த சர்ச்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த சர்ச்சர்ஸ்
பில் கோல்டின் திரையரங்க
வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்யோவான் போர்டு
மூலக்கதைத சர்ச்சர்ஸ்
படைத்தவர் ஆலன் லி மே
திரைக்கதைஃப்ராங்க் எஸ். நுஜன்ட்
இசைமாக்ஸ் ஸ்டெய்னர்
நடிப்பு
ஒளிப்பதிவுவின்டன் சி. ஹோச்
படத்தொகுப்புஜாக் முரே
கலையகம்சி. வி. விட்னி பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமே 16, 1956 (1956-05-16)(சிகாகோ திரையரங்கம்)
ஓட்டம்1:59 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$3.75 மில்லியன் (26.8 கோடி)[1]

த சர்ச்சர்ஸ் என்பது 1956 ஆம் ஆண்டு யோவான் போர்டு இயக்கிய மேற்கத்திய திரைப்படமாகும். இது 1954 ஆம் ஆண்டு ஆலன் லி மே எழுதிய புதினத்தைை அடிப்படையாக கொண்டதாகும். டெக்சாஸ் மற்றும் அமெரிக்க இந்தியர்களுக்கு இடையே நடைபெற்ற போரின்போது நிகழ்ந்ததாக இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். இதில் யோவான் வேய்ன் நடுத்தர வயதுள்ள உள்நாட்டு போர் முதுவராக நடித்திருந்தார். தனது தத்தெடுக்கப்பட்ட அண்ணன் மகனுடன் இணைந்து ஆண்டுக்கணக்கில் தன் கடத்தப்பட்ட அண்ணன் மகளை தேடும் கதாபாத்திரத்தில் யோவான் வேய்ன் நடித்திருந்தார் . திரைப்பட விமர்சகர் ரோஜர் எபெர்ட் வேய்னின் கதாபாத்திரமான, ஈதன் எட்வர்ட்ஸ், போர்டு மற்றும் வேய்ன் உருவாக்கிய கதாப்பாத்திரங்களிலேயே வலிந்து கருத்தீர்க்கிற ஒரு கதாபாத்திரம் என கருதினார்.

இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படமாகும். இது வெளியிடப்பட்ட காலத்திலிருந்து ஒரு தலை சிறந்த படைப்பாக கருதப்படுகிறது. மேலும் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே சிறந்த மற்றும் செல்வாக்கு மிகுந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்பட நிறுவனம் இந்த திரைப்படத்தை தலைசிறந்த அமெரிக்க மேற்கத்திய திரைப்படமென பெயரிட்டது. இதே நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் எக்காலத்திலும் தயாரிக்கப்பட்ட தலைசிறந்த அமெரிக்க திரைப்படங்களின் பட்டியலில் 12 ஆம் இடத்தை இந்த திரைப்படத்திற்கு கொடுத்தது. என்டர்டைன்மென்ட் வீக்லி எனும் பத்திரிக்கை இந்த திரைப்படத்தை தலைசிறந்த மேற்கத்திய திரைப்படம் என பெயரிட்டது. 2012 ஆம் ஆண்டில் சர்வதேச திரை விமர்சகர்களின் பார்வைகளை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய திரைப்பட நிறுவனத்தின் சைட் அண்ட் சவுண்ட் பத்திரிக்கை இந்த திரைப்படத்தை எக்காலத்திலும் தயாரிக்கப்பட்ட ஏழாவது தலை சிறந்த திரைப்படம் என தரவரிசைப்படுத்தியது. 2008 ஆம் ஆண்டு பிரெஞ்சு பத்திரிக்கையான கஹியர்ஸ் டு சினிமா த சர்ச்சர்ஸ் திரைப்படத்திற்கு எக்காலத்திலும் தயாரிக்கப்பட்ட 100 தலைசிறந்த திரைப்படங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தைக் கொடுத்தது.

1989 ஆம் ஆண்டு த சர்ச்சர்ஸ் திரைப்படம் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகத்தால் "கலாச்சார ரீதியாக, வரலாற்று ரீதியாக மற்றும் அழகியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த" திரைப்படம் என தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்க தேசிய திரைப்பட பதிவேட்டில் பாதுகாக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டது. பதிவேட்டிற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 25 படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சர்ச்சர்ஸ்&oldid=3314764" இலிருந்து மீள்விக்கப்பட்டது