தோரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் கேரள பாரம்பரிய தோரன், பசளி இலைகள், தேங்காய் துருவல், மிளகாய் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
கேரளா முற்றம் நீளமான பீன்ஸ் தோரன்

தோரன் (மலையாளம்: തോരൻ; ஆங்கிலம்: Thoran) அல்லது உப்பேரி இந்திய மாநிலமான கேரளாவின் வடக்கு பகுதியில் தோன்றிய காய்கறி உணவு வகையாகும்.[1] இந்த உணவு பொதுவாகச் சாதம் மற்றும் கறியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. பாரம்பரிய கேரள சத்யா உணவின் ஓர் பகுதியாக இந்த உணவு உள்ளது.

செய்முறை[தொகு]

தோரன் என்பது பாரம்பரியமாக நறுக்கிய காய்கறிகளான முட்டைக்கோசு, பயற்றம் மற்றும் பட்டாணி வகைகள், பலாக்காய், பாகல் (பாவைக்காய்) அல்லது கருணைக்கிழங்கு, பச்சை அல்லது சிவப்பு கீரை (அரைக்கீரை) சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும். முருங்கை கீரை அல்லது வள்ளல், அல்லது அகத்திக் கீரை போன்ற கீரைகளும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.

நறுக்கிய காய்கறியைத் துருவிய தேங்காய், கடுகு, கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, சூடான பாத்திரத்தில் சிறிது நேரம் கிளறித் தயாரிக்கப்படுகிறது.

புடலங்காய் தோரன்

வகைகள்[தொகு]

கேரளாவில் பாரம்பரியமாகக் கிடைக்காத கேரட், பச்சை அவரை, முட்டைக்கோசு, தக்காளி[2] அல்லது பசளி உள்ளிட்ட கீரைகள் கொண்டும் தோரன் தயாரிக்கலாம். கேரளாவின் தென் பகுதிகளில் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகளில் பூண்டு பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் தற்போது தோரன் தயாரிக்கப் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Media related to Thoran at Wikimedia Commons
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரன்&oldid=3661924" இருந்து மீள்விக்கப்பட்டது