உள்ளடக்கத்துக்குச் செல்

த சூட்டிங் ஸ்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


த சூட்டிங் ஸ்டார் (ஆங்கிலம் -The Shooting Star) ( பிரெஞ்சு மொழி: L'Étoile mystérieuse என்பது பெல்ஜிய கார்ட்டூனிஸ்ட் ஹெர்கேவின் காமிக்ஸ் தொடரான தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டினின் பத்தாவது தொகுதி ஆகும். பெல்ஜியத்தின் முன்னணி பிராங்கோஃபோன் செய்தித்தாளில் இந்த கதை தினமும் தொடராக வெளி வந்தது. அக்டோபர் 1941 முதல் மே 1942 வரை இரண்டாம் உலகப் போரின்போது பெல்ஜியத்தை ஜெர்மன் ஆக்கிரமித்ததற்கு இடையே நடக்கும் கதையாகும். பெல்ஜிய இளம் நிருபர் டின்டின், தனது நாய் ஸ்னோவி மற்றும் நண்பர் கேப்டன் ஹாடோக் ஆகியோருடன் ஆர்க்டிக் பெருங்கடலுக்குள் ஒரு சர்வதேச பயணத்தில் பூமியில் விழுந்த ஒரு விண்கல்லைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு விஞ்ஞான பயணம் மேற்கொள்கிறார்.

த சூட்டிங் ஸ்டார் வணிகரீதியான வெற்றியாக அமைந்தது. தொடர் முடிவிற்குப் பிறகு இது காஸ்டர்மேன் என்ற புத்தக வடிவில் வெளியிடப்பட்டது; முதல் டின்டின் தொகுதி முதலில் 62 பக்க முழு வண்ண வடிவத்தில் வெளியிடப்பட்டது. ஹெர்கே "தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டினுடன், "தி சீக்ரெட் ஆஃப் தி யூனிகார்ன்" என்பதிலும் தொடர்ந்தார். அதே நேரத்தில் இந்தத் தொடர் பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் பாரம்பரியத்தின் வரையறுக்கப்பட்ட பகுதியாக மாறியது. த சூட்டிங் ஸ்டார் ஒரு கலவையான விமர்சன வரவேற்பைப் பெற்றது. மேலும் அதன் வில்லனின் ஆண்டிசெமிடிக் சித்தரிப்பு காரணமாக இந்தத் தொடரில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களில் ஒன்றானது. இந்த கதை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த பெல்விஷன் அனிமேஷன் தொடர்களான ஹெர்கின் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டின் மற்றும் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் தொடரான தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டின் எலிப்ஸ் மற்றும் நெல்வானா" ஆகியவற்றைத் தழுவி எடுக்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

[தொகு]

ஒரு மாபெரும் விண்கல் பூமியை நெருங்குகிறது என்று பேராசிரியர் டெசிமஸ் ஃபோஸ்டல் தனது ஆய்வகத்திலிருந்து கண்டுபிடிக்கிறார். அவரும் தீர்க்கதரிசியுமான பிலிப்புலஸும் விண்கல் பூமியைத் தாக்கி உலகின் முடிவை ஏற்படுத்தும் என்று கணிக்கின்றனர். ஆனால்,விண்கல் பூமியை தாக்காமல் அதன் ஒரு பகுதி ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்குகிறது. பேராசிரியர் ஃபோஸ்டல் அப்பொருளை ஃபோஸ்ட்லைட் என்று பெயரிடுகிறார்.. மேலும் ஐரோப்பிய விஞ்ஞானிகளின் குழுவினருடன் அதைக் கண்டுபிடிக்க முனைகிறார். டின்டின் மற்றும் ஸ்னோவியுடன், டின்டினின் நண்பர் கேப்டன் ஹாடோக்கால் பாதுகாக்கப்பட்டு வரும் [1] துருவ பயணக் கப்பலான அரோராவில் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கிடையில், மற்றொரு குழு, நிதியாளர் திரு. போல்விங்கலின் ஆதரவுடன் பியரிஎன்ற துருவப் பயணக் கப்பலில் புறப்படுகிறது எனவே, இந்த பயணம் விண்கல்லில் தரையிறங்குவதற்கான ஒரு பந்தயமாக மாறுகிறது. புறப்பட்ட நாளில், போல்விங்கெல் அரோராவில் டைனமைட்டை வைத்துள்ளார் ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் கப்பலில் வீசப்படுகிறது. வட கடலில், அரோரா கிட்டத்தட்ட போல்விங்கலின் கப்பலுடன் மோத இருப்பதைக் கண்டு ஹாடோக் சாமார்த்தியமாக அதன் வழியிலிருந்து விலகுகிறார். ஐஸ்லாந்திய துறைமுகமான அகுரேரியில் மேலும் பின்னடைவுகள் ஏற்படுகின்றன. ஹாடோக்கிற்கு தனது கப்பலில் எரிபொருள் போதுமானதா இ்ல்லை என்று அறிகிறார். அவரும் டின்டினும் அவரது பழைய நண்பரான "கேப்டன் செஸ்டரை"க் சந்திக்கிறார்கள். அவர் "போல்விங்கலு"க்கு சொந்தமான (எரிபொருள் ஏகபோகத்தைக் கொண்டுள்ள) "கோல்டன்" எண்ணெய் நிறுவனத்திடம் ஏராளமான எரிபொருள் இருப்பதையும் தெரியப்படுத்துகிறார். பின்னர் மூவரும் செஸ்டரின் கப்பலான சிரியஸி"லிருந்து அரோராவுக்கு ரகசியமாக ஒரு குழாய் பதிக்கிறார்கள். இதனால் கோல்டன் ஆயில் நிறுவனத்திலிருந்து தங்களுக்குத் தேவையான எரிபொருளை ரகசிய வழியில் பெறுகிறார்கள். [2] பின்னர், இந்தக்குழு விண்கல்லை கண்டுபிடித்தார்களா? என்பது மீதிக்கதையாகும். [3]

வெளியீடு

[தொகு]

அக்டோபர் 20, 1941 முதல் 21 மே 1942 வரை "த சூட்டிங் ஸ்டார்" தினமும் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது [10] த சூட்டிங் ஸ்டார் முதல் டின்டின் சாகசமாகும், இது தினசரியில் முழுவதுமாக தொடர் கதையாக வெளி வந்தது. [4] முந்தைய அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டினைப் போலவே, இந்த கதையும் பின்னர் பிரான்சில் கத்தோலிக்க செய்தித்தாளான் கோர்ஸ் வைலண்ட்ஸில் ஜூன் 6, 1943 இல் தொடராக வெளியானது. . [5]

உசாத்துணை

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]

நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சூட்டிங்_ஸ்டார்&oldid=3592747" இலிருந்து மீள்விக்கப்பட்டது