த. லெ. ஜவ்பர்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த. லெ. ஜவ்பர்கான்

த. லெ. ஜவ்பர்கான் (பிறப்பு: செப்டம்பர் 10, 1968), இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி—04 மத்திய வீதி, இல 34 வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், கவிஞரும், சுதந்திர ஊடகவியலாளருமாவார்.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

காத்தான்குடியில் தம்பிலெப்பை, செய்னம்பு தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் காத்தான்குடி அந்- நாசார் மகா வித்தியாலயம், காத்தான்குடி தேசிய பாடசாலை, ஏறாவூர் தேசிய பாடசாலை, பொல்கொல்லை தும்பரை வளாகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவரின் மனைவி பாத்திமா ஜவ்பர்கான். இத்தம்பதியினருக்கு அஹமட் ஜுறைஸ் ஜவ்பர்கான், அஹமட் ஜுமைல் ஜவ்பர்கான் ஆகிய இரண்டு புதல்வர்கள் உளர்.

தொழில்[தொகு]

ஊடகத்துறை டிப்ளோமா பட்டதாரியான இவர், தற்போது முழு நேர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.

இலக்கிய ஈடுபாடு[தொகு]

இவரின் முதல் படைப்பு 1982ல் தினகரனில் ஒரு கவிதையாக இடம் பெற்றது. இதிலிருந்து இன்று வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், சிறுகதைகள், காவியங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும், இந்திய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பொது, இலக்கியப் பணிகள்[தொகு]

இவர் பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புக்களிலும் சமூகசேவை அமைப்புக்களிலும் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

இலக்கிய அமைப்புக்கள்[தொகு]

 • தலைவர் - இஸ்லாமிய இலக்கிய அமைப்பு
 • தலைவர் - தாமரை கலை இலக்கிய மன்றம்
 • முன்னாள் தலைவர் - நவ இலக்கிய மன்றம்
 • நிர்வாக உறுப்பினர் - மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவை
 • நிர்வாக உறுப்பினர் - காத்தான்குடி கலாசார பேரவை
 • தலைவர் - மட்டக்களப்பு மாவட்ட மீடியா போரம்
 • அமைப்பாளர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
 • தலைவர்- மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் ஊடகவியலாளர் அமைப்பு

சமுகப் பணி[தொகு]

 • தலைவர்- சீரோம் ஸ்ரீலங்கா
 • நம்பிக்கையாளர் - ஜெயின் மௌலானா பள்ளிவாயில்
 • சமாதான நீதிவான்
 • முன்னாள் - திடீர் மரண விசாரணை அதிகாரி

அரசியல் பணி[தொகு]

 • தலைவர் - ஐக்கிய மக்கள் ஜனநாயக கட்சி
 • கொள்கை பரப்பு செலவாளர் - மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
 • மத்திய குழு உறுப்பினர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

வெளிட்டுள்ள நூல்கள்[தொகு]

 • மணிமலர்கள் (மரபுக்கவிதை—1986)
 • ரணங்கள் (புதுக்கவிதை—1993)
 • மௌனதேசம் (மரபுக்கவிதை—2000, தேசிய சாகித்ய மண்டல விருது பெற்றது)
 • சுனாமி காவியம் (காவியம்--2007)

பெற்ற விருதுகள்[தொகு]

 • 1993 - தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஜனாதிபதி விருது
 • 2001 — தேசிய சாகித்யமண்டல விருது
 • 2002 — உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு விருது
 • 2002 — யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் திருமறை கலா மன்றம் பொன்னாடை போர்த்தி வழங்கிய விருது
 • 2002—பாவலர் பண்ணை விருது
 • 2003 - மனித உரிமை விருது
 • 2004 — தினச்சுடர் விருது
 • 2006 — பிரதேச சாஹித்ய விருது
 • 2007 — அனர்த்த முகாமைத்துவ அமைச்சு விசேட விருது
 • 2007 — மட்டக்களப்பு மாவட்ட செயலக விருது
 • 2007---மாருதம் விருது
 • 2008—ரிஸாலா சமுக வானொலி விருது

உட்பட 22 விருதுகள்

பெற்ற பட்டங்கள்[தொகு]

 • சாஹித்யசூரி
 • கவிச்சுடர்
 • கவிமுரசு
 • கவித்தாரகை
 • இலக்கியதீபம்
 • சாதனைச்சிகரம்
 • ஊடகச்சுடர்

உட்பட மேலும் சில பட்டங்கள்

பெற்ற பரிசில்கள்[தொகு]

 • 1990 - வீரகேசரி கவிதைப்போட்டியில் முதலாமிடம்
 • 1990 - ஈரான் தூதரக கவிதைப்போட்டியில் தேசிய மட்டம் இரண்டாமிடம்
 • 1991 - தேசிய அஸ்ஸஹீட் அஹமட்லெப்பை கவிதைப்போட்டியில் தேசிய மட்டம் மூன்றாமிடம்
 • 1992 - தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தேசிய கவிதைப போட்டியில் 2ம் இடம்
 • 1993 - இந்து கலாசார அமைச்சு வீரகேசரியுடன் நடாத்திய தேசிய கவிதை போட்டியில் முதலிடம்
 • 2001 - தேசிய சாகித்ய மண்டலம்
 • 2003 - அரச சேவையாளருக்கான நிருமாண போட்டியில் தேசியகவிதையில் சிறப்பு பரிசு
 • 2004 மாவட்ட செயலக கவிதைப் போட்டிமுதலிடம்
 • 2008 - 'அகிலம்' அறிவியற் சஞ்சிகை கவிதைப்போட்டி விசேட பரிசு
 • 2009 - பிரான்ஸ் திறந்த உலக சிறுகதைப்போட்டியில் ஆறாமிடம்

உட்பட பல பரிசில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._லெ._ஜவ்பர்கான்&oldid=2106879" இருந்து மீள்விக்கப்பட்டது