த. நமசிவாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஈழத்துத் திரைப்பட நடிகர். ஜெயகாந்த் என்ற பெயரில் நடித்தவர். புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழும் இவர் அந்நாட்டின் இலவுசான் மாநகரசபை உறுப்பினராக உள்ளார்.[1]

யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட நமசிவாயம் சிறுவயது முதலே திரைப்பட ஆர்வம் கொண்டிருந்தவர். 'பாராவழலு' என்ற சிங்களத் திரைப்படத்தில் நடித்தபோது தனது பெயரினை, ‘ஜெயகாந்த்’ என்று வைத்துக் கொண்டார். ஈழத்தில் தயாரான குத்துவிளக்கு தமிழ்த்திரைப்படத்தில் ‘சோமு’ என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._நமசிவாயம்&oldid=3480486" இலிருந்து மீள்விக்கப்பட்டது