உள்ளடக்கத்துக்குச் செல்

த. வி. வெங்கடேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. வி. வெங்கடேசுவரன் (TV Venkateswaran) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரும், கல்வியாளரும், பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார்.[1] அறிவியல் குறித்து தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

வெங்கடேசுவரன் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர். 1984 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், 1991 இல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டயப் படிப்பைப் படித்தார், 1995 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார், 2002 இல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பெற்றார்.

இவர் முதலில் இந்திய ரெயில்வேயில் பணிபுரிந்தார். அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து தன் நண்பர்களுடன் சென்னையில் உள்ள குடிசைவாழ் மக்களிடம் அறிவியல் பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்தினார். துளிர் இதழ் துவக்கப்பட்டபோது அதற்கு பொறுப்பேற்று நடத்த வெங்கடேசுவரன் அழைக்கப்பட்டார். தனக்கு பிடித்த வேலை என்பதால் சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் இரயில்வே வேலையை விடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இதழ் பணியில் இணைந்தார். அறிவியல் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருக்கும் படிமவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்தில் அழைப்பின் பேரில் மூத்த விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் விஞ்சான பிரசாரில் சேர்ந்து பல்வேறு மநிலங்களில் அறிவியல் கல்வி நகழ்ச்சிகளை நடத்தினார். 2025 காலகட்டத்தில் மொகாலி அறிவியல் கல்வி ஆயவு நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுந்து வருகிறார்.[2] அறிவியல் குறித்து தமிழில் தொடர்ந்து கட்டுரைகளையும், நூல்களையும் எழுதிவருகிறார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • அறிவாளியா? முட்டாளா?[3]
  • எண்களின் கதை
  • கடற்கரையோரம் ஒரு நடைபயணம்
  • கணித மேதை ராமனுஜம்
  • கண்டோம் கடவுள் துகளை
  • கருந்துளை (பிறப்பின் அழுகுரலும் – பிரபஞ்ச புதிர்களும்)
  • கிரகணங்களின் நிழல் விளையாட்டு
  • சுற்றுச்சூழல் அரசியல்: ஏமாற்றம் தரும் பாரிஸ் ஒப்பந்தம்
  • நவீன அறிவியலின் எழுச்சி
  • தேனி நியூட்ரினோ திட்டம்: அச்சங்களும் அறிவியலும்
  • நிலவுக்குள் பயணம்
  • புதிய கண்டுபிடிப்புகள்
  • மேகம் கருக்குது
  • விண்மீன்கள்: வகை, வடிவம், வரலாறு[4]

விருதுகள்

[தொகு]
  • தமிழில் அறிவியலை எழுதி வருவதற்காக, கோயம்புத்தூர் உலக தமிழ் கலாச்சார மையத்தின் நல்லபழனிசாமி விருது (2023)
  • திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.வி அறக்கட்டளையின் சாதனையாளர் விருது.
  • சென்னை மயிலை தமிழ்சங்கத்தின் சாதனையாளர் விருது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ அறிவியலுக்குச் செய்வது செலவு அல்ல முதலீடு - அறிவியலாளர் த.வி. வெங்கடேஸ்வரன், செவ்வி, இந்து தமிழ் திசை 10 அக்டோபர் 2025
  2. ↑ சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கம், பி. பி.சி, 9 ஏப்ரல் 2024
  3. ↑ "அறிவாளியா? முட்டாளா?". rmrl.in. Retrieved 2025-10-23.
  4. ↑ "விண்மீன்கள்: வகை, வடிவம், வரலாறு". Goodreads (in ஆங்கிலம்). Retrieved 2025-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._வி._வெங்கடேசுவரன்&oldid=4372209" இலிருந்து மீள்விக்கப்பட்டது