த. கோ. கு. மேனன்
தோற்றம்
த. கோ. கு. மேனன் T. G. K. Menon | |
---|---|
பிறப்பு | 2 மார்ச் 1940 கொடுங்கல்லூர், திரிச்சூர், இந்தியா |
இறப்பு | 12 ஜூன் 2021 இந்தோர் (மத்தியப் பிரதேசம்) |
பணி | சமூக செயற்பாட்டாளர் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் |
விருதுகள் | பத்மசிறீ ஜம்னாலால் பஜாஜ் விருது |
தச்சேரில் கோவிந்தன் குட்டி மேனன் (T. G. K. Menon)(2 மார்ச் 1940-12 ஜூன் 2021) என்பவர் இந்தியச் சமூக சேவகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். மேனன் 2 மார்ச் 1940 அன்று கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் பிறந்தார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கஸ்தூர்பாகிராமின் கீழ் சுற்றுச்சூழல் நட்பு பாசன மற்றும் விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில் இவரது பங்களிப்புகள் முக்கியமானதாகத் தெரிவிக்கப்படுகின்றன. இவர் இந்தியாவில் பயோ டைனமிக் விவசாயத்தை ஊக்குவித்தற்காக அறியப்படுகிறார்.[1] 1989இல் ஜம்னாலால் பஜாஜ் விருதை இவர் பெற்றார். 1991ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமையியல் விருதான பத்மசிறீ விருதினை இவருக்கு வழங்கி கெளரவித்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is Bio-Dynamic Agriculture?". Biodynamics. 2015. Retrieved 13 October 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. Retrieved 21 July 2015.