தோபா எரிமலை வெடிப்பு
தோபா எரிமலை வெடிப்பு | |
---|---|
![]() சிமெயுலுவே தீவுக்கு மேல் 26 மைல்கள் (42 கிமீ) உயரத்தில் இருந்து, வெடிப்பு எப்படி இருந்திருக்கும் எனக் காட்டும் படம். | |
எரிமலை | தோபா பேரெரிமலை |
தேதி | 69,000–77,000 ஆண்டுகளுக்கு முன்பு வெய் VEI = 8.3 |
வகை | அல்ட்ரா பிலினியம் |
அமைவிடம் | சுமாத்திரா, இந்தோனேசியா 2°41′04″N 98°52′32″E / 2.6845°N 98.8756°E |
தாக்கம் | 6 ஆண்டுகள் குளிர்காலம்; மக்கள்தொகைச் சுருக்கநிலை; நில அமைப்பில் மாற்றங்கள் |
![]() தோபா ஏரி வெடிப்பினால் உருவான குழிவு ஏரி. |
தோபா எரிமலை வெடிப்பு (ஆங்கிலம்: Toba eruption அல்லது Youngest Toba eruption; இந்தோனேசியம்: Teori bencana Toba) என்பது, 69,000 - 77,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியா, சுமாத்திரா, தோபா ஏரியின் பகுதியில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்பு (Toba supervolcano) ஆகும். சுமாத்திரா தீவில் மேடான் நகரில் இருந்து 88 கி.மீ. தொலைவில் தோபா ஏரி உள்ளது.
உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புக்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் அடிப்படையில் உருவான தோபா பேரழிவு நிகழ்வு 6-7 ஆண்டுகள் நீடித்தது. இந்த எரிமலை வெடிப்பு உலகளாவிய நிலையில் ஓர் எரிமலைக் குளிர்காலத்தையும் உருவாக்கியது; அத்துடன், 1000 ஆண்டுகள் நீடித்த ஒரு குளிர்வுக் காலகட்டம் உருவாவதற்கு காரணமாகவும் அமைந்தது.
தோபா எரிமலை வெடிப்பு உலகத்தின் தட்பவெப்ப நிலையையே மாற்றி அமைத்தது. அதனால் ஒரு புதிய குளிர்க்காலம் உருவானது. அந்தக் குளிர்க் காலத்திற்கு எரிமலை குளிர்க்காலம் என்று பெயர் (Volcanic Winter). உலகத்தின் வெப்பநிலை 3°C முதல் 5°C வரை குறைந்தது. உயரமான மலைப் பகுதிகளில் 15°C வரை குறைந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி ஏரியில் (Lake Malawi) தோபா எரிமலையின் சாம்பல்கள் இன்றும் மூடி இருக்கின்றன.[1] இருப்பினும் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிக அளவிலான வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது அண்மைய கண்டுபிடிப்புகள் ஆகும்.
எரிமலை வெடிப்பினால் மேடான், அச்சே, பலெம்பாங், பெக்கான்பாரு, லாம்புங், பாடாங் போன்ற நகரங்களில் இருள் மேகங்கள் சூழ்ந்தன. கரும் புகைகள் வானத்தில் பத்து மைல் உயரத்திற்குப் பாய்ந்தன. இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ, இலங்கை, தமிழ்நாடு, தாய்லாந்து, பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் பட்டப் பகலில் நடுநிசி இருள் கவ்விக் கொண்டது.[2][3]
சில நாட்களில் வானத்தில் இருந்து அமில மழை கொட்டியது. அமில மழையினால் பெரிய அளவில் உயிரினங்கள் அழிந்து போயின. பயிர் வகைகள் மீண்டும் பழைய நிலைக்கு உயிர்பெற்று வர பல பத்தாண்டுகள் பிடித்தன. இதில் உருவானது தான் ‘லேக் தோபா’ எனும் தோபா ஏரி (Lake Toba).[4]
பொது
[தொகு]
தோபா ஏரி என்பது உலகின் மிகப் பெரிய எரிமலை ஏரி. 1,700 சதுர கி.மீ. பரப்பளவு; அதாவது 62 மைல் நீளம். 20 மைல் அகலம், 450 மீட்டர் ஆழம். இந்த ஏரி ஒரு மலை உச்சியில் இருக்கிறது. 2,969 அடி உயரத்தில், ஏறக்குறைய 1 கிமீ உயரத்தில் இருக்கிறது.
