தோல் ஒட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோல் ஒட்டல் (Skin grafting) என்பது தீவிபத்தாலோ அல்லது சாலை விபத்து போன்றவற்றாலோ மனித உடலில் தோல் சிதைவதால் வேறு தோலை ஒட்டுதல் ஆகும். இதில் பெரும்பாலும் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இறந்த மனித உடலில் இருந்து பெற்று அந்தத் தோலை பதப்படுத்தி வைத்து அதை பாதிக்கப்பட்டவருக்கு பொருத்துதல் இன்னொன்று சம்பந்தப்பட்ட நபரின் உடலில் வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட தோலைப் பொருத்துதல் ஆகும்.

தோல் கொடை[தொகு]

தோல் கொடை என்பது இறப்புக்குப் பின் கண் கொடை, உடல் கொடை போன்று தோல் கொடை செய்வது ஆகும். இறந்த ஆறு மணிநேரத்துக்குள் உடலில் இருந்து தோலை எடுக்கவேண்டும்.[1] இந்தத் தோலை ஐந்து டிகிரி வெப்பநிலையில் கிளைசரோல் என்ற திரவத்தில் பாதுகாப்பர். இந்தத் தோலை ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இந்தியாவின் பெருநகரங்களில் தோல் வங்கிகள் உள்ளன. இந்தியாவின் முதல் தோல்வங்கி மும்பை வாடியா மருத்துவமனையில் துவக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையிலும், கோவையில் கங்கா மருத்துவமனையில் தோல் வங்கிகள் உள்ளன.[2] தோல் தானம் பெற ரத்தப் பொருத்தம் அவசியம் இல்லை. கண்தானம், உடல்தானம் போன்று தோல் தானம் பரவலாகவில்லை, இதனால் தோலுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் உயிருடன் இருப்பவர்களும் தீயால் பாதிக்கப்படும் தங்கள் குடும்பத்தினருக்கு தோலை கொடையாக அளிக்கின்றனர்.[3] கொடையாளியின் தொடைபகுதியிலும், பின் பகுதியிலும் தோல் எடுக்கப்படும்.

தோல் பொருத்தல்[தொகு]

தோல் சிதைந்த நிலையில் திறந்த காயங்களை அப்படியே வைப்பது ஆபத்தானது. இந்த காயங்கள் வழியாக கிருமிகள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே தோல் தானத்தின் மூலம் பெறப்பட்டத் தோல் தீக்காயமுற்று தீயால் தோல் பதிக்கப்பட்ட இடத்தின் மேல் பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்பட்ட தோல் பத்து பணிரெண்டு நாட்களில் கழன்று வந்துவிடும். அதற்குள் நோயாளியின் உடல் சற்று தேறிவிடும். பிறகு நோயாளியில் உடலின் வேறுபகுதியில் இருந்து தோல் எடுத்து மீண்டும் பொருத்தப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_ஒட்டல்&oldid=3715514" இருந்து மீள்விக்கப்பட்டது