தோமெய்கைட்டு
தோமெய்கைட்டு Domeykite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆர்சனைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu3As |
இனங்காணல் | |
மோலார் நிறை | 265.56 கி/மோல் |
நிறம் | வெள்ளீய வெண்மை முதல் எஃகு சாம்பல் |
படிக இயல்பு | சிறுநீரக வடிவம், திராட்சைக் கொத்து வடிவம்; பொதி |
படிக அமைப்பு | சமவச்சுக் கனசதுரம் |
பிளப்பு | இல்லை |
விகுவுத் தன்மை | நொறுங்கும் - நேர்த்தியாக |
மோவின் அளவுகோல் வலிமை | 3-3.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருஞ்சாம்பல் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.2 - 8.1, சராசரி = 7.65 |
பிற சிறப்பியல்புகள் | வெளிர் மஞ்சள், வெளிர் பழுப்பு நிறங்களாக மங்கி இறுதியில் வானவில் போல வண்ணங்கள். |
மேற்கோள்கள் | [1][2][3] |
தோமெய்கைட்டு (Domeykite) என்பது Cu3As என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு தாமிர ஆர்சனைடு கனிமம் ஆகும். மிகவும் அரிய இக்கனிமத்தின் படிகங்கள் சமவச்சு படிகத் திட்டத்தில் ஒழுங்கற்ற பொதிகளாக அல்லது திராட்சைக் கொத்து வடிவத்தில் படிகமாகின்றன. வெண்மையான நிறத்திலிருந்து சாம்பல் நிறம் வரையிலான வண்ணங்களில் ஒளிபுகா படிகங்களாக தோமெய்கைட்டு படிகங்கள் உள்ளன. 7.2 முதல் 8.1 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் 3 முதல் 3.5 என்ற கடினத்தன்மையை இப்படிகங்கள் பெற்றுள்ளதாக மோவின் அளவுகோல் மதிப்பும் தெரிவிக்கின்றன [1][3].
1945 ஆம் ஆண்டு முதன்முதலாக சிலி நாட்டின் கோகுயிம்போ என்ற துறைமுக நகரத்தின் அல்கோதோனெசு சுரங்கத்தில் தோமெய்கைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. வில்லெம் ஆய்டிங்கர் போலந்து நாட்டின் கனிமவியலாளரான இஞ்ஞாசி தோமெய்கோவின் பெயரை இக்கனிமத்திற்கு பெயராக வைத்தார் [2].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தோமெய்கைட்டு கனிமத்தை Do[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பயன்கள்
[தொகு]சிறிய அளவில் தாமிரம் பிரித்தெடுக்க இக்கனிமம் பயன்படுகிறது. இதைத் தூய்மைப்படுத்தி பளபளப்பாக்கி அணிகலன்கள் உருவாக்கத்திலும் பயன்படுத்த முடியும் [5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Handbook of Mineralogy - Domeykite" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-09-29.
- ↑ 2.0 2.1 Mindat.org - Domeykite
- ↑ 3.0 3.1 Webmineral data - Domeykite
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "galleries - Domeykite". Archived from the original on 2014-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-09-29.