த. தர்மகுலசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. தர்மகுலசிங்கம் ஈழத்தைச் சார்ந்த, டென்மார்க்கில் வாழும் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். டேனிசு மொழியில் இருந்து நேரடியாக இவர் செய்துவரும் மொழியாக்கங்களுக்காகாக இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

"இவர் டேனிஷ் மொழியிலிருந்து அனசனின் சிறுகதைகளைத் தொகுத்து தாய், பாட்டி என்று இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தாய் 1996இல் அனசனின் 17 கதைகளைக் கொண்டதாக வெளிவந்திருந்தது. ஐந்தாண்டுகளின் பின்னர் 2001இல் பாட்டி என்ற தலைப்பில் மேலும் 14 கதைகளுடன் அடுத்த கதைத்தொகுதியை இவர் வெளியிட்டிருந்தார். கடந்த ஓகஸ்ட் 2007இல் தர்மகுலசிங்கத்தின் மேலும் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன."[1]

படைப்புகள்[தொகு]

  • எனது வாழ்கை ஒரு அழகான கதை - மொழிபெயர்ப்பு
  • தாய் - மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி
  • பாட்டி - மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._தர்மகுலசிங்கம்&oldid=3556879" இலிருந்து மீள்விக்கப்பட்டது