தோபா எரிமலை வெடிப்பானது ஆறு முதல் பத்து ஆண்டுகள் வரையில் உலகம் முழுமைக்கும் கடும் குளிர்க்காலத்தைத் தோற்றுவித்தது. தவிர 1,000 ஆண்டுகள் வரை புவியில் ஒரு தொடர் குளிர்க்கால அத்தியாயத்தையும் தொடக்கி வைத்தது. கடந்த 25 மில்லியன் ஆண்டுகளில் புவியில் ஏற்பட்ட மிகப் பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்வு ஆகும். அந்தப் பேரழிவு நிகழ்வு உலக மக்களுக்கு மாபெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தியது.[5]
அந்த எரிமலை வெடிப்பு நிகழ்வு உலகளாவிய மக்களின் மரபணு வடிவத்தையும் இன்று வரையில் பாதித்து வருகிறது. அந்த வகையில் அந்த வெடிப்பு மனுக்குலத்தின் மரபணுக்களையே பாதித்து உள்ளது.[5][6] அப்போது ஏற்பட்ட அந்த மரபணு பாதிப்புகள் இன்று வரை; தற்போதைய மனுக்குலத்தையும் பாதித்து வருகிறது என்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.[7]
பதிவுகள்
[தொகு]எரிமலை வெடிப்புகளின் அதிர்வுகளை ’வெய்’ (VEI) எனும் (Volcanic Explosivity Index) முறையில் கணக்கிடுகிறார்கள். தோபா ஏரியில் நடந்த வெடிப்பிற்கு 8 புள்ளிகள் கொடுக்கப்பட்டு உள்ளது.[8] அதுதான் அண்மைய காலம் வரையில் மிக உயர்ந்த குறியீடு. இதற்கு மேல் இதுவரையிலும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 132 மில்லியன் ஆண்டுகளில் சில முறை தான் அப்படிப்பட்ட வெடிப்புகள் பூமியில் நிகழ்ந்து உள்ளன.[2]
ஓர் எரிமலை வெடித்த பின்னர் அதன் வாய்ப் பகுதியில் ஓர் அகன்ற வெளி ஏற்படும். அதற்கு எரிமலைப் பெருவாய் என்று பெயர் (Caldera). பூமிக்கு அடியில் இருக்கும் தீப்பாறைக் குழம்புகள் இந்த வாய்ப் பகுதியின் வழியாக வந்து வெளியே கொட்டி வழியும். தோபா எரிமலை வெடித்த போது 2,800 km3 (670 cu mi) பாறைக் குழம்புகள் (Ignimbrite) வெளியே கொட்டப் பட்டன.[9] அண்மைய ஆய்வுகளின்படி 770 கன மைல்கள் பாறைக் குழம்புகள் கொட்டப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்தப் பாறைக் குழம்புகள் எரிமலையில் இருந்து மேலே எழும்பி வான் முகட்டைத் தொட்டு; அங்கே இருந்து கீழே கொட்டி இருக்கின்றன. இந்தப் பாறைக் குழம்புகள் கீழே பூமிக்கு வரும் போது பெரும்பாலும் தடித்த சாம்பல்களாக விழுந்து இருக்கின்றன. இந்தச் சாம்பல்கள் பெரும்பாலும் உலகின் மேற்குப் பகுதியில் விழுந்து இருக்கின்றன.[10]
பாறைக் குழம்புகள்
[தொகு]தோபா எரிமலையில் இருந்து கீழே வழிந்தோடிய தீக்குழம்புகள், சுமாத்திராவில் ஏறக்குறைய 20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பகுதியைப் பாதித்தன. 600 மீட்டர் உயரத்திற்கு எரிமலைச் சாம்பல்கள் மூடிவிட்டன. தெற்கு ஆசியா முழுமைக்கும் சுமார் 15 செ.மீ (6 அங்குலம்) தடிமனாக ஒரு சாம்பல் அடுக்கு உருவானது. மத்திய இந்தியாவின் ஒரு பகுதியில் தோபா சாம்பல் அடுக்கு இன்று வரையிலும் 6 மீட்டர் (20 அடி) வரை தடிமனாக உள்ளது.[11] அந்த வெடிப்பினால் தீபகற்ப மலேசியாவின் முக்கால்வாசி பகுதிகள் 9 மீ (30 அடி) உயரத்திற்குச் சாம்பல் அடுக்கில் மூழ்கி இருக்கின்றன. இன்றும் அந்தச் சாம்பல் அடுக்கு மலேசியாவை மூடி இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.[12]
இந்த நிகழ்வால் 10,000 மில்லியன் டன் கந்தக அமிலம் அல்லது 6,000 மில்லியன் டன் சல்பர் டை ஆக்சைடு (sulfur dioxide) வாயு, வளிமண்டலத்தில் வெளியேற்றப் பட்டதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.[13]
அதன் பின்னர் அந்த எரிமலையில் ஓர் எரிமலைப் பெருவாய் உருவானது. அந்தப் பெருவாயில் மழை நீர் நிரம்பியது. அந்த வகையில் தோபா ஏரியும் உருவானது. தோபா ஏரியின் மையத்தில் ஒரு தீவு உள்ளது. இந்தத் தீவு மீண்டும் எழுந்த ஒரு குவிமாடத்தால் (Resurgent dome) உருவானது. இவை அனைத்தும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் ஆகும். தோபா ஏரியில் உள்ள தீவின் பெயர் சமோசிர் தீவு (Samosir); சிங்கப்பூரின் பரப்பளவு கொண்டது.
