த. வி. பலூசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தத்தாத்ரேயா விஷ்ணு பலூசுகர்
இயற்பெயர்தத்தாத்ரேயா விஷ்ணு பலூசுகர்
பிறப்பு28 May 1921
பிறப்பிடம்குருந்துவாட், மகாராட்டிரம், இந்தியா
இறப்பு26 அக்டோபர் 1955 (வயது 34)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இந்துஸ்தானி செம்மொழி பாடகர்
இசைத்துறையில்1935–1955
வெளியீட்டு நிறுவனங்கள்எச்எம்வி

பண்டிட் தத்தாத்ரேயா விஷ்ணு பலூசுகர் (Dattatreya Vishnu Paluskar) (28 மே 1921 - 26 அக்டோபர் 1955) இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் ஒரு குழந்தை அதிசயமாக கருதப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

இவர், மகாராட்டிராவின் நாசிக் நகரில் பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் விஷ்ணு திகம்பர் பலூசுகருக்கு பிறந்தார். [1] இவரது அசல் குடும்பப்பெயர் காட்கில் என்பதாகும். ஆனால் அவர்கள் பலூசு (சாங்லிக்கு அருகில்) கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் "பலூசுகர்" குடும்பம் என்று அறியப்பட்டனர்.

இவரது பத்து வயதில் இவரது தந்தை இறந்து போனார். பின்னர் பண்டிட் வினாயக்ராவ் பட்வர்தன் மற்றும் நாராயணராவ் வியாசு ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவருக்கு பண்டிட் சிந்தமன்ராவ் பலூசுகர் மற்றும் பண்டிட் மிராஷி புவா ஆகியோரும் பயிற்சி அளித்தனர் .

தொழிலும் வாழ்க்கையும்[தொகு]

இவர், தனது பதினான்கு வயதில் பஞ்சாபிலுள்ள ஹர்வல்லப் சங்க சம்மேளனத்தில் தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார். இவர் குவாலியர் பள்ளி மற்றும் காந்தர்வ மகாவித்யாலயத்தை மரபுரிமையாகப் பெற்றார். ஆனால் மற்ற பள்ளிகள் மற்றும் பாணிகளின் அழகியல் அம்சங்களை ஏற்றுக்கொள்வதில் இவர் எப்போதும் திறந்த மனதுடன் இருந்தார். 

இவர் பைஜு பாவ்ரா என்ற பாலிவுட் படத்தில் அமீர் கானுடன் ஒரு டூயட் பாடியுள்ளார். [2] மேலும் ஷாப் மோச்சன் என்ற பெங்காலி படத்திலும் பாடியுள்ளார். 

இறப்பு[தொகு]

இவர் 1955 அக்டோபர் 26 அன்று மூளையழற்சி காரணமாக மும்பையில்,இறந்தார்.[3]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._வி._பலூசுகர்&oldid=3710849" இருந்து மீள்விக்கப்பட்டது