உள்ளடக்கத்துக்குச் செல்

தௌன்சா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தௌன்சா மாவட்டம்
ضِلع تونسا,تونسہ دمگ
மாவட்டம்
முன்ரோ கோட்டையிலிருந்து சுலைமான் மலைத்தொடர்
முன்ரோ கோட்டையிலிருந்து சுலைமான் மலைத்தொடர்
Location of தௌன்சா மாவட்டம்
ஆள்கூறுகள்: 30°42′20″N 70°39′28″E / 30.70556°N 70.65778°E / 30.70556; 70.65778
நாடுபாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்தேரா காசி கான்
ஒன்றியக் குழுக்கள்13
தலைமையிடம்தௌன்சா செரீப்
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர)
பரப்பளவு
 • மொத்தம்8,108 km2 (3,131 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மொத்தம்10,45,460
 • அடர்த்தி130/km2 (330/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
32100
வருவாய் வட்டங்கள்3
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்

தௌன்சா மாவட்டம் (Taunsa District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இது பஞ்சாப் மாகாணத்தில் தென்மேற்கில் பலூசிஸ்தான் மாகாணத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் தௌன்சா செரீப் நகரம் ஆகும். தௌன்சா செரீப் நகரம் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 448.1 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்து]க்கு தென்மேற்கே 488.7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

தேரா காசி கான் மாவட்டத்திலிருந்து சில வருவாய் வட்டங்களைக் கொண்டு தௌன்சா மாவட்டம் 2024ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2]இம்மாவட்டத்தின் கிழக்கில் சிந்து ஆறு பாய்கிறது. மேற்கில் சுலைமான் மலைத்தொடர் உள்ளது. இம்மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[3]இங்கு சராய்கி மொழி பேசும் பலூச்சி மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

தௌன்சா மாவட்டத்தின் வடமேற்கில் கைபர் பக்துன்வா மாகாணம், வடகிழக்கில் லைய்யா மாவட்டம், கிழக்கில் கோட் அட்டு மாவட்டம் மற்றும் தெற்கிலும், மேற்கிலும் தேரா காசி கான் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,61,806 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,045,460 ஆகும்[4]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 104.69ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 53.05% ஆகும். [1][5]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 353,488 (33.83%) ஆக உள்ளனர். [6]நகர்புறங்களில் 158,122 (15.12%) மக்கள் வாழ்கின்றனர்.[1]

மொழிகள்

[தொகு]

தௌன்சா மாவட்டத்தில் சராய்கி மொழியை 66.79% மக்களும், பலூச்சி மொழியை 31.18% மக்களும், பஷ்தூ மொழியை 1.19% மக்களும், பிற மொழிகளை 0.8% மக்களும் பேசுகின்றனர்.[7]

சமயம்

[தொகு]
தௌன்சா மாவட்டத்தில் சமயங்கள்
சமயங்கள்
மக்கள் தொகை
1941[8]:62-63 2017[9] 2023[10]
மக்கள் தொகை % மக்கள் தொகை % மக்கள் தொகை %
இசுலாம் 133,302 91.70% 890,172 99.97% 1,042,464 99.76%
இந்து சமயம் 12,019 8.27% 50 0.01% 28 ~0%
கிறித்துவம் 6 ~0% 20 ~0% 2,189 0.21%
அகமதியா பொருத்தமில்லை பொருத்தமில்லை 175 0.02% 216 0.02%
பிற சமயத்தவர் 36 0.03% 20 ~0% 40 0.01%
மொத்தம் 145,363 100% 890,437 100% 1,044,937 100%
Note: 1941 census data is for Taunsa and part of De-Excluded Area (then-named Biloch Trans-Frontier Tract) tehsil of erstwhile Dera Ghazi Khan District, which roughly corresponds to contemporary Taunsa district. Population corresponding to de-excluded area was computed based on population of area remaining in the district after the formation of Rajanpur district, with ratios of religions assumed to be the same. District and tehsil borders have changed since 1941.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

துணை ஆணையாளர் நிர்வாகத்தின் கீழ் உள்ள தௌன்சா மாவட்டத்தில் 3 வருவாய் வட்டங்களும், 13 ஒன்றியக் குழுக்களும் உள்ளது.

வருவாய் வட்டம்[11] பரப்பளவு

(km²)[12]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு

(2023)[13]

13 ஒன்றியக் குழுக்கள்
கோ இ சுலைமான் வட்டம் 5,339 248,683 46.58 36.04%
தௌன்சா வட்டம் 2,769 796,777 287.75 57.96% ...
வெகோவ வட்டம் ... ... ... ... ...

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Kot Addu, Taunsa notified as districts in DG Khan Division". The Nation (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-12-21. Retrieved 2024-12-29.
  3. "Taunsa's district status approved". The Express Tribune (in ஆங்கிலம்). December 22, 2022. Retrieved December 19, 2024.
  4. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "CENSUS OF INDIA, 1941 VOLUME VI PUNJAB PROVINCE". Retrieved 21 July 2022.
  9. "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  10. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
  11. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  12. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  13. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌன்சா_மாவட்டம்&oldid=4316981" இலிருந்து மீள்விக்கப்பட்டது