உள்ளடக்கத்துக்குச் செல்

தோரதி ஹேன்சின் ஆன்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரதி ஹேன்சின் ஆன்டர்சன்
பிறப்புமே 15, 1901
ஆஷெவில், வடகரோலினா
இறப்புமார்ச்சு 3, 1963(1963-03-03) (அகவை 61)
நியூயார்க் நகரம்
அறியப்படுவதுநீர்மத் திசுவழற்சியை அடையாளம் கண்டமை
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்மருத்துவர்
நிறுவனங்கள்இரோசெச்டர் பல்கலைக்கழகம்
மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சையாளருக்கான கொலம்பியாப் பல்கலைக் கழகம்
கொலம்பியா பிரஸ்பைடிரியன் மருத்துவ மையம்
ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி
குறிப்பிடத்தக்க விருதுகள்இ. மீட் ஜான்சன் விருது (1939)எலிசபெத் பிளாக்வெல் விருது (1952) தேசிய மகளிர் மன்றம் (2002)

தோரதி ஹேன்சின் ஆன்டர்சன் (Dorothy Hansine Andersen, மே 15, 1901 - மார்ச் 3, 1963) ஓர் அமெரிக்க நோயியல் வல்லுநர் மற்றும் குழந்தை மருத்துவர் ஆவார். நீர்மத் திசுவழற்சி நோயை அடையாளம் கண்டறிந்து அதனைப் பற்றி விவரித்த முதல் அமெரிக்க மருத்துவர் ஆவார்.[1][2] 2001 ஆம் ஆண்டில் அவர் தேசிய மகளிர் மன்றத்தில் உறுப்பினராகச் சேர்க்கப் பெற்றார் .[3]

இளமை

[தொகு]

தோரதி ஹேன்சின் ஆன்டர்சன் மே 15, 1901 இல் வட கரோலினாவின் ஆஷெவில்லெவில் பிறாந்தார். 1914 ஆம் ஆண்டில் அவரது தந்தை ஹான்ஸ் பீட்டர் ஆண்டர்சன் மரணம் அடைந்தார். அவர் நலக்குறைவான தாயைப் பராமரிக்கும் முழு பொறுப்பையும் பெற்றார். 1920 ஆம் ஆண்டில் ஆண்டெர்சனின் தாயாரும் இறந்தார். பின்னர் அவர்கள் வெர்மான்ட்டில் செயிண்ட் ஜான்ஸ்பரி நகருக்கு இடம்பெயர்ந்தனர். 1922 ஆம் ஆண்டில் ஆண்டர்சன் மௌண்ட் ஹோலியோக் கல்லூரியில் இருந்து விலங்கியல் மற்றும் வேதியியல் கலைகளில் பட்டம் பெற்றார். பின்னர், அவர் மருத்துவத்திற்கான ஜான் ஹாப்கின்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் புளோரன்ஸ் ஆர். சபினின் கீழ் ஆய்வு செய்யத் தொடங்கினார். ஆண்டர்சனின் முதல் இரண்டு ஆய்வுத் தாள்கள் பெண் பன்றிகளின் இனப்பெருக்க உறுப்புகளில் நிணநீர் மற்றும் இரத்த நாளங்ள் பற்றியதாக இருந்தன. இந்த இரண்டு ஆவணங்களும் ”முளையவியல் பங்களிப்புகள்” என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டன.[4]

ஜான்ஸ் ஹாப்கின்ஸிலிருந்து பட்டம் பெற்ற பின்னர் ஆண்டெர்சன் இரோசெச்டர் பல்கலைக்கழகமருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.[4] ஒரு வருடம் கழித்து அவர் நியூயார்க்கில் உள்ள ரோச்செஸ்டர் நகரில் உள்ள ஸ்டிராங்க் நினைவு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக ஒரு பயிற்சி பெற்றார்.

ஆஸ்பெர்சன் மருத்துவமனையில் அவரது வேலைவாய்ப்புப் பயிற்சியில் ஓராண்டினை முடித்தபின் அம்மருத்துவமனையானது, ஒரு பெண்ணாக இருந்த காரணத்தால் இவருக்கு உறைவிட அறுவை சிகிச்சையாளராகப் பணியாற்றும் வாய்ப்பினை மறுத்தது.[5] இது 1929 இல் ஆண்டர்சன் தனது ஆய்வினைத் தொடரக் காரணமாக இருந்தது. அதே ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைத் துறையில் நோயியல் உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார். கொலம்பியா மருத்துவக்கல்லூரியில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்ற அழைக்கப்பட்டார்.[4] கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மருத்துவ அறிவியலில், உட்சுரப்பியல் பற்றிய ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.[6]

குறிப்பாக, தொடக்கத்தில் எலிகளின் பாலியல் முதிர்ச்சி மற்றும் விகிதத்தில் நாளமில்லா சுரப்பிகளின் தாக்கங்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தார். 1935 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கொலம்பியா பிரஸ்பைடிரியன் மருத்துவ மையத்தில் பேபிஸ் மருத்துவமனையில் மரணத்தினைக் கண்டறியும் நிபுணராகப் பணியாற்றினார்.[7] ஆண்டர்சன் தனது மருத்துவப் பணியை இறுதிவரை இங்கு தொடர்ந்தார். 1945 ஆம் ஆண்டில், ஆண்டர்ஸ்ஸன் பேபிஸ் மருத்துவமனையில் துணை குழந்தைகள் மருத்துவர் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். உடற்கூறியலில் இவரின் நிபுணத்துவம் காரணமாக, இரண்டாம் உலகப் போரின் போது ஆயுதப் படை நோயியல் நிறுவனத்திற்கு ஆலோசகராக அழைக்கப்பட்டார்.[8] 1952 ஆம் ஆண்டில், பேபிஸ் மருத்துவமனையின் நோயியல் நிபுணர் ஆனார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், டோரதி ஹேன்சின் ஆண்டெர்சன் எலிசபெத் பிளாக்வெல் விருதினைப் பெற்றார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alumnae Featured in the Exhibit பரணிடப்பட்டது 2006-09-01 at the வந்தவழி இயந்திரம்
  2. நேஷனல் மகளிர் ஹால் ஆஃப் ஃபேம்
  3. தேசிய மகளிர் மன்றம் டோரதி எச். ஆண்டர்சன்
  4. 4.0 4.1 4.2 Aydelotte, Allison (February 2000). Andersen, Dorothy Hansine (1901-1963), pediatrician and pathologist. 1. Oxford University Press. doi:10.1093/anb/9780198606697.article.1200018. http://www.anb.org/view/10.1093/anb/9780198606697.001.0001/anb-9780198606697-e-1200018. பார்த்த நாள்: 25 நவம்பர் 2018. 
  5. Machol, Libby (1980). Notable American Women: The Modern Period. United States of America: Radcliffe College.
  6. Windsor, Laura (2002). Women in Medicine: An Encyclopedia. Santa Barbara, California: ABC CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-392-6.
  7. 7.0 7.1 Clague, Stephanie. Spotlight Historical Profile Dorothy Hansine Andersen. பக். 184–185. 
  8. Oakes, Elizabeth. Encyclopedia of World Scientists. New York: Infobase Publishing. pp. 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-6158-7.