தோம்சுக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோம்ஸ்க் ஒப்லாஸ்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தோம்சுக் மாகாணம்
Tomsk Oblast
மாகாணம்
Томская область
தோம்சுக் மாகாணம் Tomsk Oblast-இன் கொடி
கொடி
தோம்சுக் மாகாணம் Tomsk Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்சைபீரியா[1]
பொருளாதாரப் பகுதிமேற்கு சைபீரியா[2]
நிர்வாக மையம்தோம்சுக்
அரசு
 • நிர்வாகம்தோம்சுக் சட்டமன்றம்
 • ஆளுநர்செர்கே சுவாச்கின்[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்3,16,900 km2 (1,22,400 sq mi)
பரப்பளவு தரவரிசை16வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்10,47,394
 • Estimate (2018)[6]10,78,280 (+2.9%)
 • தரவரிசை50th
 • அடர்த்தி3.3/km2 (8.6/sq mi)
 • நகர்ப்புறம்70.2%
 • நாட்டுப்புறம்29.8%
நேர வலயம்[7] (ஒசநே+7)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-TOM
அனுமதி இலக்கத்தகடு70
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.tomsk.gov.ru/

தோம்சுக் மாகாணம் (Tomsk Oblast, உருசியம்: Томская область, தோம்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது மேற்கு சைபீரிய சமவெளியின் தெற்கில் உள்ளது. இது சைபீரிய நடுவண் மாவட்டத்தின் தென்மேற்கில் உள்ள பகுதியாகும். இதன் நிர்வாக மையம் தோம்சுக் ஆகும். மக்கள் தொகை: 1,047,394 (2010 கணக்கெடுப்பு)[5]

இம்மாகாணத்தின் வளர்ச்சி 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கியது. இப்பகுதி 1604இல் நிறுவப்பட்டது. தோம்ஸ்க் மாகாணம் 316.900 சதுர கிலோமீட்டர் (122,400 சதுர கிலோ மீட்டர்) கொண்டது என்றாலும், பெரும்பாலான பகுதிகள் நெருங்க இயலாதவாறு அடைபட்டதாக இருந்தது. ஏனெனில் இப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் தைகா காடுகள், சதுப்பு நிலம் போன்றவை சூழ்ந்து இருந்தன. இந்த ஒப்ளாஸ்ட் கிராஸ்னயார்சுக் பிரதேசம், தியூமென் ஒப்லாஸ்து, ஓம்ஸ்க், நோவசைபிர்ஸ்க் ஓப்லாஸ்து, கெமரோவோ ஓப்லாஸ்து போன்றவை எல்லைகளாக உள்ளன.

வரலாறு[தொகு]

நீண்ட காலத்துக்கு முன்பே சைபீரியா ரஷ்யாவின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. நவீன டாம்ஸ்க் ஒப்லாஸ்து பிரதேசத்தில் சேர்ந்த மக்கள் தைகா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கருதப்படுகிறது. இந்த பிரதேசத்தின் வளர்ச்சி என்பது 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் தொடங்கியது. இப்பகுதியின் மிகப் பழமையான கிராமமான நர்யம் 1596 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மாகாணத்தின் நிர்வாக மையம், டாம்ஸ்க் நகரில் 1604 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

டாம்ஸ்க் ஒப்லாஸ்து கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு , இரும்பு, நிலக்கரி , வனவளம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேற்கு சைபீரியன் காட்டு வளங்களில் சுமார் 20% டாம்ஸ்க் ஒப்லாஸ்தில் அமைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியை தொழில் துறையும், வேளாண்மை 19%, கட்டுமானத்துறை 13% பங்களிக்கிறது. வேதிப்பொருள் மற்றும் எண்ணெய் தொழில்கள் இந்த பகுதியில் நன்கு வளர்ந்துள்ளது. இந்த ஒப்ளாஸ்ட்டின் முதன்மை ஏற்றுமதி பொருட்கள் : எண்ணெய் (62.1%), மெத்தனால் (30.2%), மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் (4.8%).

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த பகுதியின் மக்கள் தொகை: 1,047,394 ஆகும். ( 2010 கணக்கெடுப்பின்படி ); 1,046,039 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ); 1,001,613 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி .) [10] ஒப்ளாஸ்ட் பகுதியில் வாழும் முக்கியாமான இனக்குழுக்கள் [5] ரஷ்யர்கள் (92.1%), உக்ரேனியர -பெலோருசியர் (1.4%), சைபீரிய தடார்கள் (1.7%) வோல்கா ஜெர்மன் . (0.9%) இவர்களல்லாது ஸ்லேவ்கள் , பின்லாந்துக்காரர்கள், ஜேர்மனியர்கள் போன்ற இனக்குழுவினரும் உள்ளனர். 1990 களில் ஏற்பட்ட ஆபத்தான நிலைமைக்கு பிறகு, டாம்ஸ்க் ஒப்லாஸ்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. 2009 இன் முதல் மூன்று மாதங்களில், 3,337 பிறப்புகள் (2008 விட 2.4% அதிகமாக) மற்றும் 3,339 இறப்புகள் (2008 விட 6.7% குறைவாக) இருந்தன.[9]

2008 க்கான பிறப்பு விகிதம் 2007 விட 7.97% அதிகம்.

2012 இன் முக்கிய புள்ளிவிவரங்கள்

  • பிறப்பு: 14 384 (1000 ஒன்றுக்கு 13.6)
  • இறப்பு: 12 632 (1000 ஒன்றுக்கு 11.9) [12]

மொத்த கருத்தரிப்பு விகிதம்:[13]
2009 - 1.54 | 2010 - 1.49 | 2011 - 1.48 | 2012 - 1.55 | 2013 - 1.59 | 2014 - 1.59 (இ)

சமயம்[தொகு]

2012 இன் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி[14] டாம்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 33.3% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர், 4% பொதுவான கிருத்துவர் , 2%கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்துவர்கள், 1% பின்பற்றுகிறது ஸ்லாவிக் நாட்டுப்பற சமயம், 1% இஸ்லாமியர், 0.62% திபெத்திய புத்த மதம் , மற்றும் 0.4% கத்தோலிக்க திருச்சபை . கூடுதலாக, மக்கள் தொகையில் 29% "ஆன்மீக நாட்டம் இல்லாதவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , மற்றும் 13,68% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரு கேள்விக்கு பதில் தராதவர்கள்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official website of Tomsk Oblast. Sergey Anatolyevich Zhvachkin பரணிடப்பட்டது 2012-03-29 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  5. 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  8. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  9. За три месяца в Томской области заключено 1 583 брака - Новости России - ИА REGNUM. Regnum.ru (2009-04-16). Retrieved on 2013-08-20.
  10. Уровень рождаемости в 2008 году в Томской области почти сравнялся с показателями 1990 года - Новости России - ИА REGNUM. Regnum.ru (2009-01-14). Retrieved on 2013-08-20.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
  12. Естественное движение населения в разрезе субъектов Российской Федерации பரணிடப்பட்டது 2013-03-01 at the வந்தவழி இயந்திரம். Gks.ru. Retrieved on 2013-08-20.
  13. Каталог публикаций::Федеральная служба государственной статистики பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம். Gks.ru (2010-05-08). Retrieved on 2013-08-20.
  14. 14.0 14.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோம்சுக்_மாகாணம்&oldid=3559756" இலிருந்து மீள்விக்கப்பட்டது