எரிமலை குளிர்க்காலம்
[தொகு]தோபா எரிமலையின் வாய்ப் பகுதிக்கு தோபா பெருவாய் வளாகம் (Toba caldera complex) என்று பெயர். அங்கே நான்கு பெருவாய்கள் உள்ளன. 1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், மானிடவியலாளர் இசுடான்லி ஆம்ப்ரோசு (Stanley H. Ambrose) என்பவர் ஒரு புவியியல் ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.[14]
’தோபா எரிமலை வெடிப்பால் உலகம் முழுமைக்கும் ஓர் எரிமலை குளிர்க்காலம் தூண்டப் பட்டது. எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்கள் தொகை 10,000-இல் இருந்து 30,000 வரை இருக்கலாம். உலக மக்கள் தொகை 2,000 - 20,000 வரை குறைந்தது.[15]
‘இதில் பாதி பேர் தோபா எரிமலை குளிர்க் காலத்தால் இறந்து போய் இருக்கலாம். இதன் விளைவாகத் தான் மக்கள் தொகை சிக்கல் (Population Bottleneck / Genetic Bottleneck) ஏற்பட்டது. அதாவது உலக மக்கள் தொகையில் நெருக்கடியான நிலை அல்லது முட்டுப்பாடு ஏற்பட்டது என்கிறார்.[15] அந்த இடர்பாட்டில் இருந்து தப்பித்த மக்களைக் கொண்டுதான் இப்போதைய உலக மக்கள் தோன்றினர். இந்த வெடிப்பு இரண்டு வாரங்கள் நீடித்து இருக்கலாம்; அதன் பின்னர் வந்த எரிமலைக் குளிர்காலம், உலக வெப்ப நிலையைப் பல ஆண்டுகளாகச் சராசரி 3.0°C செல்சியஸ் முதல் 3.5°C பாகை வரை குறைத்தது என்றும் உறுதிபடுத்தப்படுகிறது.[15]
கிரீன்லாந்து (Greenland) தீவு டென்மார்க் நாட்டின் ஒரு பகுதி. ஆர்க்டிக் வட துருவத்திற்கும்; அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவு. தோபா எரிமலை வெடிப்பினால் இந்தத் தீவில் இருக்கும் பனிக் கட்டிகள், கரிம கார்பன் அளவைக் குறைத்து உள்ளன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.[16]
நுணுக்க ஆய்வுகள்
[தொகு]மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்ட பேரெரிமலை வெடிப்பு தோபா நிகழ்வே ஆகும்.[17][18] 1993-இல் அறிவியல் ஊடகவியலாளர் ஆன் கிப்பன்சு இந்த வெடிப்புக்கும், மனிதகுல வளர்ச்சியின் சுருக்க நிலைக்கும் தொடர்பு உள்ளது என்னும் கருத்தை முன்வைத்தார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் ஆர். ராம்பினோவும்; மனோவாவில் உள்ள அவாய்ப் பல்கலைக்கழகத்தின் இசுட்டீபன் செல்ஃப் என்பவரும் இந்தக் கருத்தை ஆதரித்துள்ளனர். 1998-இல், உர்பானா-சம்பைனில் உள்ள இல்லினோயிசுப் பல்கலைக்கழகத்தின் இசுட்டான்லி எச். அம்புரோசு (Stanley H. Ambrose), மக்கள்தொகைச் சுருக்கக் கோட்பாட்டை (Population bottleneck) மேலும் முன்வைத்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Christine Lane; Chorn, B. T.; Johnson, T. C. (2013). "Ash from the Toba supereruption in Lake Malawi shows no volcanic winter in East Africa at 75 ka". Proceedings of the National Academy of Sciences 110 (20): 8025–8029. doi:10.1073/pnas.1301474110. பப்மெட்:23630269. Bibcode: 2013PNAS..110.8025L.
