தோலி குலேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோலி குலேரியா (Dolly Guleria) (பிறப்பு: 1949 ஏப்ரல் 13) இவர் ஒரு பஞ்சாபி நாட்டுப்புற பாடகராவார். இவர் மும்பையின் பைசாக்கி நாளில் பிறந்தார். இவர் பேராசிரியர் ஜோகிந்திர சிங் மற்றும் புகழ்பெற்ற பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் சுரிந்தர் கவுரின் மகளாவார்.

தொழில்[தொகு]

குலேரியா ஒரு மருத்துவ மாணவியாக இருக்க விரும்பினார். 1970இல் இவர் இராணுவ அதிகாரி கர்னல் எஸ்.எஸ்.குலேரியா என்பவரை மணந்தார். [1] இவர்களுக்கு சுனைனி என்ற ஒரு மகளும் மற்றும் தில்பிரீத் சிங் மற்றும் அமன்பிரீத் சிங் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். பாரம்பரிய இசையில் தனது பயிற்சியைத் தொடர இவரது கணவரால் இவர் ஊக்கப்படுத்தப்பட்டார். 'பாட்டியாலா கரானா'வின்' உஸ்தாத் கான் சாஹிப் 'அப்துல் ரஹ்மான் கானிடம் சீடராவதற்கான வாய்ப்பைப் பெற்று பாரம்பரிய இசையில் பயிற்சியைத் தொடர்ந்தார். [2] இலகுவான மெல்லிசை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் நாட்டுப்புற பாடல்களில் அதைச் செயல்படுத்த குறிப்பிட்ட திறனுடன் அடித்தளமாக இவருக்கு பயிற்சி அளித்தார்.

சிறுவயதிலிருந்தே பக்தியுடன் வாழ்ந்த இவர், தனது குரு உஸ்தாத்தின் வழிகாட்டுதலின் கீழ், தனது தனி அறிமுக இசைத்தொகுப்பான குர்பானி இராகத்தில் வெளியிடத் தேர்ந்தெடுத்து, அதன் அசல் ராகங்களில் "ரெஹ்ராஸ் சாஹிப்" என்ற பாடலை பாடினார். [3] ஷாபாத் கீர்த்தனைகள உள்ளிட்ட சில தனிப்பாடல்கள், சிவ்குமார் படால்வியின் கவிதை, பாய் வீர் சிங் மற்றும் பிற புகழ்பெற்ற கவிஞர்களின் பாடல்கள் போன்றவற்றை பாடினார். [2]

பஞ்சாபித் திரைப்படங்களான ரப் தியான் ரகான், தெசன் பர்தேஸ் மற்றும் மெயின் மா பஞ்சாப் தி ஆகியவற்றில் பின்னணி பாடகியாக தனது குரலை வழங்கியுள்ளார். [2]

அங்கீகாரம்[தொகு]

1997 நவம்பரில் பாக்கித்தானுக்கு நல்லெண்ண மற்றும் கலாச்சார பரிமாற்ற பயணத்தின் போது, இவரும் இவரது மகள் சுனைனியும் லாகூரின் கடாபி அரங்கம் மற்றும் செனாப் சங்கத்தில் உள்ள பைசாலாபாத் ஆகிய இடங்களில் தனது இசையுடன் பாகிஸ்தானின் பார்வையாளர்களை கவர்ந்தனர். [2] இவரது சிறந்த பங்களிப்புக்கு ஒரு தங்க பதக்கம் மற்றும் மினார்-இ-பாக்கிஸ்தானின் தங்க தகடு ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் நேரடி நிகழ்ச்சிகளை வழங்குவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். பார்வையாளர்களின் உடனடி பதில் இவரது மன உறுதியை அதிகரிக்கிறது. பஞ்சாபி இசையை அதன் தூய்மையான வடிவத்தில் உயிரோடு வைத்திருக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறார். [4] தனது நைட்டிங்கேல் மியூசிக் அகாதமியில் சேரும் அர்ப்பணிப்புள்ள மாணவர்களுக்கு இவர் இசையினை கற்பிக்கிறார். [1]

சுரிந்தர் கவுர்[தொகு]

கவுர் ஓர் இந்திய பாடகரும் மற்றும் பாடலாசிரியரரும் ஆவார். இவர் முக்கியமாக பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களைப் பாடினார். பஞ்சாபில், இவர் நாட்டுப்புற பாடல்களின் முன்னோடியாகவும் அவற்றை பிரபலப்படுத்தியதற்காகவும் புகழ் பெற்றார். கவுர் 1948 மற்றும் 1952க்கு இடையில் இந்தி படங்களுக்கான பின்னணி பாடகியாக இருந்தார். பஞ்சாபி இசைக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக, பஞ்சாபின் நைட்டிங்கேல் என புகழப்பட்டார். 1984இல் சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் 2006 இல் பத்மசிறீ ஆகியவற்றைப் பெற்றவராவார். [5][6][7] தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோகிந்தர் சிங் சோடி என்பவரை கவுர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவர் பஞ்சாபி நாட்டுப்புற பாடகரரான தோலி குலேரியா ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Working Partners". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/news/working-partners/635283/0. பார்த்த நாள்: 1 April 2011. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Her mother's daughter". The Tribune. http://www.tribuneindia.com/1998/98jul31/art-trib.htm. பார்த்த நாள்: 1 April 2011. 
  3. "The Nightingale of Punjab Falls Silent". OhmyNews. 17 June 2006 இம் மூலத்தில் இருந்து 14 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120314033344/http://english.ohmynews.com/articleview/article_view.asp?menu=c10400&no=299274&rel_no=1. பார்த்த நாள்: 1 April 2011. 
  4. "Concern over vulgarity in Punjabi music". இந்தியன் எக்சுபிரசு. 7 August 2006. http://cities.expressindia.com/fullstory.php?newsid=195816. பார்த்த நாள்: 1 April 2011. 
  5. Surinder Kaur
  6. "Surinder Kaur's profile". LastFM., Retrieved 18 Aug 2016
  7. "Tributes paid to melody queen". The Tribune newspaper. 26 June 2006., Retrieved 18 Aug 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோலி_குலேரியா&oldid=3284707" இலிருந்து மீள்விக்கப்பட்டது