தோல்கழற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்வண்டு தோல் கழற்றும் அசைபடம்

உயிரியலில், தோல்கழற்றல் (ecdysis) என்பது, முதுகெலும்பிலிகளில் கணுக்காலிகள் (பூச்சிகள், ஓடுடைய கணுக்காலிகள், Chelicerata, பலகாலிகள்), உருளைப்புழுக்கள், வேறும் சில சிறிய தொகுதிகளை உள்ளடக்கிய புரொட்டோஸ்டோம் வகை விலங்குகளில் புறத்தோல் கழற்றப்படும் அல்லது உதிர்க்கப்படும் செயல்முறையாகும். பொதுவாக இவ்வகை விலங்குகளில் புறத்தோலானது நெகிழ்வற்ற புறவன்கூட்டைக் கொண்டிருப்பதனால், வளர்ச்சியின்போது பெரிதாகும் உடலுக்கு ஈடு கொடுப்பதற்காகப் புறத்தோல் கழற்றப்பட்டு, புதிய, பெரிய மேலுறை உருவாகும்.[1]

கணுக்காலிகளில் தோல்கழற்றலின் பின்னர், ஓரிரு மணித்தியாலங்களில் புதிய மேலுறையானது தோல் பதப்படுத்தல் செயல்முறையை ஒத்த ஒரு செயல்முறை மூலம் இறுக்கமடைந்து, மீண்டும் புதிய புறவன்கூடு உருவாகிவிடும்.[2]

இவ்வகை விலங்குகள் வழக்கமாக, அவற்றின் வாழ்க்கை வட்டத்தின் குறிப்பிட்ட காலங்களில் அல்லது ஒரு ஆண்டின் குறிப்பிட்ட நேரங்களில் தமது உடலின் ஒரு பகுதியை (பெரும்பாலும், வெளிப்புற அடுக்கு) வெளியேற்றும்.

மேற்கோள்[தொகு]

  1. John Ewer (2005). "How the ecdysozoan changed its coat". PLOS Biology 3 (10): e349. doi:10.1371/journal.pbio.0030349. பப்மெட்:16207077. 
  2. O. Erik Tetlie, Danita S. Brandt & Derek E. G. Briggs (2008). "Ecdysis in sea scorpions (Chelicerata: Eurypterida)". Palaeogeography, Palaeoclimatology, Palaeoecology 265 (3–4): 182–194. doi:10.1016/j.palaeo.2008.05.008. Bibcode: 2008PPP...265..182T. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்கழற்றல்&oldid=3109879" இலிருந்து மீள்விக்கப்பட்டது