தோமசு மெயிற்லண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை தேசாதிபதியின் கொடி

சேர் தோமசு மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 17591824), இவர் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை மாறியதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டாவது பிரித்தானிய தேசாதிபதி ஆவார். சார் பிரடெரிக் நோத் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் காலத்திலும் தொடர்ந்தன. அத்துடன் மேலும் சில சீர்த்திருத்தங்கள் இவரால் மேற்கொள்ளப்பட்டன. பிரித்தானிய அரசால் சூலை 19 1805 முதல் மார்ச்சு 19 1811 வரை இவர் பதவியில் இருந்தார்.

முக்கிய சீர்த்திருத்தங்கள்[தொகு]

இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:

  • சிவில் அதிகாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது.
  • சிவில் அதிகாரிகள் 3 தரங்களாகப் பிரிக்கப்பட்டனர்.
  • நீதிபதிகளாக பிரித்தானிய சட்டநூலறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
  • முஸ்லிம் சட்டங்கள் தொகுக்கப்பட்டன.
  • 1811ல் யூரி விசாரணை முறை ஏற்படுத்தப்பட்டது.
  • மாகாணக்கோடுகள் அமைக்கப்பட்டன.
  • சுதேச மக்கள் நலன்கள் மீது கரிசனை காட்டப்பட்டது.

உள்நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை[தொகு]

இலங்கை வரலாற்றில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பல நிர்வாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. சேர் பிரடெரிக் நோத்‎ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் காலத்திலும் தொடர்ந்தன. பிரடெரிக் நோத்‎தைவிட இவரால் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் இலங்கையின் பிற்கால அரசியல் வளர்ச்சியில் ஒரு அடிப்படையை ஏற்படுத்தின. பிரடெரிக் நோத்‎தினால் செயற்படுத்த முடியாது போன திட்டங்களை அவர் செயற்படுத்தி வெற்றிகண்டார். குறிப்பாக உள்நாட்டு மக்களின் நலன்களில் இவர் கரிசனை காட்டியமை ஒரு விசேட அம்சமாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

உசாத்துணை[தொகு]

  • மெண்டிஸ், ஜீ. ஸி. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969
  • பீ. எம். புன்னியாமீன். வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமசு_மெயிற்லண்ட்&oldid=2428001" இருந்து மீள்விக்கப்பட்டது