- ↑ 2.0 2.1 Ninkovich, D.; Sparks, R. S. J.; Ledbetter, M. T. (1978-09-01). "The exceptional magnitude and intensity of the Toba eruption, sumatra: An example of the use of deep-sea tephra layers as a geological tool" (in en). Bulletin Volcanologique 41 (3): 286–298. doi:10.1007/BF02597228. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-0819. Bibcode: 1978BVol...41..286N. https://doi.org/10.1007/BF02597228.
- ↑ Baxter, A. J.; Verschuren, D.; Peterse, F.; Miralles, D. G.; Martin-Jones, C. M.; Maitituerdi, A.; Van der Meeren, T.; Van Daele, M. et al. (2023). "Reversed Holocene temperature–moisture relationship in the Horn of Africa" (in en). Nature 620 (7973): 336–343. doi:10.1038/s41586-023-06272-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:37558848. Bibcode: 2023Natur.620..336B.
- ↑ Storey, Michael; Roberts, Richard G.; Saidin, Mokhtar (2012-11-13). "Astronomically calibrated 40 Ar/ 39 Ar age for the Toba supereruption and global synchronization of late Quaternary records" (in en). Proceedings of the National Academy of Sciences 109 (46): 18684–18688. doi:10.1073/pnas.1208178109. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:23112159. Bibcode: 2012PNAS..10918684S.
- ↑ 5.0 5.1 Polyak, Victor J.; Asmerom, Yemane; Lachniet, Matthew S. (2017-09-01). "Rapid speleothem δ13C change in southwestern North America coincident with Greenland stadial 20 and the Toba (Indonesia) supereruption" (in en). Geology 45 (9): 843–846. doi:10.1130/G39149.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7613. Bibcode: 2017Geo....45..843P. http://pubs.geoscienceworld.org/geology/article/45/9/843/353465/Rapid-speleothem-%CE%B413C-change-in-southwestern-North.
- ↑ Du, Wenjing; Cheng, Hai; Xu, Yao; Yang, Xunlin; Zhang, Pingzhong; Sha, Lijuan; Li, Hanying; Zhu, Xiaoyan et al. (2019). "Timing and structure of the weak Asian Monsoon event about 73,000 years ago". Quaternary Geochronology 53: 101003. doi:10.1016/j.quageo.2019.05.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1871-1014. Bibcode: 2019QuGeo..5301003D.
- ↑ Michael R. Rampino, Stanley H. Ambrose, 2000. |"Volcanic winter in the Garden of Eden: The Toba supereruption and the late Pleistocene human population crash", Volcanic Hazards and Disasters in Human Antiquity, Floyd W. McCoy, Grant Heiken
- ↑ Storey, Michael; Roberts, Richard G.; Saidin, Mokhtar (2012-11-13). "Astronomically calibrated 40 Ar/ 39 Ar age for the Toba supereruption and global synchronization of late Quaternary records" (in en). Proceedings of the National Academy of Sciences 109 (46): 18684–18688. doi:10.1073/pnas.1208178109. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:23112159. Bibcode: 2012PNAS..10918684S.
- ↑ "Supersized eruptions are all the rage!". USGS. 28 April 2005.
- ↑ Chesner, Craig A. (2012). "The Toba Caldera Complex". Quaternary International 258: 5–18. doi:10.1016/j.quaint.2011.09.025. பன்னாட்டுத் தர தொடர் எண்:1040-6182. Bibcode: 2012QuInt.258....5C. http://dx.doi.org/10.1016/j.quaint.2011.09.025.
- ↑ Pattan, J. N; Shane, Phil; Banakar, V. K (1999-03-01). "New occurrence of Youngest Toba Tuff in abyssal sediments of the Central Indian Basin". Marine Geology 155 (3): 243–248. doi:10.1016/S0025-3227(98)00160-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-3227. Bibcode: 1999MGeol.155..243P. https://www.sciencedirect.com/science/article/pii/S0025322798001601.
- ↑ Bühring, Christian; Sarnthein, Michael (2000). "Toba ash layers in the South China Sea: Evidence of contrasting wind directions during eruption ca. 74 ka: Comment and Reply". Geology 28 (11): 1056. doi:10.1130/0091-7613(2000)28<1056:talits>2.0.co;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7613. Bibcode: 2000Geo....28.1056B. http://dx.doi.org/10.1130/0091-7613(2000).
