தோமசு யேற்சு றைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்ணல் தோமசு யேற்சு றைட்டு (Thomas Yates Wright, 1869–1964) ஒரு பிரித்தானியப் பயிர்ச் செய்கையாளராவார். இவர் ஒரு கிரிக்கெட்டு வீரரும் இலங்கையின் சட்டவரைஞருமாக இருந்தார். தேயிலைப் பயிர்ச் செய்கையாளராக இருந்த இவர் இலங்கைச் சட்டவாக்கக் கழகத்திலும் இலங்கைச் செனட் சபையிலும் உறுப்பினராக இருந்தார்..[1]

இங்கிலாந்தில் இலங்கசயரில் பிறந்த றைட் 1889 ஆம் ஆண்டு ஒரு பயிர்ச் செய்கையாளராக இலங்கைக்குச் சென்றார். இவர் கிரிக்கெட்டு, றக்பி காற்பந்து, ஹொக்கி, குழிப்பந்து எனப் பல்வேறு விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினார். கிரிக்கெட்டு விளையாட்டில் மாத்தளை, கண்டி ஆகிய விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் 1893 முதல் 1919 வரையான காலப் பகுதியில் மலைநாட்டுப் பதினொருவர் கழகத்தில் விளையாடினார். இவர் 1890களில் பல்வேறு போட்டிகளில் அகில இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்தார்.[2] இவரே இலங்கை தடகள விளையாட்டுச் சங்கத்தின் நிறுவனத் தலைவராவார்.[3]

1920 முதல் 1925 வரை இலங்கைச் சட்டவாக்கக் கழக உறுப்பினராக இருந்த இவர், 1947 இல் இலங்கைச் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார். மகாக்கந்தை பெருந்தோட்டம் இவருக்குரித்தாயிருந்தது. 1939 ஆம் ஆண்டு அத்தோட்டத்தில் இவர் கட்டியதே கல் மாளிகை எனப்படுகிறது. இவர் 1951 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட நூல் Ceylon in My Time, 1889-1949 (எனது காலத்தில் இலங்கை, 1889-1949) ஆகும்.[4]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமசு_யேற்சு_றைட்டு&oldid=1978599" இருந்து மீள்விக்கப்பட்டது