த. ஸ்டாலின் குணசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. ஸ்டாலின் குணசேகரன்
Stalin Gunasekaran.
இயற்பெயர்
த. குணசேகரன்
பிறப்புஈரோடு, தமிழ்நாடு
தொழில்வழக்கறிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, ஈரோடு
குறிப்பிடத்தக்க படைப்புகள்விடுதலை வேள்வியில் தமிழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்
  • இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழக சாதனையாளர் விருது (2003)
  • சென்னை-ஸ்ரீ ராம் பாரதி கலை இலக்கியக் கழகம், 'பாரதி இலக்கியச் செல்வர்' (2007)
  • திருவாடுதுறை ஆதினம், 'பன்னூல் பரப்பும் பைந்தமிழ்ச் செல்வர் (2009)'
  • சென்னை-சங்கர தாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், 'நாடக நால்வர்' விருதும் 'சாதனைச் செம்மல்’ பட்டம் (2019)
இணையதளம்
http://tstalingunasekaran.com/
த. ஸ்டாலின் குணசேகரன் ஒரு நிகழ்வில் உரையாற்றுகின்றார்

த. ஸ்டாலின் குணசேகரன் எழுத்தாளர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் ஆவார். ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்கிற ஆய்வு நூலைத் தொகுத்ததன் பலனாகச் சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுப்பதிவுகளைப் பதியச் செய்தவர். பொதுவுடமை, தேசிய உணர்வு, ஆகிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அவற்றின் வழி வந்தவர். இவர் 2005 முதல் ஈரோடு நகரில் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறார்.

இளமை[தொகு]

பள்ளி மாணவனாக இருந்தபோது, “பாரதி இளைஞர் மன்றம்” என்கிற இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பு வெள்ளி விழாக் கண்டுள்ளது. இவர் பகத்சிங் இளைஞர் மன்றம், இளைஞர் எழுச்சி இயக்கம், மக்கள் சிந்தனைப் பேரவை போன்ற பொது இளைஞர் அமைப்புகளையும் நிறுவி இவற்றின் வாயிலாக இந்திய இளைஞர்களுக்குத் தேசப்பற்றை ஏற்படுத்த பல்வேறு பணிகள் செய்து வருகிறார்.

1980 ஆம் ஆண்டில் சிக்கய நாயக்கர் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டில் பெரியார் மாவட்டத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டில், சோவியத் நாட்டின் தலைநகராகிய மாஸ்கோவில் நடைபெற்ற அகில உலக மாணவ இளைஞர் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுக் கலந்து கொண்டார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராகவும், பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

எழுத்தாளர்[தொகு]

“ஜீவா முழக்கம்” இதழில், பொன்விழா மலரைத் தயாரிக்கும் பொறுப்பு ஸ்டாலின் குணசேகரனுக்குத் தரப்பட்டது. அதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆய்வுகள் மேற்கொண்ட போதுதான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு பற்றி போதிய அளவு தெரிவிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. எனவே வரலாற்று ஆய்வாளர்கள், நிபுணர்கள், தேதியச் சிந்தனை மிக்க தலைவர்கள், தியாகிகள் என்று பலரையும் கண்டு அவர்கள் தந்த தகவல்களை வெவ்வேறு அறிஞர்களைக் கொண்டு கட்டுரையாக்கி “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்ற நூலை வெளியிட்டார்.

படைப்புகள்[தொகு]

  • தேசவிடுதலையும் தியாகச் சுடர்களும் (தொகுப்பு நூல்)
  • வரலாற்றுப் பாதையில்.... – தொகுதி 1, 2
  • விடுதலை வேள்வியில் தமிழகம் - பாகம் 1, 2 (தொகுப்பு நூல்)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ஸ்டாலின்_குணசேகரன்&oldid=3916663" இலிருந்து மீள்விக்கப்பட்டது