- ↑ Scaillet, Bruno; Luhr, James F.; Carroll, Michael R. (2003), "Petrological and volcanological constraints on volcanic sulfur emissions to the atmosphere", Volcanism and the Earth's Atmosphere, Geophysical Monograph Series, vol. 139, Washington, D. C.: American Geophysical Union, pp. 11–40, doi:10.1029/139gm02, ISBN 0-87590-998-1, retrieved 2024-04-25
- ↑ "Yellowstone Is a Supervolcano?". Biot Reports (Suburban Emergency Management Project) (164). 11 January 2005. http://www.semp.us/publications/biot_reader.php?BiotID=164. பார்த்த நாள்: 21 February 2008.
- ↑ 15.0 15.1 15.2 Gathorne-Hardy, F. J., and Harcourt-Smith, W. E. H., "The super-eruption of Toba, did it cause a human bottleneck?" பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம், Journal of Human Evolution 45 (2003) 227–230.
- ↑ "Supersized eruptions are all the rage!". USGS. 28 April 2005.
- ↑ Chesner & others 1991, p. 200; Jones 2007, p. 174; Oppenheimer 2002, pp. 1593–1594; Ninkovich & others 1978
- ↑ http://www.geo.mtu.edu/~raman/VBigIdeas/Supereruptions_files/Super-eruptionsGeolSocLon.pdf
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- Ambrose, Stanley H. (1998). "Late Pleistocene human population bottlenecks, volcanic winter, and differentiation of modern humans". Journal of Human Evolution 34 (6): 623–651. doi:10.1006/jhev.1998.0219. பப்மெட்:9650103. http://www.bradshawfoundation.com/stanley_ambrose.php.
- Felsenstein, J (April 1992), "Estimating effective population size from samples of sequences: inefficiency of pairwise and segregating sites as compared to phylogenetic estimates", Genet. Res., 59 (2): 139–47, PMID 1628818
- Gibbons, Ann (1 October 1993). "Pleistocene Population Explosions". Science 262 (5130): 27–28. doi:10.1126/science.262.5130.27. பப்மெட்:17742951. Bibcode: 1993Sci...262...27G. http://www.sciencemag.org/cgi/pdf_extract/262/5130/27.
- Goldberg, T.L. (1996). Genetics and biogeography of East African chimpanzees (Pan troglodytes schweinfurthii). Harvard University, unpublished PhD Thesis.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link)
- Linz, B.; et al. (February 2007). "An African origin for the intimate association between humans and Helicobacter pylori". Nature 445 (7130): 915–8. பப்மெட்:17287725. Bibcode: 2007Natur.445..915L.
- Loewe, L; Scherer First1 = S, Siegfried (November 1997), "Mitochondrial Eve: The Plot Thickens", Trends in Ecology & Evolution, 12 (11): 422–3
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link)
- Luo, S.-J.; J.-H. Kim, W.E. Johnson,4 J. Van der Walt,5 J. Martenson,6 N. Yuhid,7 D.G. Miquelle,8 O. Uphyrkina,9 J.M. Goodrich,10 H.B. Quigley,11 R. Tilson,12 G. Brady,13 P. Martelli,14 V. Subramaniam,15 C. McDougal,16 S. Hean,17 S.-Q. Huang,18 W. Pan,19 U.K. Karanth,20 M. Sunquist,21 J.L.D. Smith,22 S.J. O'Brien (2004). "Phylogeography and genetic ancestry of tigers (Panthera tigris)". PLoS Biology 2 (12): 2275–2293. பப்மெட்:15583716.
- Maca-Meyer, N; González, AM; Larruga, JM; Flores, C; Cabrera, VM (2001), "Major genomic mitochondrial lineages delineate early human expansions", BMC Genet., 2: 13, PMC 55343, PMID 11553319
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் தோபா எரிமலை வெடிப்பு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Population Bottlenecks and Volcanic Winter
- "Toba Volcano by George Weber". Archived from the original on ஏப்ரல் 22, 2011. Retrieved சூன் 1, 2006.
- "The proper study of mankind" – Article in தி எக்கனாமிஸ்ட்
- Homepage of Professor Stanley H. Ambrose, including bibliographic information on the two papers he has published on the Toba catastrophe theory
- Mount Toba: Late Pleistocene human population bottlenecks, volcanic winter, and differentiation of modern humans by Professor Stanley H. Ambrose, Department of Anthropology, University Of Illinois, Urbana, USA; Extract from "Journal of Human Evolution" [1998] 34, 623–651
- Journey of Mankind by The Bradshaw Foundation – includes discussion on Toba eruption, DNA and human migrations