உள்ளடக்கத்துக்குச் செல்

தௌலத் கான் லோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தௌலத் கான் லோதி, தில்லி சுல்தானகத்தை ஆண்ட இறுதி லோதி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான இப்ராகிம் லோதி ஆட்சியில் லாகூர் மாகாண ஆளுநராக இருந்தார்.[1] தில்லி சுல்தான் இப்ராகிம் லோதி மீதான வெறுப்பின் காரணமாக, தௌலத் கான் லோதி, தில்லி மீது படையெடுக்க பாபரை அழைத்தார்.[2]

பாபருக்கு உதவிடல்

[தொகு]

1523ல் தௌலத் கான் இறையாண்மைக்காக, தில்லி சுல்தான் இப்ராகிம் லோதியுடன் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டார். தௌலத் கான், இப்ராகிம் லோதியின் முக்கிய எதிரிகளில் ஒருவராக இருந்தார். இப்ராகிம் லோதியை வென்று, தில்லி சுல்தானகத்தை கைப்பற்ற காபூலில் இருந்த பாபருக்கு தூதர்களை அனுப்பினார். பாபரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

பாபரின் படைகள் விரைவாக லாகூர் மற்றும் திபால்பூரை கைப்பற்றியது. தௌலத் கான் லோதி மற்றும் அவரது மகன்களான காஜி மற்றும் திலாவர் கான் லோதி, திபால்பூரில் பாபருடன் சேர்ந்தனர். தௌலத் கான் லோதிக்கு லாகூருக்குப் பதிலாக ஜலந்தர் மற்றும் சுல்தான்பூர் பகுதிகளை கொடுத்தபோது ஏமாற்றமடைந்தார். இந்த பணிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தௌலத் கான் லோதியும், அவரது மகன் காஜியும் தலைமறைவாகினர். அதே நேரத்தில் தௌலத் கான் லோதியின் மற்றொரு மகன் திலாவர் கான் லோதி தனது தந்தைக்கு துரோகம் செய்து ஜலந்தர் மற்றும் சுல்தான்பூர் பகுதிகளின் ஆளுநர் பதவியை ஏற்றார்.

பாபரை இந்தியாவிற்கு வரவழைப்பதன் மூலம் தௌலத் கான் லோதி நடத்திய இராஜ்ஜிய தந்திர நிகழ்வுகளின் இறுதியாக 1526ல் முதல் பானிபட் போரில் (1526) தில்லி சுல்தான் இப்ராகிம் லௌதி உயிர் இழந்தார். பாபர் தில்லியில் முகலாயப் பேரரசை நிறுவினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. McLeod, W. H. (1968). Gurū Nānak and the Sikh religion. Delhi: Oxford University Press. p. 108. ISBN 0-19-563735-6. கணினி நூலகம் 35868282.
  2. The encyclopaedia of Sikhism. Vol. 1. Harbans Singh. Patiala: Punjabi University. 1992–1998. pp. 535–536. ISBN 0-8364-2883-8. கணினி நூலகம் 29703420.{{cite book}}: CS1 maint: others (link)

ஆதாரங்கள்

[தொகு]
  • Haig, Wolseley et al., The Cambridge History of India Vol. III: Turks and Afghans, Cambridge: Cambridge University Press, 1928, 10-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலத்_கான்_லோதி&oldid=3857664" இலிருந்து மீள்விக்கப்பட்டது