த. புஷ்பராஜூ
தோற்றம்
த. புஷ்பராஜூ | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | கே. வி. சுப்பையா |
| பின்னவர் | பி. திருமாறன் |
| தொகுதி | ஆலங்குடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 மே 1945 வடகாடு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பிள்ளைகள் | 1 மகன் 1 மகள் |
| முன்னாள் மாணவர் | டி. இ. எல். சி. உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை |
| தொழில் | விவசாயி |
த. புஷ்பராஜூ (T. Pushparaju) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமாவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியினைச் சார்ந்தவர். புதுக்கோட்டை டி. இ. எல். சி. பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பினை முடித்துள்ளார். புஷ்பராஜூ, 1977ஆம்[1] ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியிலிருந்தும், 1984ஆம்[2] ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரசு குழுவில் 15 ஆண்டுகள் மாவட்ட தலைவராக இருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India