உள்ளடக்கத்துக்குச் செல்

தோல்கண்டி பிரகாசு கவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோல்கண்டி பிரகாசு கவுட்
உறுப்பினர், தெலங்காணா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிஇராஜேந்திரநகர்
உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2009–2018
தொகுதிஇராஜேந்திரநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மே 1959 (1959-05-05) (அகவை 67)
மைலார்தேவரபல்லி, ரங்காரெட்டி மாவட்டம், தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2024–தற்போது)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரத் இராட்டிர சமிதி (2016–2024) தெலுங்கு தேசம் கட்சி (2009–2016)
துணைவர்சுலோசனா
பிள்ளைகள்3 மகன்கள், 2 மகள்கள்
பெற்றோர்தோல்கண்டி கண்டய்யா கவுட், இலட்சுமம்மா
தொழில்அரசியல்வாதி

தோல்கண்டி பிரகாசு கவுட் (Tolkanti Prakash Goud, பிறப்பு: 5 மே 1959) என்பவர் தெலங்காணாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ரங்காரெட்டி மாவட்டத்தின் இராஜேந்திரநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உள்ள இவர், 2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் 2009 முதல் தொடர்ந்து ராஜேந்திரநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஜூலை 2024-இல் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பிரகாஷ் கவுட் தெலங்காணா மாநிலம் இரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநகர் மண்டலத்தைச் சேர்ந்த மைலார்தேவரபல்லி கிராமத்தில் தோல்கண்டி கண்டய்யா கவுட் - இலட்சுமம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது 5-ஆம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக் கல்வியை நிறுத்திக் கொண்டார்.[3] இவர் சுலோசனா என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பிரகாஷ் கவுட் 2009 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இராஜேந்திரநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 49,522 வாக்குகளைப் பெற்று, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் காசானி ஞானேசுவர் மூதிராஜை 7,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். 2014 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு 77,843 வாக்குகள் பெற்று, காங்கிரசு வேட்பாளர் பி. ஞானேஸ்வரரை 25,881 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.[5][6][7]

பின்னர், இவர் தெலங்காணா இராட்டிர சமிதியில் இணைந்து, 2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் 108,964 வாக்குகள் பெற்று தெலுங்கு தேசம் கட்சியின் கணேஷ் ரேணுகுண்ட்லாவை 58,373 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தொடர்ந்து 2023 சட்டமன்றத் தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி சார்பில் போட்டியிட்டு 121,734 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தோகலா சிறீனிவாசு ரெட்டியை 32,096 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார்[7]. சூலை 2024-இல் இவர் பாரத் இராட்டிர சமிதி கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Rajendranagar assembly election results 2023: Rajendranagar Winning Candidates List and Vote Share". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-07-17.
  2. ↑ "Prakash Goud: సీఎం రేవంత్‌రెడ్డి సమక్షంలో కాంగ్రెస్‌లో చేరిన ఎమ్మెల్యే ప్రకాశ్‌ గౌడ్‌". EENADU (in தெலுங்கு). Retrieved 2024-07-17.
  3. ↑ "T. Prakash Goud(BRS):Constituency- RAJENDRANAGAR(RANGA REDDY) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-07-17.
  4. ↑ https://legislature.telangana.gov.in/getMLAMemberDetails?memid=1320&constid=51&orderby=1&termid=15
  5. ↑ english. "Rajendranagar Election Result 2023 Live, Rajendranagar Elections Vote Counting, Telangana Results 2023 | ABPLive". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2024-07-17.
  6. ↑ "Rajendranagar Election Result 2023 LIVE Updates and Highlights: T Prakash Goud Of BRS Wins By A Swooping 32096 Votes As BJP's Thokala Srinivas Reddy Falls Behind". News18 (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2024-07-17.
  7. 1 2 "Rajendranagar Constituency Election Results 2023: Rajendranagar Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்கண்டி_பிரகாசு_கவுட்&oldid=4634465" இலிருந்து மீள்விக்கப்பட்டது