த. ஆனந்த ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்
தஞ்சாவூர் ஆனந்த ராவ்
இந்தியப் பேரரசின் ஒழுங்கு
இமைசூர் இராச்சியத்தின் 18 ஆவது திவான்
பதவியில்
1909 ஏப்ரல் 1 – 1912 நவம்பர் 10
ஆட்சியாளர்நான்காம் கிருட்டிணராச உடையார்
முன்னையவர்வி. பி. மாதவ ராவ்
பின்னவர்மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1852 மே 15
மெட்ராஸ் மாகாணம்
இறப்பு1919 சூலை
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை
தொழில்அரசுப் பணி

தஞ்சை ஆனந்த ராவ் (Tanjore Ananda Rao) (ஆனந்த ராவ் தஞ்சாவூர்க்காரர் என்றும் அழைக்கப்பட்டார் ) (1852 மே 15 - 1919 சூலை 19) இவர் ஒரு இந்திய நிர்வாகியும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இவர் 1909 முதல் 1912 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார். இவர் திவான் சர் த.மாதவ ராவின் மூத்த மகனாவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஆனந்த ராவ் திருவனந்தபுரம் கோட்டையின் பத்ம விலாசத்தில் 1852 மே 15 ஆம் தேதி பிறந்தார். பிரபல இந்திய அரசியல்வாதியான இவரது தந்தை சர் த. மாதவ ராவ், திருவிதாங்கூர் மற்றும் பரோடாவின் திவானாகவும், இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவராகவும் பணியாற்றினார். இவர்களின் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்தி மொழி பேசும் தேசஸ்தா பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தது.

ராவ் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1867 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் மெட்ரிகுலேசனையும், 1869 இல் சென்னை, மாநிலக் கல்லூரியிலும் , திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

1873 நவம்பர் 14 அன்று மைசூர் அரசுப் பணியில் இணைவதற்கு முன்பு ராவ் ஆரம்பத்தில் பரோடாவின் துகாஜி ராவ் கோல்கருக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1876 சூலை 7 ஆம் தேதி பெங்களூரின் உதவி ஆணையராக ராவ் நியமிக்கப்பட்டார். பின்னர்,1879 டிசம்பர் 1 முதல் 1883 சனவரி வரை அரண்மனை கணக்குகளின் பொறுப்பாளராக இருந்தார்.

ராவ் 1883 முதல் 1886 வரை ஹாசன் மற்றும் காடூருக்கான உதவி ஆணையராகவும், 1886 முதல் 1889 வரை ஹாசன் மற்றும் மைசூரின் செயல் துணை ஆணையராகவும் பணியாற்றினார். 1889 முதல் 1897 வரை மைசூர் திவானின் தலைமைச் செயலாளராகவும், 1897 முதல் 1904 வரை வேளாண் மற்றும் பிற புள்ளிவிவர இயக்குநராகவும் பணியாற்றினார். ராவ் 1904 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வருவாய் ஆணையராக நியமிக்கப்பட்டு 1906 மார்ச் 14 முதல் மைசூர் சட்டமன்றத்தில் 1909 ஏப்ரல் 1 ஆம் தேதி திவானாக பொறுப்பேற்றார்.

மைசூர் திவான்[தொகு]

ராவ் 1909 ஏப்ரல் 1 முதல் 1912 நவம்பர் 10 வரை மைசூரின் திவானாக பணியாற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில் மைசூரின் பொருளாதார வளர்ச்சிக்கு நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிவசமுத்திரத்தில் உள்ள மின் நிலையத்திற்காக 1910 இல் ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. அதே ஆண்டில், மைசூர்-ஹாசன் இரயில் பாதை சாலிகிராம் மற்றும் யடாத்தூரை அர்சிகரேவில் இணைக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது. முதலாவது மைசூர் பொருளாதார மாநாடு 1910 சூன் 10 அன்று தொடங்கப்பட்டது. மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை கூடியது. 1911-1912 ஆம் ஆண்டில், கண்ணம்பாடியில் காவிரி ஆற்றில் கிருட்டினராச சாகர் அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

விசுவேசுவரய்யாவிற்கு அழைப்பு[தொகு]

இவர், 1909 ஆம் ஆண்டில் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவை மைசூர் அரசாங்கத்தின் தலைமை பொறியாளராகவும் செயலாளராகவும் பணியாற்ற அழைத்து வந்தார்.

மரியாதை[தொகு]

ராவ் 1910 ஆம் ஆண்டில் இந்திய சாம்ராச்சியத்தின் ஒழுங்கின் தோழராக மாற்றப்பட்டார்.

  • மத்திய பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் ஒரு பெரிய சாலை சந்திப்பு, இவரது பெயரான திவான் டி.ஆனந்த ராவ் வட்டம் என்று பெயரிடப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  • Mysore Gazetteer. pp. 3124–3125.
  • Mysore Gazetteer. pp. 3026–3032.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ஆனந்த_ராவ்&oldid=3926651" இலிருந்து மீள்விக்கப்பட்டது