கரை மேலே இழுக்க முடியவில்லை. இருவரும் தரையில் உருண்டு விழுகிறனர். மிகவும் சோர்வடைந்து ஓட முடியாத அவர்கள், தங்களைத் துரத்துபவர்களுக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்கிறனர். இருவரும் புன்னகையுடன் ஒரு சிகரெட்டை மாறி, மாறிப் புகைக்கின்றனர். கல்லன் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறான். அங்கு ஒரும் ஷெரிஃப் அவர்களைக் காண்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Myers, Harold (2 July 1958). "Political Tensions, No U.S. Stars Mark Opening Of Berlin Film Fest". Variety. p. 2. Retrieved 21 January 2021.
- ↑ Balio, Tino (1987). United Artists: The Company That Changed the Film Industry. University of Wisconsin Press. p. 143. ISBN 978-0299114404.
- ↑ "Vagaries of Overseas Playoff". Variety. May 27, 1959. p. 3. Retrieved June 16, 2019 – via இணைய ஆவணகம்.
- ↑ "Top Grossers of 1958". Variety. 7 January 1959. p. 48. Please note figures are for US and Canada only and are domestic rentals accruing to distributors as opposed to theatre gross