உள்ளடக்கத்துக்குச் செல்

த சீட் (1915 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த சீட்
திரைப்பட விளம்பரச் சுவரொட்டி
இயக்கம்செசில் பி. டி மில்
தயாரிப்புசெசில் பி. டி மில்
கதைஎக்டர் டர்ன்புல்
ஜீனி மேக்பெர்சன்
நடிப்புபேன்னி வார்டு
செசூ அயகாவா
ஜாக் டீன்
ஒளிப்பதிவுஆல்வின் வைகாஃப்
படத்தொகுப்புசெசில் பி. டி மில்
கலையகம்ஜெஸ்ஸி எல். லாஸ்கி ஃபீச்சர் பிளேஸ் கம்பெனி
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுடிசம்பர் 13, 1915 (1915-12-13)
ஓட்டம்59 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஅமைதித் திரைப்படம் (ஆங்கிலத் துணையுரை)
ஆக்கச்செலவு$17,311[1]
த சீட் (முழுத் திரைப்படம், 1918 மறு வெளியீடு)

த சீட் (The Cheat) என்பது செசில் பி. டிமில் இயக்கத்தில் 1915-ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மௌன நாடகத் திரைப்படமாகும். பென்னி வார்டு, செசு அயகாவா, வார்டின் நிஜ வாழ்க்கை கணவர் ஜாக் டீன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2]

கதைச் சுருக்கம்

[தொகு]

எடித் ஹார்டி என்ற செல்வந்தச் சமூகப் பெண், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த தொண்டு நிறுவன நிதியிலிருந்து 10,000 டாலர்களை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார். ஆனால் அந்த முதலீடு தோல்வியடைந்து பணம் முழுவதையும் இழக்கிறார். இழந்தப் பணத்தை மீண்டும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில், செல்வந்த வணிகரான டோரியிடம் உதவி கோருகிறார். டோரி அவருக்குத் தேவையான பணத்தை வழங்குகிறார்.

சில காலத்திற்குப் பிறகு, தனது கணவர் ரிச்சர்டின் உதவியால் எடித் அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முயல்கிறார். ஆனால் டோரி பணத்தை ஏற்க மறுத்து, அதற்குப் பதிலாக எடித்திடம் தனிப்பட்ட ஆதரவை எதிர்பார்க்கிறார். அவரது வற்புறுத்தலால் அச்சமடைந்த எடித், தற்காப்பிற்காக டோரியைத் துப்பாக்கியால் சுடுகிறார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றச்சாட்டு தவறுதலாக ரிச்சர்டின் மீது விழுகிறது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். விசாரணையின் போது எடித் உண்மையை வெளிப்படுத்துகிறார். அதன் விளைவாக ரிச்சர்ட் விடுவிக்கப்படுகிறார். தவறான முடிவுகளும் அவற்றின் எதிர்விளைவுகளும் மனித வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது.

கதை மாந்தர்கள்

[தொகு]
  • எடித் ஆர்டியாக பென்னி வார்டு
  • இசூரு தோரியாக செசு அயகாவா (அசல் வெளியீடு/ஹாகா அரகாவ் (1918 மறு வெளியீடு)
  • ரிச்சர்ட் ஹார்டியாக ஜாக் டீன்
  • ஜோன்சு கதாபாத்திரத்தில் ஜேம்ஸ் நீல்
  • தோரியின் வேலெட்டாக யுடாகா அபே
  • மாவட்ட வழக்கறிஞராக டானா ஓங்
  • திருமதி ரெனால்ட்ஸாக ஏசல் சைல்டர்சு
  • ஆர்தர் எச். வில்லியம்ஸ்-நீதிமன்ற நீதிபதி
  • நீதிமன்ற அறைப் பார்வையாளராக ரேமண்ட் ஹட்டன்
  • நீதிமன்ற அறைப் பார்வையாளராக டிக் லா ரெனோ
  • ஹார்டியின் செயலாளராக லூசியன் லிட்டில்ஃபீல்ட்

தயாரிப்பு மற்றும் வெளியீடு

[தொகு]

த சீட், வில்ஃப்ரெட் பக்லேண்ட் கலை இயக்கத்தைக் கையாண்டார் .[3]

வெளியான பிறகு, த சீட் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தின் பட்ஜெட் $17,311 ஆகும். இது உள்நாட்டில் $96,389 மற்றும் வெளிநாடுகளில் $40,975 வருமானம் ஈட்டியது. இசுகாட் ஐமானின் எம்பயர் ஆஃப் ட்ரீம்சு தி எபிக் லைஃப் ஆஃப் சிசில் பி. டிமில் படி, இந்தத் திரைப்படம் $16,540 செலவில் தயாரிக்கப்பட்டு, $137,364 வருமானம் ஈட்டியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Eyman, Scott (2010). Empire of Dreams: The Epic Life of Cecil B. DeMille. Simon and Schuster. p. 113. ISBN 978-1-439-18041-9.
  2. "The Cheat". afi.com. Retrieved March 30, 2024.
  3. "AFI's 100 Years...100 Thrills Nominees" (PDF). Retrieved August 20, 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சீட்_(1915_திரைப்படம்)&oldid=4603973" இலிருந்து மீள்விக்கப்பட்டது